search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அட்டை"

    • ரேசன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பேர் பயன் பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் தமிழ்நாட் டில் செயல்படுத்தப்பட்டு வருவதால், உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.

    ரேசன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என்று கடைக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர்.


    இதில் சிலர் மட்டும்தான் கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். இன்னும் ஏராளமானோர் கைவிரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது ரேஷன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் ரேசன் பொருளை முழுமையாக தர மாட்டோம். குறைத்து விடுவோம் என்று கராராக இப்போது கூறி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி விரல் ரேகை வைக்காத உறுப்பினரின் பெயரை ரேசன் அட்டையில் இருந்து எடுத்து விடுவோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். வீட்டில் உள்ள வயதானவர்களை எப்படி ரேசன் கடைக்கு அழைத்து செல்வது, ஆஸ்பத்திரியில் இருப்பவர்களை ஆம்புலன்சில் கொண்டு வந்தா விரல் ரேகையை பதிவு செய்ய முடியும் என்று ரேசன் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.

    பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு இப்போது விளக்கம் அளித்து உள்ளது.

    இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு தொடர்பாக மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சமயத்தில் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை முடிக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

    * நியாய விலை கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களது கைவிரல் ரேகை வைக்கப்படும் போது ஆவணங்கள் ஏதும் கோரக் கூடாது.


    * குடும்ப அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை வழங்கப்படக் கூடாது.

    * குடும்ப அட்டைதாரர்களின் வசதியின்படி, நியாய விலை கடைக்கு வருகை தந்து கை விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தி நியாயவிலை கடைக்கு வர வழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.

    நியாய விலை கடையில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களது வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கை விரல் ரேகை வைக்கும் பணியினை முடிக்கலாம்.

    மேற்கூறியவாறு, அறிவுரைகளை பின்பற்றி கை விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறுகள் இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் முடிக்கப்பட நியாய விலை கடை பணியாளர்களை அறிவுறுத்துமாறும் அப்பணியினை மேற்பார்வையிட சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்து மாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த உத்தரவின் நகல் ரேசன் கடைகளின் உயர் அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • அடிப்படை வசதி இல்லாததால் ரேசன் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்தினர்.
    • ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் ஊராட்சி ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேசன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள காணிக் கூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்றும் வாங்கி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ரேசன் பொருட்களை கொடுக்கா மல் கைரேகையை மட்டும் வாங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் போட வேண்டிய ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் பொதுமக்கள் தங்கள் ரேசன் அட்டைகளை சாலை யில் வீசி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஒச்சத்தேவன் கோட்டை கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்கு நிறுத்தப்பட்ட ரேசன் பொருட்களை மீண்டும் விநியோகம் செய்ய வேண்டும். எங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கா மல் காலம் தாழ்த்திய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்காத பட்சத்தில் ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • கட்டணமாக மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்

    ராணிப்பேட்டை:

    புதிய மின்னணு அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலகங்கள், உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல் அலுவலகங்கள் மூலமாக பயனாளிகள் பெற்று வருகின்றனர்.

    உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டும், நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும், இந்திய தபால் துறையின் மூலம் பயனாளிகளின் இருப்பி டத்திற்கு, பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படுகிறது.

    புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டையினை தங்களின் இருப்பிடத்திலலேயே பெற விருப்பம் தெரிவிக்கும் பயனாளி களிடம் அஞ்சல் கட்டணம் வசூலித்து நகல் ரேசன் அட்டைகள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பயனாளி கள் புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டைக்கு விண்ணப்பி க்கும் போது ரேசன் அட்டையினை தபாலில் பெற விரும்புகிறாரா அல்லது நேரில் பெற விரும்புகிறாரா என விருப்பம் தெரிவிக்க www.tnpds.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தின் பேரில் பயனாளிக்கு தபால் மூலம் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

    இதற்கான தபால் கட்டணம் புதிய ரேசன் அட்டைக்கு ரூ.25ம், நகல் அட்டைக்கு கட்டணம் ரூ.20, தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும். அஞ்சல் வழியாக பெற விருப்பம் இல்லாத நபர்களுக்கு தற்போதைய நடைமுறைப்படியே குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 210 பயனாளிகள் ரேசன் அட்டையில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது அஞ்சல் வழியாகவே புதிய திருத்தம் செய்யப்பட்ட மின்னணு நகல் அட்டையினை பெற விருப்பம் தெரிவித்து கட்டணம் செலுத்தி இருந்தனர். அவர்களுக்கான புதிய மின்னணு அட்டைகள் வரப்பெற்று தபால் அலுவலகம் வாயிலாக பயனாளிகளின் முகவரிக்கு அனுப்பும் நடைமுறையினை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, தபால் துறை விற்பனை மேலாளர் இலியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை.
    • வங்கிகளில் ’ஜீரோ பாலன்ஸ்’ வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்'கணக்கை தொடங்க வேண்டும்.

    அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு குறைதீர் நாள் முகாம் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • நாமக்கல், ராசிபுரம், மோகனூர், குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், கைபேசி எண் பதிவு, புதிய குடும்ப அட்டை கோருதல், மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், முகாமில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்குமாறும், அதாவது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதலை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×