என் மலர்
திருப்பத்தூர் - Page 2
- விவசாய நிலத்தில் திடீரென அதிக சத்தத்துடன் 40 அடி ஆழம் மற்றும் 15 அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு நிலம் உள்வாங்கியது.
- பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சி கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மலையடிவாரத்தில் உள்ளது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
வழக்கம்போல விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக முருகேசன் நேற்று சென்றார்.
அப்போது, விவசாய நிலத்தில் திடீரென அதிக சத்தத்துடன் 40 அடி ஆழம் மற்றும் 15 அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு நிலம் உள்வாங்கியது. அதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து அதன் அருகே சென்றார். அப்போது பெரும் சத்தத்துடன் நிலம் மேலும் உள்வாங்கியது.
இதனைக் கண்டு விவசாயி மற்றும் அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து ஆலங்காயம் தீயணைப்பு மீட்பு படையினர், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாய நிலத்தில் பார்வையிட்டனர்.
பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன் பின்னரே நிலம் உள்வாங்கியதற்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சீட்டு கட்டி ஏமாற்றப்பட்டதாக புகார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து வந்த சுமார் 20 மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஓரு வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்குள்ள மகள் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் கடந்த பல ஆண்டுகளாக சீட்டு கட்டி ஏமாந்ததாக முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
- பொது தேர்வால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
- வியாபாரிகள், விவசாயிகள் வருமானமின்றி சிரமம்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலை 14 கிராமங்கள் கொண்டு நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு பசுமையாக காணப்படுகிறது.
இது பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் அருகில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுகள், செல்ஃபி பார்க், பறவைகள் சரணாலயம், சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீ கதவ நாச்சியம்மன், நிலாவூர் ஏரி, ஆகியவை ஏலகிரி மலையில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இந்நிலையில் கோடைக்கால துவங்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொது தேர்வு நடைப்பெற்று கொண்டு இருக்கும் நிலையிலும் மேலும் மழையின் காரணமாக ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.
இதனால் வார விடுமுறையான நேற்று மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஏலகிரி மலையில் விவசாயிகளும், வியாபாரிகளும் வருமானமின்றி சிரமத்திற்குள்ளாகினர்.
- 30 லிட்டர் பறிமுதல்
- ஜெயிலில் அடைப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பி.கஸ்பா பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த 55 வயது ெபண் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இேதபோல் ஆம்பூர் நியூ காக்கிதா பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவரையும் வாலிபர் ஒருவரையும் சாராயம் விற்பனை செய்த போது போலீசார் பிடித்து அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ேபாலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களையும் வாலிபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஆபத்தான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு
- விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கத்தாரி செல்லும் சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் வழியாக மல்ல குண்டா, கத்தாரி. பள்ளத்தூர். மணியாகர்வட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் இவ்வழியாகதான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் தரைப்பாலம் சேதம் அடைந்தது.
எனவே இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு ஆபத்தான நிலையில் கடந்த செல்கின்றனர்.
தரைப்பாலத்தை சீர மைக்க அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உடைந்த தரை பாலத்தின் பள்ளத்தில் இறங்கி நின்று பாலத்தை சீரமைக்கவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
- 10 கிலோ பறிமுதல்
ஆம்பூர்:
ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர் சிக்னலில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர்.
விசாரணையில், தர்மபுரி மாவட்டம் ராமகுண்டா அள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 51), ராஜா தோப்பு பகு தியை சேர்ந்த சிவா (வயது 33) என்பதும், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ஒரு சாக்கு பையில் 10 கிலோ எடையுள்ள மான் கறியை தர்மபுரி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்ப டைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மான் கறி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆம்பூர் அருகே மாராப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன். முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் ஏ.டி.எஸ்.பி. அனைத்து சப் டிவிஷன் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர் கள் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசாருக்கு திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன்.
பரிந்துரையின்படி வேலுர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
- பதிவேடுகளை பார்வையிட்டு சோதனை நடத்தினார்
- நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பு முறிவு, உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்து வமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று செல்லும் புறநோயாளி களிடம் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவி உடல் நலம் விசாரித்து காலதாமதமாக இல்லாமல் உடனடியாக சிகிச்சை அளித்து விரைவில் பள்ளி அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் பிறகு புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.
மேலும் இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் கார்த்திகேயன், சாந்தினி சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- பாதுகாப்பு குறித்து சோதனை
- அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் கலைஞர் கருணாநிதி தெரு பகுதியில் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திருவிழாக்கள் சித்திரை மாதம் நடைபெறுவது யொட்டி அதற்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் தலைமையில் பாதுகாப்பு குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மேற்படி பட்டாசு தயாரிக்கும் அறைகளில் மின் இணைப்பு ஏதும் இல்லை. அனைத்து அறைகளும் நான்கு நுழைவுகள் உடன் நல்ல காற்றோட்டத்துடன் தீயணைப்பான் கருவியும் வைக்கப்பட்டு நல்ல பாதுகாப்பான முறையில் உள்ளன.
மேலும் பட்டாசு தயாரிக்கும் இடத்தில் இருந்து சுற்றி சுமார் 600 மீட்டர் சுற்றளவில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமில்லை என தெரிய வந்தது.
ஆய்வின் போது நாட்டறம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, மற்றும் கிராம உதவியாளர் வரதராஜ் உள்பட வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.
- தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் நேற்று திடீரென ஒரு மொபட்டில் தீ பற்றியது. மளமளவென எரிந்து மொபட் முழுவதும் பரவியது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீய ணைப்பு வீரர்கள் வந்தனர்.
ஆனால் தீயணைப்பு வாகனம் அந்த சிறிய தெருவில் செல்ல முடியாததால் தீயணைப்பு துறையினர் மண் மூலம் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துர்நாற்றம் வீசுவதாக புகார்
- போலீசார் பேச்சுவார்த்தை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் வெங்களாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான நீர்நிலை பகுதி உள்ளது.
இந்த பகுதியில் நகராட்சி சார்பில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் ஏற்பட்டு பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளது என கூறி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் குப்பை மேட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி நிர்வாகத்திடம் பேசியதை தொடர்ந்து குப்பைகள் வாரப்படும். என உறுதியளித்தனர். அதனைதொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.