search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்லோகம்"

    • அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது.
    • சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.

    நமது வேதங்கள் பஞ்சபூதங்களை இறைவனின் அம்சமாக கருதின. அதில் எத்தகைய தீமையாலும் மாசு பெறாத நெருப்பு எனும் அக்னியை மிகவும் உயர்ந்ததாக போற்றினர். அந்த அக்னி பகவானின் அம்சத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் சூரிய பகவானை தினந்தோறும் போற்றினர். நாம் அனைவருமே வாழ்வதற்காக பல வேலைகளை செய்கிறோம். அவற்றில் வேலையிடங்களில் பலருக்கு பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றை நீக்குவதற்கான ஸ்ரீ அக்னி சூரிய மந்திரம் இதோ.

    ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம்

    ஓம் பூர் புவ ஸூவஹா அக்னயே ஜாதவேத

    இஹாவஹா சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா

    அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தின் சிறப்பான பலனை பெற ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசை தினத்தில் சுத்தமான விளக்கேற்றி, அதற்கு முன்பாக கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து உங்கள் குரு, குலதெய்வம் ஆகியோர்களை மானசீகமாக வணங்கி 1008 முறை இம்மந்திரம் துதித்து உரு ஜெபிக்க வேலை, தொழில், வியாபார இடங்களில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் அமைய பெற்றவர்கள் நன்மையான பலன்களை பெறுவார்கள், நெருப்பினால் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கும்.

    பஞ்சபூதங்களில் ஒன்றானதும், இறைத்தன்மை உடையதாகவும் கருதப்படுவது நெருப்பு ஆகும். இந்த நெருப்பை வேத காலங்களில் அக்னி பகவானாக நமது முன்னோர்கள் வழிபட்டனர். ஒரு இடத்தில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீங்கி, நன்மையான சக்திகள் அங்கு நிறையவே அக்காலங்களில் யாகங்கள் அதிகம் செய்து அக்னி பகவானின் அருளாசிகள் பெற்றனர். அக்னி தன்மையை கொண்ட சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி விரைவில் பலன் தெரியும்.
    • பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை மட்டும் கூட செய்யலாம்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குத்து விளக்கை தேய்த்து குங்குமம், பூ வைத்து கோலம் போட்ட பலகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து,

    ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாதமாயே

    மகாயோகின்யை ஈஸ்வரி

    நந்த கோப ஸுதம் தேவி

    பதிம்தே குருவே நமஹ

    என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால், விரும்பிய வரன் தானாகவே அமைந்து விரைவில் திருமணம் நடக்கும்.

    இதை தினமும் செய்தாலும் நல்லது. முடியாவிட்டால் பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை மட்டும் கூட செய்யலாம். முடிந்தால் நைவேத்தியமும் செய்யலாம்.

    • தினமும் நவக்கிரகத்தில் உள்ள கேதுபகவானை தரிசிப்பது நல்லது.
    • சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.

    தினம் அதிகாலையில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டு, அதன்பிறகு நவக்கிரகத்தில் உள்ள கேதுபகவானை தரிசிப்பது நல்லது. கேதுவிற்குரிய கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபடுவதன் மூலம் சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.

    ஞானம் வழங்கும் நல்லதோர் கேதுவே!

    காணும் தொழில்களில் கனதனம் தருவாய்!

    அல்லியில் சிகப்பும், அழகு வைடூர்யமும்

    உள்ளம் மகிழ உந்தனுக் களிப்பார்!

    கொள்ளாம் தான்யம் குணமுடன் வழங்கினால்

    எல்லா நலங்களும் ஏற்றிடச் செய்வாய்!

    வல்லமை பெற்றிட வாழ்வில் சுகம்பெற

    நல்லவன் கேது நலமெலாம் தருக!

    • குலதெய்வத்தின் அருள் இருந்தால் எந்த பிரச்சனைகளும் நம்மை அண்டாது.
    • கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    'ஓம் பவாய நம,

    ஓம் சர்வாய நம,

    ஓம் ருத்ராய நம,

    ஓம் பசுபதே நம,

    ஓம் உக்ராய நம,

    ஓம் மஹாதேவாய நம,

    ஓம் பீமாய நம,

    ஓம் ஈசாய நம'

    என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.

    • நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம்.
    • நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன.

    சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர்.

    நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.

    சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார்.

    நந்திகேசி மஹாயாக

    சிவதயா நபராயண கௌரீ

    சங்கரஸேவர்த்தம்

    அனுக்ராம் தாதுமாஹஸ

    என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.

    • கேது பகவானுக்கு உரிய பாடல் இது.
    • தினமும் இந்த பாடலை பாடினால் சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.

    கேதுவிற்குரிய கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபடுவதன் மூலம் சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.

