search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "surya dev"

  • சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம்.
  • சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம்.

  பிரபஞ்சத்தில் சூரிய சக்தி அளப்பரியது. இயற்கையான சூரியனை வணங்குவதும் வழிபடுவதும் சாலச்சிறந்தது என்கிறார்கள் முன்னோர்கள்.

  வருடந்தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட அது சூரியனுக்கு நாம் செலுத்தும் வணக்கம். அதேபோல, வருடம் 365 நாளும் சூரிய வணக்கம் செய்வதும் சூரிய பகவானை வணங்குவதும் நம்மையும் நம் இல்லத்தையும் செழிப்பாக்கவல்லது.

  எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம்தானே. அதேபோல, ஒவ்வொருநாளும் சூரியனைப் பார்த்து நமஸ்கரிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

  இந்த ஞாயிறு நாளில், நம் முதல் வணக்கம், சூரிய பகவானுக்கு என இருக்கட்டும். சூரிய பகவானை கிழக்கு நோக்கி தரிசிப்போம். இந்த உலகத்துக்காகவும் உலக மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

  கிழக்கு நோக்கி நிற்பதும் அமர்வதும் அமர்ந்து சாப்பிடுவதும் உன்னதமான விஷயங்கள். கிழக்கு என்பது விடியலின் குறியீடாகியிருக்கிறது. கிழக்கில் உதிக்கும் சூரிய பகவானும் நம் வாழ்வின் விடியலுக்கான வரப்பிரசாதி.

  எனவே, சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். ஞாயிறு நாளில், சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வோம்.

  இயலாதவர்கள், ஆதித்ய ஹ்ருதயத்தை காதாரக் கேட்பதே பலம் சேர்க்கும். வலு கொடுக்கும். வளமாக்கும்.

  ஆதித்ய ஹ்ருதயம் சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க, தீய சக்திகளின் தாக்கம் குறையும். நல்ல நல்ல கதிர்வீச்சுகள் நம்மைச் சூழும். அரணெனக் காக்கும். ஆயுள் பலம் தந்தருளும். செய்யும் காரியங்கள் யாவும் வீரியமாகும்.

  • இறைவழிபாடு செய்வது குடும்பத்திற்கு ரொம்பவும் நல்லது.
  • துன்பத்தை கடுகளவு ஆக்கிவிடும் வழிபாடு தான் இந்த ஞாயிறு வழிபாடு.

  நம்மில் நிறைய பேர் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவழிபாடு செய்வதை தவிர்த்து விடுவோம். காரணம் பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அசைவ சாப்பாடு இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். எது எப்படியாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள். அந்த நாளில் இறைவழிபாடு செய்வது குடும்பத்திற்கு ரொம்பவும் நல்லது.

  ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் பெரிய அளவில் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கலாம். தோல்வியை கண்டு நீங்கள் பயப்பட மாட்டீங்க. வெற்றி மேல் வெற்றியை அடைவதற்கு உண்டான வழிகள் கண்முன்னே தெரியும். மலை அளவு துன்பத்தைக் கூட, கடுகளவு ஆக்கிவிடும் வழிபாடு தான் இந்த ஞாயிறு வழிபாடு. சிறப்பு மிக்க ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

  ஞாயிறு மாலை ராகு கால நேரம் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை. இந்த ராகு கால சமயத்தில் இந்த விளக்கை (கோதுமை )ஏற்ற வேண்டும்.

  கோதுமையை தரையில் சிறிதளவு பரப்பி விட்டு அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிகப்பு துணி, தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். உங்களுக்கு வாழ்வில் இருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனைக்காக இந்த தீபத்தை ஏற்றி அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து குறைந்தது 15 நிமிடமாவது சூரிய பகவானையும் எம்பெருமானையும் மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

  ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய இந்த வழிபாடு நாய் படாத பாடுபடும் உங்கள் வாழ்க்கையை நாசுக்காக மாற்றி விடும் என்றால் பாருங்கள். விடாமல் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். திங்கள்கிழமை பசுவுக்கு அகத்தி கீரையை, டவுடு, புண்ணாக்கு கொடுங்கள். இந்த ஞாயிறு ராகுகால வழிபாடு உங்களுடைய வாழ்க்கையில் பெரிய வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

