என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூரியன்"
- பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும்.
- நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.
பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் [33 அடி] உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது. இந்த சிறு கோள் ஆனது 2024 செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.
இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும். ஆனால் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும்.
Newly-discovered #asteroid 2024 PT5 is about to undergo a "mini-moon event" when its geocentric energy becomes negative from September 29 - November 25.https://t.co/sAo1qSRu3J pic.twitter.com/pVYAmSbkCF
— Tony Dunn (@tony873004) September 10, 2024
மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம். ஆனால் இந்த காலகட்டத்தில் பூமிக்கும் பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுமான உறவை ஆய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் என்றும் என்றும் புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எவ்வாறாக ரியாக்ட் செய்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நிகழ்வு உதவும் என அமெரிக்கன் ஆஸ்ட்ரோனாமிகள் சொசைட்டி விஞ்ஞானிகள் தெரிவிகிண்டனர். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது, குறிப்பிடத்தக்கது.
- மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண்மீன் திரள்கள் சூழ்ந்த இவ்வகையாக ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த குறிப்பிட்ட குவாசர் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் [ESO] VLT எனப்படும் மிகப்பெரிய தோலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண்மீன் திரள்கள் சூழ்ந்த இவ்வகையாக ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மத்தியில் உள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்டுகிறது. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் அண்டும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதுவே அதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளது. இந்த நிலையில்தான் இதுவரை கண்டறியப்படாத பிரகாசமான குவாசர் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட குவாசர் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த குவாசர் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.
- அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.
மர்மங்கள் நிறைந்ததாகவும் மனிதர்களுக்கு என்றும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ள பிரபஞ்சத்தின் அற்புதங்கள் இயற்கையின் பிரமாண்டத்தை நமக்கு நினைவூட்டுவதாக வருடம் முழுவதும் புதுப்புது நிகழ்வுகளாக விண்ணில் நடந்து வருகிறது. விண்ணில் நடக்கும் வானியல் நிகழ்வுகளை பூமியில் இருந்து பார்ப்பது அலாதியான அனுபவத்தை தருவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது தொடங்கியுள்ள இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.
ஜூலை 5 - நிலவு இல்லாத நாள் [No Moon Day]
இந்த நாளில் வானில் நிலவு தோன்றாமல் தூர கிரகங்களின் ஒளி நட்சத்திரங்களாக அதிகமாக பிரகாசித்து காண்போரை வசீகரிக்கும்.
ஜூலை 6 - அப்ஹெலியன் [Aphelion]
இந்த நாளில் பூமியும் சூரியனும் நீள் சுற்றுவட்டப்பாதையில் ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இத்தனை அதிக தொலைவில் பூமியும் சூரியனும் இருக்கும். இதையே அப்ஹெலியன் நிகழ்வு என்கின்றனர்.
ஜூலை 12 - மெர்குரி எலாங்கேஷன் [Mercury Elongation]
மெர்குரி என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள சிறிய கோள்களில் ஒன்றாக உள்ளது. மேலும் மிகவும் உட்புறமாக உள்ள கிரகமாக உள்ளது. இதனால் பொதுவாகவ்வே பூமியிலிருந்து மெர்குரி கிரகம் நமக்கு புலனாவதில்லை. ஆனால் இந்த நாளில் மெர்க்குரி கிரகம் சூரியனிலிருந்து கிழக்குப்புறமாக அதிக தொலைவுக்கு செல்லும். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு இந்த நிகழ்வை கருவிகளின் உதவியுடன் நம்மால் வானில் கவனிக்க முடியும்.
ஜூலை 21 - பக் நிலா [Buck Moon]
இந்த நாளில் வானையே ஜொலிக்க செய்யும் அளவுக்கு முழு நிலவு தோன்றும். அதிக இடி இடிக்கும் மாதமாக ஜூலை இருப்பதால் இந்த நாளில் தோன்றும் நிலவுக்கு Thunder Moon என்றும் பெயர் உண்டு. மேலும் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் இதற்கு ஹே நிலவு என்றும் பெயர் உண்டு. அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.