    ஞானம் வழங்கும் நல்லதோர் கேதுவே!

    காணும் தொழில்களில் கனதனம் தருவாய்!

    அல்லியில் சிகப்பும், அழகு வைடூர்யமும்

    உள்ளம் மகிழ உந்தனுக் களிப்பார்!

    கொள்ளாம் தான்யம் குணமுடன் வழங்கினால்

    எல்லா நலங்களும் ஏற்றிடச் செய்வாய்!

    வல்லமை பெற்றிட வாழ்வில் சுகம்பெற

    நல்லவன் கேது நலமெலாம் தருக!

    • இன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
    • துன்பங்களில் இருந்து விடை பெற்று நல்வாழ்வு அடைவீர்கள்.

    அனுமன் ஜெயந்தியான இன்று அனுமனுக்கு உகந்த இந்த போற்றி சொல்லி வழிபாடு செய்வது வாழ்வில் மேன்மை அடைய உதவும். துன்பத்திலிருந்து நீங்க ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது ஆஞ்சநேயருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் சொல்லி வர உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும். துன்பங்களில் இருந்து விடை பெற்று நல்வாழ்வு அடைவீர்கள்.

    1. ஓம் அனுமனே போற்றி

    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    3. ஓம் அறக்காவலனே போற்றி

    4. ஓம் அவதார புருஷனே போற்றி

    5. ஓம் அறிஞனே போற்றி

    6. ஓம் அடக்கவடிவே போற்றி

    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி

    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி

    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி

    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி

    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி

    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி

    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி

    15. ஓம் இசை ஞானியே போற்றி

    16. ஓம் இறை வடிவே போற்றி

    17. ஓம் ஒப்பிலானே போற்றி

    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி

    19. ஓம் கதாயுதனே போற்றி

    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி

    22. ஓம் கர்மயோகியே போற்றி

    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி

    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி

    25. ஓம் கடல் தாவியவனே போற்றி

    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி

    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி

    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி

    29. ஓம் கூப்பிய கரனே போற்றி

    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி

    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி

    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி

    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி

    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி

    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி

    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி

    39. ஓம் சூராதி சூரனே போற்றி

    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி

    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி

    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி

    44. ஓம் சோக நாசகனே போற்றி

    45. ஓம் தவயோகியே போற்றி

    46. ஓம் தத்துவஞானியே போற்றி

    47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி

    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி

    49. ஓம் தீதழிப்பவனே போற்றி

    50. ஓம் தீயும் சுடானே போற்றி

    51. ஓம் நரஹரியானவனே போற்றி

    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி

    53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி

    54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி

    55. ஓம் பண்டிதனே போற்றி

    56. ஓம் பஞ்சமுகனே போற்றி

    57. ஓம் பக்தி வடிவனே போற்றி

    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி

    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி

    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி

    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி

    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி

    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி

    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

    66. ஓம் பீம சோதரனே போற்றி

    67. ஓம் புலனை வென்றவனே போற்றி

    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி

    69. ஓம் புண்ணியனே போற்றி

    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி

    71. ஓம் மதி மந்திரியே போற்றி

    72. ஓம் மனோவேகனே போற்றி

    73. ஓம் மாவீரனே போற்றி

    74. ஓம் மாருதியே போற்றி

    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி

    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி

    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி

    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி

    79. ஓம் ராமதாசனே போற்றி

    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி

    81. ஓம் ராமதூதனே போற்றி

    82. ஓம் ராம சோதரனே போற்றி

    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி

    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி

    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி

    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி

    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி

    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி

    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி

    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி

    93. ஓம் லங்கா தகனனே போற்றி

    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி

    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி

    96. ஓம் வாயுகுமாரனே போற்றி

    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி

    99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி

    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி

    101. ஓம் விஸ்வரூபனே போற்றி

    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி

    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி

    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி

    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி

    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி

    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி

    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

    • ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் இந்த போற்றியை சொல்வது நல்லது.
    • தினமும் சொல்ல வேண்டிய 108 போற்றி இது.