  கடன் பிரச்சனை உள்ளது, வீட்டில் சுபகாரிய தடை உள்ளது, ஜாதக கட்டத்தில் நேரம் சரியில்லை, பெரிய பெரிய பரிகாரங்கள் செய்ய சொன்னார்கள், ஆனால் அதற்கான நேரமும் இல்லை, பணமும் இல்லை என்பவர்கள் இந்த வழிபாடு செய்யாமல். நவகிரகங்களால் இருக்கக்கூடிய கோளாறுகளை சரி செய்யவும் இந்த ஞாயிறு ராகுகால வழிபாடு வழிவகுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

  சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்தமான கோதுமையில் விளக்கு ஏற்றலாம். ஏனென்றால் சூரிய பகவானுடைய தானியம் கோதுமை. பக்தர்கள் பதவி உயர்வு கிடைக்க, தலை மற்றும் கண்கள் சம்பந்தப்பட்ட நோய்களை போக்குபவர் சூரிய பகவான். கோதுமையினால் விளக்கு ஏற்றி வேண்டிய வரங்களை பெறலாம்.

  • சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு.
  • சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

  நாளை பானு சப்தமி தினம் என்பதால் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும்.

  சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு. அதுவும் ஆவணி ஞாயிறுக்கிழமையும் சப்தமி திதியும் ஒன்றாக வரும் நாள் பானு சப்தமி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது.

  ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் ஒன்று சேர்ந்து வரும் நாள்தான் பானு சப்தமி எனப்படும். இந்த நாள் சூரிய கிரகண நாளுக்குத் துல்லியமானது. இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டு வரும். அதாவது நாளை நாம் விரதம் இருந்து செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் பலனைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக பலனை தரக் கூடியவை.

  நாளை காலையில் புண்ணிய நதிகளில் குளித்து சூரியனை வணங்கி, காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தானம் செய்வதும், தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். மேலும் கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் உண்டாகும். நாளை விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.

  ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும். ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும்.

  பானுசப்தமியில் சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். வெள்ளெருக்கு செடியில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையால் செய்த பண்டங்களை நைவேத்தியம் செய்து விரதம் மேற்கொள்வது சிறப்பு. ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்து சூரியனை வழிபட்டால் எதிரிகளை எளிதில் வெல்ல முடியும். ஞாயிறுக்கிழமை அதிகாலை எழுந்து சூரியனை வழிபட்டால் புகழ் கூடும். உடல் ஆரோக்கியம் நலமடையும்.

  • ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.
  • ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்

  தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரத நாட்களாகும்.

  கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம். தந்தை இல்லாதவர்கள் வாழ்வில் வளம் பெற சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொண்டு இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதனால் இரட்டிப்பு பலன் உங்களுக்கு கிடைக்கும். சனிபகவானின் பாதிப்பு குறைந்து வாழ்வில் நிம்மதி கிடைக்கவும், சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் தீரவும் ஆவணி ஞாயிறு விரதம் அனுஷ்டிக்கலாம்.

  ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

  ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது

  அந்த காலத்தில் விவசாயிகள் ஆவணி மாதத்தில் நன்கு விளைந்து நிற்கும் வயல்வெளிகளில் இருக்கும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி பெண்கள் நாகருக்கு புற்றில் பால் ஊற்றி இந்த நாளில் வழிபாடுகள் செய்வார்கள். அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களும், வேலையில்லாதவர்கள் வேலை கிடைக்க ராகு கேதுவான நாகர் சிலைக்கு பால் ஊற்றி வேண்டிக் கொள்ளலாம்.

  சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். பிறந்த ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் நிச்சயம் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம்.

  தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

  அகத்தியர் ராம பிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும். ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.

  ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் கோவிலுக்கு சென்று நவக்கிரகத்தில் இருக்கும் சூரியனாருக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். அன்றைய நாளில் கோதுமையால் செய்த இனிப்பு வகைகளை நைவேத்யம் செய்யலாம். மேலும் கோதுமையை பக்தர்களுக்கு தானமாக வழங்கலாம். இதனால் ஒவ்வொருவர் குடும்பத்திலும் பிரச்சனைகள் நீங்கி சுபீட்சமான வாழ்வு அமையும்.

  முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்க வேண்டும். அசைவ உணவை சாப்பிடாமல் சூரிய பகவானை நினைத்து விரதம் இருங்கள். ஆயிரம் பலன்களை நமக்கு ஆதவன் அள்ளித்தருவான்.

  • சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும்.

  ஞாயிறு விரதம் அல்லது "சூரிய விரதம்" இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் "ஐப்பசி" மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

  இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

  பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.

  இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.

  சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

  • அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது.
  • சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.

  நமது வேதங்கள் பஞ்சபூதங்களை இறைவனின் அம்சமாக கருதின. அதில் எத்தகைய தீமையாலும் மாசு பெறாத நெருப்பு எனும் அக்னியை மிகவும் உயர்ந்ததாக போற்றினர். அந்த அக்னி பகவானின் அம்சத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் சூரிய பகவானை தினந்தோறும் போற்றினர். நாம் அனைவருமே வாழ்வதற்காக பல வேலைகளை செய்கிறோம். அவற்றில் வேலையிடங்களில் பலருக்கு பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றை நீக்குவதற்கான ஸ்ரீ அக்னி சூரிய மந்திரம் இதோ.

  ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம்

  ஓம் பூர் புவ ஸூவஹா அக்னயே ஜாதவேத

  இஹாவஹா சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா

  அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தின் சிறப்பான பலனை பெற ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசை தினத்தில் சுத்தமான விளக்கேற்றி, அதற்கு முன்பாக கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து உங்கள் குரு, குலதெய்வம் ஆகியோர்களை மானசீகமாக வணங்கி 1008 முறை இம்மந்திரம் துதித்து உரு ஜெபிக்க வேலை, தொழில், வியாபார இடங்களில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் அமைய பெற்றவர்கள் நன்மையான பலன்களை பெறுவார்கள், நெருப்பினால் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கும்.

  பஞ்சபூதங்களில் ஒன்றானதும், இறைத்தன்மை உடையதாகவும் கருதப்படுவது நெருப்பு ஆகும். இந்த நெருப்பை வேத காலங்களில் அக்னி பகவானாக நமது முன்னோர்கள் வழிபட்டனர். ஒரு இடத்தில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீங்கி, நன்மையான சக்திகள் அங்கு நிறையவே அக்காலங்களில் யாகங்கள் அதிகம் செய்து அக்னி பகவானின் அருளாசிகள் பெற்றனர். அக்னி தன்மையை கொண்ட சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.

  ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

  • இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு இணையானது.
  • இன்று விரதம் இருந்து தானம் செய்வது சிறப்பானது.

  இன்று பானு சப்தமி தினமாகும். ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் பானு சப்தமி. இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு இணையானது. அதாவது பானு சப்தமி நாளில் நாம் செய்யும் பூஜைகள் மந்திர ஜபங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தை காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தை தரக்கூடியவை.

  இன்று காலையில் புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய இருதயம் போன்ற சூரிய மந்திர பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பட்சணங்களை தருவதும், தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்த கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளை பெற்றுத் தரும். மேலும் கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். தந்தைக்கு ஆரோக்கியம் கிட்டும்.

  விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது நல்ல பலன்கள் கிடைக்க உதவும்.

  • அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும்.
  • ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது.

  சூரிய பாகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, 'ரத சப்தமி' ஆகும். இது 'சூரிய ஜெயந்தி' என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே 'ரத சப்தமி' என்கிறோம்.

  'சப்தம்' என்றால் 'ஏழு' என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும். உத்ராயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே 'ரத சப்தமி' என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் சூாியன் பயணிக்கும் தேரை இழுத்துச் சென்றும், 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகின்றன.

  இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

  7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

  கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

  ரத சப்தமி தினத்தில் மேற்கொள்ளக்கூடிய ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது. தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள்ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும் வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். குளித்து முடித்த பிறகு சூரிய பகவானை வழிபட்டு ஒரு மண் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி சூரிய ஒளி அப்பாலில் விழும் படி சூரியனுக்கு நைவேத்தியம் வைத்து, சூரியனுக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

  கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.