ஜூலை 28& 29 - ஏரிகல் பொழிவு [ Delta Aquarids Meteor Shower]
ஜுலை 28 அன்று இரவும், ஜுலை 29 அன்று காலையும் டெல்டா அக்வாரிட்ஸ் எனப்படும் ஏரிகல் பொழியும் நிகழ்வை விண்ணில் நம்மால் காண முடியும். இந்த எரிகல் பொழிவு ஜூலை மத்தியில் இருந்து ஆகஸ்ட் மத்தி வரையில் தொடர்ந்து நடக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட இரண்டு தினங்களில் [ஜூலை 28& 29] உச்சபட்சமாக பொழிவு இருக்கும்.
- வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார்.
- அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார்.
வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தை சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.
விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும்.
மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும்.
வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார்.
அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார்.
விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.
சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம்.
எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.
விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.
பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.
- சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
- இப்படிப்பட்ட கிரகணம் உல கில் உள்ள சில நாடுகளில் தெரியும் மற்ற நாடுகளில் தெரியாது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட கிரகணம் உல கில் உள்ள சில நாடுகளில் தெரியும் மற்ற நாடுகளில் தெரியாது.
சந்திர கிரக ணம் துவங்கப் போகும் எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உண்ண வேண்டும்.
சந்திரன் ஔஷதிகளுக்கு அதிபதியானதால் கிரகண சமயத்தில் நமது வயிற்றில் உணவு இருக்கக் கூடாது.
அப்படி இருந்தால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சந்திர கிரகணம் விட ஆரம்பித்தவுடன் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்குப் பிரம்யஞ்ஜம் கிடையாது.
கிரகணம் பிடிக்கும் போதும், விட்ட பிறகும் குளிக்க வேண்டும். கிரகண காலத்தில் எல்லா நீர்நிலைகளும் கங்கைக்குச் சமம்.
இந்தக் காலத்தில் நாம் உடுத்தியிருந்த வஸ்திரங்களை நனைத்து மடியாக வேறு உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
முடிந்தவரை எல்லா உணவு பண்டங்களிலும், குடிக்கும் நீரிலும் தர்ப்பை ஒன்றைப் போட்டு வைக்கலாம்.
சந்திர கிரகணக் காலத்திலேயே சந்திரன் அஸ்தமன மானால் அதை 'கிரஸ்தாஸ் தமனம்' என்பார்கள்.
அன்று பகல் முழுவதும் விரதமிருந்து மாலை சந்தி ரோதயம் ஆன பிறகு நிலவைப் பார்த்து விட்டு சாப்பிட வேண்டும்.
கிரகணம் ஆரம்பித்து முடியும் வரை ஜபம் செய்யலாம், இறைவன் நாமாவைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
இப்படிச் செய்தால் நாம் மிகுந்த பலனை அடையலாம். ஆனால் இந்தச் சமயத்தில் தூங்கக் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது.
கிரகண காலத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஓர் ஓலையில் கிரகண மந்திரங்களை எழுதி கிரகணம் ஆரம்பிக்கும் சமயத்தில் நெற்றியில் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டும்.
விட்டவுடன் குளித்து விட்டு சுலோகம் எழுதியிருந்த ஓலையோடு மட்டைத் தேங்காய் வெற்றிலைப் பாக்கு இவற்றோடு தட்சணையும் வைத்துத் தானம் செய்ய வேண்டும்.
கிரகணத்தன்று சிரார்த்தம் (தெவசம்) வந்தால் செய்யக் கூடாது.
அதை மறுநாள் செய்யலாம் அல்லது அடுத்த மாதம் அதே திதியில் செய்யலாம்.
- 1983ல் உதயம், சந்திரன், சூரியன் என 3 அரங்குகளுடன்"உதயம் காம்ப்ளெக்ஸ்" திறக்கப்பட்டது
- சுமார் 62 ஆயிரம் சதுர அடி கொண்ட வளாகத்திற்கு 15 பேர் பங்குதாரர்கள் என தெரிகிறது
90களின் இறுதி வரை பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தவை திரையரங்குகளும், தொலைக்காட்சியும் மட்டுமே.
ஒரே வளாகத்தில், 1 திரையரங்கமும், ஒன்றுக்கும் மேற்பட்ட 2, 3, 4 திரையரங்குகளும் 4 காட்சிகளுடன் மக்களை மகிழ்வித்தன.
சென்னை மக்களுக்கு, அலங்கார் எனும் 1 திரையரங்கம்; ஆனந்த், லிட்டில் ஆனந்த் மற்றும் ஈகா, அனுஈகா எனும் 2 திரையரங்கங்கள்; சத்யம், சுபம், சாந்தம் எனும் 3 திரையரங்கங்கள்; தேவி, தேவிபாலா, தேவிகலா, தேவி பாரடைஸ் என 4 திரையரங்கங்கள் என புதிய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடங்களாக அரங்கங்கள் காட்சியளித்ததை இன்றளவும் சினிமா ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர்.
