search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகசிய தகவல்"

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பால்னாங்குப்பம் அருகே அரசு மது பாட்டிலை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    பால்னாங்குப்பம் பெருமாள் வட்டத்தை சேர்ந்த புகழேந்தி மனைவி பிரியா (வயது 34) தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    • திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை அரக்குக்கடை அருகில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, பேட்டை மெயின்சாலையைச்சேர்ந்த ராஜசேகரன் (வயது 42) என்பவரை பிடித்து சோத னைச் செய்தனர். அப்போது, சிலருக்கு செல்போன் மூலம் 3 எண் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணையில், அதனை அவர் ஒப்புகொண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், திருநள்ளாறு சுரக்குடி சந்திப்பில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, சுரக்குடி சித்ரா காலனியைச்சேர்ந்த குமார் (48) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, சிலருக்கு செல்போன் மூலம் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணை யில், அதனை அவர் ஒப்புகொ ண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • பண்ருட்டி அருகே மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயன்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி தென் பெண்ணை ஆற்று பகுதியில் லாரியில் மணல் கடத்துவதாக புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தனிபிரிவு ஏட்டு ஜனார்த்தனன் ஆகி யோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அவியனூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவி (வயது 40) என்பதும், ஆற்று மணலை திருடி விற்று வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • சோதனை செய்த போது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.
    • பட்டாசுகளை வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் தங்கதுரைக்கு சொந்தமான கடையில் அனுமதி இன்றி பட்டாசு பெட்டி வைத்திருப்பதாக திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதை யடுத்து திண்டிவனம் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பட்டாசு கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, பட்டாசுகளை எந்த முறையில் அனுமதி இல்லாமல் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தெரிவித்தார்.மேலும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பகண்டை கூட்டு ரோடு அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அவிரியூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு போலீசாருக்கு அவிரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் அவிரியூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது எகால் கிராமத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 45) என்பவர் அவரது நிலத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் ஜான் பீட்டரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து 75 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வரகூர் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த வர கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் (வயது 53) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாரயம் விற்பனை செய்வ தாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலை மையிலான போலீசார் வரகூர் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீரன் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. போலீ சார் வீரனை கைது செய்து, அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • வீட்டு வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கீரப்பாளையத்தை சேர்ந்த ராம்சிங் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த அம்மாப்பேட்டை சாரதா ராம் நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வனஜா தலைமை யிலான போலீசார் விரைந்து சென்றனர் அங்கு ஒரு பெண் விப சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த உமாமகேஸ்வரி (வயது 42) என்பது தெரியவந்தது.

    இவருக்கு வீட்டில் சமையல் வேலை வாங்கித் தருவதாக கூறி, அம்மாப் பேட்டையை சேர்ந்த திவ்யா (35), பெருமாத்தூரை சேர்ந்த சவுகத்அலி (54), கீரப்பாளையத்தை சேர்ந்த ராம்சிங் (32) ஆகியோர் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர். இங்கு அவரை மிரட்டி விப சாரத்தில் ஈடுபடுத்தியதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உமாமகேஸ் வரியை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்
    • பூட்டு உடைத்து ஆய்வு மேற்கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு, நாட்டறம்பள்ளி பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஆத்தூர்குப்பம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் பூட்டி இருந்த குடோனை, பூட்டு உடைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தடை செய்யப்பட்ட சுமார் 1 டன் எடை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோனை, கேத்தாண்டப்பட்டியை சேர்ந்த ராஜூ என்கிற பூவரசன் ( வயது 30) மற்றும் அவரது தம்பி பொன்னரசன் ( 25) ஆகியோர் வாடகை எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பொன்னரசனை கைது செய்த போலீசார், அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து நாட்டியம் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பூவரசனை தேடி வருகின்றனர்.

    • மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

    அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜா என்கிற ஜான்பீட்டர் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்பீட்டரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை சத்யா தெருவில் மணிகண்டன் (வயது 22), அவருடன் ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மணிகண்டனை சிறையில் அடைத்தனர். சிறுவனை அங்குள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த ஐபேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந் தம், சப்- இன்ஸ்பெக்டர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட் புதரில் 2 பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமி ருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • திட்டக்குடி அருகே வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • டி.எஸ்.பி., காவியாவுக்கு இரவு 9 மணி அளவில் ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்காவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே பரமசிவம் என்பவர் வீட்டு வராண்டாவில் வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி 100 கிலோ எடையுள்ள மூட்டைகள் 42, 50 கிலோ எடையுள்ள மூட்டைகள் 55 என தனித்தனியாக அடிக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திட்டக்குடி டி.எஸ்.பி., காவியாவுக்கு இரவு 9 மணி அளவில் ரகசிய தகவல் கிடைத்து. இது குறித்து அவர் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு வீட்டு வராண்டாவில் அடிக்கடி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர் . வீட்டின் உரிமை யாளர் பரமசிவம் தலைம றைவானதால் இது குறித்து வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை உணவு பாதுகாப்பு துறை வழங்கல் துறையிடம் ஒப்படைத்தனர்.

    ×