திண்டிவனத்தில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த கடைக்கு சீல்: திண்டிவனம் டி.எஸ்.பி.அதிரடி நடவடிக்கை

சோதனை செய்த போது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.பட்டாசுகளை வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பட்டாசு கடைக்கு சீல் வைத்த காட்சி.
பட்டாசு கடைக்கு சீல் வைத்த காட்சி.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் தங்கதுரைக்கு சொந்தமான கடையில் அனுமதி இன்றி பட்டாசு பெட்டி வைத்திருப்பதாக திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதை யடுத்து திண்டிவனம் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பட்டாசு கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, பட்டாசுகளை எந்த முறையில் அனுமதி இல்லாமல் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தெரிவித்தார்.மேலும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com