இப்பட்டியலில் தென் சென்னை மக்களின் விருப்பமான திரையரங்கு வளாகமாக அசோக் நகரில், அசோக் பில்லருக்கு அருகே "உதயம் காம்ப்ளெக்ஸ்" எனும் பெயரில் உதயம், சந்திரன், சூரியன் என ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்ட 3-அரங்க காம்ப்ளெக்ஸ் விளங்கியது.
பல வருடங்களுக்கு பிறகு "மினி உதயம்" என சிறிய திரையரங்கம் ஒன்றும் அதில் உருவாக்கப்பட்டது.
"உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்…" என இசையமைப்பாளர் தேவா ஒரு திரைப்படத்தில் பாடலே பாடியிருப்பார்.
ஆனால், கடந்த 15 வருடங்களாக, காலத்தை வென்ற திரைப்படங்களை திரையிட்ட அரங்குகளுக்கு "மல்டிப்ளெக்ஸ்" வடிவ திரையரங்குகள் கடும் போட்டியை கொடுத்து வருகின்றன.
வர்த்தக ரீதியாக 80களிலும் 90களிலும் ஈட்டிய வருவாயை மீண்டும் எட்ட முடியாமல், அதிகரிக்கும் பராமரிப்பு செலவு மற்றும் பணியாட்கள் ஊதியம், வரிகள், மின்சார கட்டணம் என பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல், பல திரையரங்கங்கள், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மென்ட்களாகவும் உருமாறின.
இதில், தற்போது "உதயம் காம்ப்ளெக்ஸ்" இணைந்துள்ளது.
உதயம் திரையரங்க உரிமையாளர்கள், சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனம் (காஸா கிராண்ட்) ஒன்றுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, "உதயம் காம்ப்ளெக்ஸ்" முற்றிலும் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டிடம் அமையவுள்ளது.
அங்கு ஒரு புதிய குடியிருப்பு வளாகம் மற்றும் அலுவலக வளாகம் வரவுள்ளதாக தெரிகிறது.
1983ல் திறக்கப்பட்ட "உதயம் காம்ப்ளெக்ஸ்" 40 வருடங்களாக மக்கள் நினைவில் நிற்கும் ஒரு முக்கிய இடமாகும்.
தாராளமான இரு சக்கர வாகன நிறுத்துமிடம், முன் பக்கம் பெரிய காலி இடம், அரங்க வாயிலில் அமர்ந்து கொள்ள பல படிகள் என பல வசதிகள் இருந்ததால், பொதுமக்களுக்கு - குறிப்பாக இளைஞர்களுக்கு - விருப்பமான திரையரங்க வளாகமாக "உதயம் காம்ப்ளெக்ஸ்" இருந்தது.
62 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த கட்டிடத்திற்கு 15 பேர் பங்குதாரர்கள் என கூறப்படுகிறது.
கே. பாக்யராஜின் "இது நம்ம ஆளு", விக்ரமனின் "புது வசந்தம்", மணிரத்னத்தின் "அஞ்சலி", "தளபதி", சந்தானபாரதியின் "குணா" ஆர்.வி. உதயகுமாரின் "பொன்னுமணி", தரணியின் "கில்லி" உள்ளிட்ட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பல வெற்றி திரைப்படங்களை இங்கு கண்டது பசுமையாக நினைவில் உள்ளதாக கூறும் திரைப்பட ரசிகர்கள், "உதயம்" இடிபடும் செய்தியை கனத்த இதயத்துடன் ஏற்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் முழு திரைப்படத்தையும் பார்க்கும் காலகட்டத்தில் வாழ்ந்தாலும் திரையரங்குகளில் அகன்ற வெண்திரையில், பலருக்கு நடுவே, விருப்பமானவர்களுடன் அமர்ந்து, திரைப்படங்களை காண்பது ஒரு தனி அனுபவம்.
திரைப்பட வளாகமாக மட்டுமின்றி சென்னைக்கு ஒரு அடையாளமாகவும் இருந்து வந்தது "உதயம் காம்ப்ளெக்ஸ்" என்றால் அது மிகையாகாது.
- திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.
- கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.
திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.
இவர் தனது துதிக்கையை உயர்த்தி வாழ்த்துச் சொல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளார்.