  மிகவும் அற்புதமான இந்த நாளில் தொடங்கும் தொழில், வியாபாரங்கள் பெருகும். பெண்கள் நற்கதியை அடைவார்கள். கணவனை இழந்த பெண்கள் இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன நமது புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்வது ஆன்மீக ரீதியான நற்பலன்களை தரும். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் பெருஞ்செல்வந்தர் ஆக உயர்வார்கள். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியமும், பலன்களும் உண்டு.முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். குல சாபங்கள் நீங்கும்.

  இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  ஜெ.மாணிக்கம்

  • சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்று கிழமை தை மாதப் பிறப்பு நிகழ்வது மிகச் சிறப்பு.
  • வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும்.

  மனிதர்களுக்கு ஆன்ம பலம் மிக முக்கியம். பலம் பெற்ற ஒரு ஆன்மாவால் உலகில் அடைய முடியாத வெற்றியே கிடையாது. நவநாகரீக உலகில் பகலில் தூங்குவதும் இரவில் விழித்து வேலை பார்ப்பது போன்ற கலாச்சார மாற்றத்தால் பலர் ஆன்ம, ஆத்ம பலம் குறைந்து இயந்திரமாக வாழ்கிறார்கள். நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அடைவதற்கு மந்திரம் யந்திரம் தந்திரம், இரவு வேலை என்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. கால புருஷ 5-ம் அதிபதி சூரியனை வலுப்படுத்தினால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.

  தமிழ் மாதங்களை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தஷ்ணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மகர ராசியில் நுழையும் மகர சங்கராந்தியன்று, உத்ராயணம் துவங்கும் தை மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் கால புருஷ 10-ம்மிடமான மகர ராசியில் சனியின் வீட்டில் தனது சுய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கும் தைமாத முதல் நாளில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பமாகும்.

  அன்று உலக உயிர்களுக்கு உணவு வழங்கும் உழவுத் தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபட வேண்டும். இந்த வருடம் சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்று கிழமை 15.1.2023 அன்று தை மாதப் பிறப்பு நிகழ்வது மிகச் சிறப்பு.

  ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்ய வேண்டும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொடி கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும். பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய்,முந்திரி,திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில்வைத்துப் அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைத்து முழுக்கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்புபூசணி பத்தை, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய் ஆகியவற்றுடன்சூரியன், குல, இஷ்ட தெய்வத்திற்கு படைத்து வணங்க வேண்டும். பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தப் பிறகு அனைவரும் பொங்கல் சாப்பிட வேண்டும்.

  சூரிய பகவானை தைத்திருநாள் அன்று சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட இயற்கை சக்தியான சூரியனிடமிருந்து அதிகாலையில் வரும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து உற்சாகமடைந்து உடல் வலிமையும் பெறுகின்றன. ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்களில் உள்ள குறைபாடுகள் சீராகும். அறிவுவளரும். சத்ரு பயம், கடன் தொல்லை, உஷ்ண நோய்கள் விலகும். படிப்படியாக கஷ்டங்கள் விலகும்.

  வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும். அனைத்து விதமான பாவங்களும் விலகி நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும். மனதில் உள்ள கவலைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அரசாங்க உதவி, அரசு வேலை, அரசியல் ஆதாயம் போன்றவற்றை சூரிய வழிபாட்டின் மூலமே பெற முடியும். சூரியன் உதயமாகும் போது ஆத்மார்த்மாக ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை சொல்லி வந்தால் எல்லா தடைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் ஆத்ம பலம், ஞானம் போன்ற அனைத்தும் கிடைக்கும். பித்ருக்களாகிய முன்னோர்களின் நல்லாசி சூரிய ஒளி மூலமாக கிடைத்து பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.

  • ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
  • நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

  சூரிய நமஸ்காரம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் சூரிய ஹோரையில் வீட்டு மாடியில், மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும் ஒரு விளக்கு போட்டு சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

  விளக்கு போடும் பொது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு, மற்றும் ஏதாவது ஒரு இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும். அப்போது சூரிய காயத்ரி அல்லது சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம்.

  இதனை தொடர்ந்து 108 நாட்கள் செய்தால் அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். தை மாதம் ரத சப்தமி நாளில் இந்த விரதத்தை தொடங்கலாம் இதனால் பலன் அதிகம் கிடைக்கும்.