என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு பிடிபட்டது"

    • அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
    • தின்பண்டங்கள் தயாரிக்கும் அடுப்பு உள்ளது.

    அரவேணு,

    கோத்தகிரி காவலர் குடியிருப்பு பகுதி அருகே தனியார் பேக்கரிக்கு சொந்தமான தின்பண்டங்கள் தயாரிக்கும் அடுப்பு உள்ளது. அங்கு அடுப்பின் மேல் பகுதியில் பாம்பு ஒன்று இருப்பதாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கருப்புசாமி, தீயணைப்பு வீரர்கள் நித்தியானந்தன்,விஜய்க்குமார், மணி, முத்துகுமார் , கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்ேபாது 10 அடி நீள பாம்பு அங்கு இருந்தது. அதனை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    • கால்வாய் பணியின்போது சிக்கியது
    • வனத்துறையினர் காட்டில் விட்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    கடந்த 5-மாத காலமாக கீழ்பென்னாத்தூரில் சாலையோர கால்வாய் அகலப்படுத்தும் பணிகள் பகுதிவாரியாக நடைபெற்று வருகின்றன.

    நேற்று மதியம் 2 மணி அளவில் பஸ் நிலையம் அருகே உள்ள மளிகை கடைபகுதியின் முன்பாக கால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

    அப்போது சுமார் 10 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று காணப்பட்டது. உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டு, கீழ் பென்னாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதனை அடுத்து தீயணைப்பு மற்றும்மீட்பு பணி வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து பாம்பை உயிருடன் பிடித்தனர். பிடிப்பட்ட பாம்பை வனத்துறையினர் காட்டில் கொண்டு போய் விட்டனர்.

    • ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்
    • பொன்னூர் காப்பு காட்டில் விடப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 6 அடி நீல சாரை பம்பு பிடிபட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மக்களை அச்சுறுத்தி வந்த 6 அடி நீளம் சாரை பாம்பு பிடிபட்டது.

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெரேசாபெரியநாயகம். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவரது வீட்டில் 6 நீள சாரை பாம்பு புகுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீல சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பொன்னூர் காப்பு காட்டில் விட்டனர்.

    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளைம் ராகவேந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 43).

    இவரது வீட்டில் நேற்று சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறியடித்துகொண்டு வெளியே ஓடிவந்தனர். ேமலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில், சம்பவம் இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    மீட்கப்பட்ட பாம்பை ஒடுகத்தூர் அருகே உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் பத்திரமாக விட்டனர்.

    • திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • பிடிபட்ட 2 பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்சுமி நிவாசம் என்ற விருந்தினர் மாளிகை உள்ளது. தரிசனத்திற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் இந்த விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு லட்சுமி நிவாசம் விருந்தினர் மாளிகைக்குள் 8 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட விருந்தினர் மாளிகை ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்தார்.

    அதே நேரத்தில் பாலாஜி நகரில் உள்ள குடியிருப்பில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாலாஜி நாயுடு சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்தார்.

    பிடிபட்ட 2 பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. 

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்புக் காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே நேற்று இரவு சுமார் 15 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.

    • வனத்துறையினர் மீட்டனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றிப்பார்ப்பதற்க்காக நேற்று இரவு சென்றுள்ளார்.

    சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தட்சிணா மூர்த்தி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விவசாய நிலத்தில் இருந்த சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.
    • தீயணைப்புத்துைறயினர் பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே இரண்டு பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

    நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 27) இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மாலை 2 பாம்புகள் பின்னி விளையாடி க்கொண்டிருந்தன. இதனை கண்ட பூபதி உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது 2 பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்ததை கண்டு சுமார் அரை மணி நேரம் காத்திருந்தனர். அதன் பிறகு பாம்புகள் தனித்தனியாக பிரிந்து சென்றது. பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பு பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

    மேலும் அப்பகுதி இளைஞர்கள் இரண்டு பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    ×