கஞ்சா விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜா என்கிற ஜான்பீட்டர் (வயது 22) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்பீட்டரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com