    1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா

    2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

    3. ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா

    4. ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

    5. ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா

    6. ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    7. ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா

    8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    10. ஓம் ஈடில்லாத தெய்வமே சரணம் ஐயப்பா

    11. ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    12. ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

    13. ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா

    14. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

    15. ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    16. ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    17. ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

    18. ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    19. ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    20. ஓம் ஒப்பில்லாத திருமணியே சரணம் ஐயப்பா

    21. ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    22. ஓம் ஓங்கார பரம்பொருளே சரணம் ஐயப்பா

    23. ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    24. ஓம் ஔதடங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

    25. ஓம் சவுபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    26. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

    27. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    28. ஓம் சிவன் மால் திருமகனே சரணம் ஐயப்பா

    29. ஓம் சிவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

    30. ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    31. ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    32. ஓம் குளத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா

    33. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    34. ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    35. ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா

    36. ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

    37. ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    38. ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

    39. ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    40. ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    41. ஓம் சாந்தம் நிறைமெய்ப்பொருள் சரணம் ஐயப்பா

    42. ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா

    43. ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா

    44. ஓம் புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா

    45. ஓம் வன்புலியின் வாகனனே சரணம் ஐயப்பா

    46. ஓம் தாயின் நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    47. ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

    48. ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    49. ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    50. ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    51. ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    52. ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    53. ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    54. ஓம் நீல வஸ்திரதாரியே சரணம் ஐயப்பா

    55. ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

    56. ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

    57. ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

    58. ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    59. ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

    60. ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    61. ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

    62 ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

    63. ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    64. ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

    65. ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    66. ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    67. ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    68. ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    69. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    70. ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    71. ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    72. ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    73. ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    74. ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    75. ஓம் திருவேணி சங்கமே சரணம் ஐயப்பா

    76. ஓம் திரு ராமர் பாதமே சரணம் ஐயப்பா

    77. ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

    78. ஓம் சபரிக்கு அருள்செய்தவனே சரணம் ஐயப்பா

    79. ஓம் தீபஜோதி திருஒளியே சரணம் ஐயப்பா

    80. ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    81. ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    82. ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    83. ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    84. ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    85. ஓம் நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    86. ஓம் நிறையுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    87. ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

    88. ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா

    89. ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

    90. ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    91. ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    92. ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    93. ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

    94. ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    95. ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா

    96. ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    97. ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    98. ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

    99. ஓம் நாகராஜப் பிரபுவே சரணம் ஐயப்பா

    100. ஓம் மாளிகை புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    101. ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    102. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    103. ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

    104. ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    105. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

    106. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

    107. ஓம் ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா

    108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

    அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சித்து அருள வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா. காசி, ராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கியாளும், ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா.

    • மனமுருகி பாடுங்கள்.
    • பண மழையில் நனையலாம்.

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

    • தீப வழிபாட்டில் சிறப்பானது “கார்த்திகை தீபம் ஆகும்”
    • கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக!

    முழு ஞானப் பெருக்கே வருக!

    பிறை மவுலிப் பெம்மான்

    முக்கண்சுடர்க்கு நல் விருந்தே வருக!

    முழு முதற்கும் வித்தே வருக!

    வித்தின்றி விளைந்த

    பரமானந்தத்தின் விளையே வருக!

    பழுளையின் குருந்தே வருக!

    அருள்பழுத்த கொம்பே வருக!

    திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெரு வெள்ளம் பிடைவார் பிறவி பிணிக்கோர் மருந்தே வருக!

    பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக!

    மலையத்துவசன் பெற்ற

    பெரு வாழ்வே வருக வருகவே!

    மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் வரிசையில் வரும் இந்த பாடல் சிவன், மீனாட்சி மற்றும் மகாலட்சுமியை குறித்து பாடுவதாகும். இதைப்பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.

    தீப வழிபாட்டில் சிறப்பானது "கார்த்திகை தீபம் ஆகும்" இது கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.

    'அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக

    இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி

    ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு

    ஞானத் தமிழ் புரிந்த நான்'.

    என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் மாரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

    • சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை.
    • மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை.

    'கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி

    மலை நுனியிற் காட்டா நிற்போம்

    வாய்த்த அந்தச் சுடர்நாளில் பசிபிணியில்

    லாது உலகின் மன்னி வாழ்வார்

    பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு

    தவிரும் அது பணிந்தோர், கண்டோர்

    கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு

    முத்தி வரம் கொடுப்போம்.'

    சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை. மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை. திருக்கார்த்திகையில் திரு அண்ணாமலையிலும், திருவாதிரையில் சிதம்பரத்திலும், சிவராத்திரியில் காசி மற்றும் ராமேஸ்வரத்திலும் வழிபடுதல் மிக சிறப்பு.

    கார்த்திகை மாதம் கிருத்திகை நாளில் மலையின் மீது 'தீப வடிவில் காட்சி தருவேன்' என்றார் சிவபெருமான். இதை காண்பவருக்கு மோட்சம் கிடைக்கும்.

    அருகில் உள்ள அருணாசல புராண 159-ம் பாடல் இதன் சிறப்பை விளக்குகிறது.

    • பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.
    • திருமண தடை அகலும்.

    விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர தினமான இன்று விநாயகரை நினைத்து வழிபாடு செய்வது பல நன்மைகளை தரும். விநாயகருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

    ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய

    ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய

    மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது

    அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

    சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.

    ×