விநாயகர்-கல்விக்கடவுளாக
மராட்டிய மாநிலத்தில் விநாயக சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.
அங்கே ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அமைத்து அதில் பெரிய பெரிய விநாயகர் நிலை அமைத்து பூஜை செய்து பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம்.
கல்விக்கடவுளாக கருதி வணங்குகின்றனர்.
வாரத்தில் செவ்வாய்க்கிழமையே அவருக்கு உகந்த நாள்.
கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.
அவரது அம்சத்தில் முகம் விஷ்ணுரூபம்.
இடபாகத்தில் சக்தி, வலது பாகத்தில் சூரியன், முக்கண்களில் சிவாபெருமான் உள்ளனர்.
- இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத்தரும்.
- காலை சூரிய உதயமுதல் 8 மணி வரையிலும் சூரியனை வெறுங்கண்ணால் தரிசிக்கலாம்.
சூரியனை உதயகாலத்தில் வெறுங்கண்ணால் பார்த்து தரிசித்து சூரியனின் காயத்ரி, தியான மந்திரம், அஷ்டோத்ரம் ஆகியவற்றை சொல்லி வணங்க வேண்டும்.
உதயகால சூரியன் அதிக வெப்பமின்றி, ஒளிக்கதிர்கள் இன்று முழு வட்டவடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பார்.
இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத்தரும்.
கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடைகிறது. இதனால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-
¥ ஆத்மபலம், ¥ மனபலம், ¥ தேகபலம், ¥ எதிர்ப்பு சக்தி,¥ நோய் நிவர்த்தி, ¥ எதையும் சந்திக்கும் மனதைரியம், ¥ ஆண்மை, வீரியம் அதிகரித்தல், ¥ அறிவாற்றல், நினைவாற்றல், ¥ சிந்தனாசக்தி அதிகரித்தல், ¥ நிர்வாகத்திறன் கூடுதல், ¥ மனத்தூய்மை, ¥ முகத்தில் தேஜஸ் (ஒளி), ¥ வசீகரம், ¥ பேச்சாற்றல், ¥ எதிலும் பெற்றிபெறும் மனநிலை, ¥ நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, ¥ தாழ்வு மனப்பான்மை விலகுதல், ¥ ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், ¥ எண்ணங்களுக்கு வலிரத உண்டாகும். ¥ சத்ருக்களை ஜெயித்தல், ¥ எத்தகைய பிரச்சினைகளில் இருந்தும் வெற்றி பெறுதல், ¥ கண்பார்வை சக்தி அதிகரித்தல், ¥ கண் நோய் நீங்குதல், ¥ படைப்பாற்றல் உண்டாகுதல்.
சூரியனின் ஆற்றல் முழுவதும் நம்முள் வந்துவிடும்! அப்புறம் என்ன வேண்டும்? நாமே சூரியன் தான்!!
தரிசன நேரம்:
காலை சூரிய உதயமுதல் 8 மணி வரையிலும் சூரியனை வெறுங்கண்ணால் தரிசிக்கலாம்.
மார்பளவு தண்ணீரில், ஏரி, குளம், ஆறுகளில் நின்று கொண்டு இருகைகூப்பி சூரியனை பார்த்து வெறுங்கண்ணால் தரிசிக்க வேண்டும்.
குறைந்தது 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
தரிசிக்கும்போது காயத்ரி, அஷ்டோத்ரம் சொல்லிக் கொண்டே தரிசித்து வணங்க வேண்டும்.
இதனால் உடலிலும், மனதிலும் எண்ணற்ற ஏற்றமான மாற்றங்கள் நிகழ்வதை கண்கூடாக உணரலாம்.
- ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
- ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே சூரியன்".
அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.
ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர்.
சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே.
எனவே தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.
சஞ்சலமாக இருந்த அர்ஜூனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார்.
இதனால் தான் ஆவணி மாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது".
சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனாலேயே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொள்கின்றனர்.
இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம்.
இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம்" சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.
ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.
முறைப்படி செய்யும் சூரிய நமஷ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.
எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்தாயாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.
அக்காலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும்.
பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது.*
- ஆட்சி பெறும் ராசி சிம்மம்
- சொந்த நட்சத்திரம் கிருத்திகை, உத்திரம்,
ஆட்சி பெறும் ராசிசிம்மம்
உச்சம் பெறும் ராசிமேஷம்
நீச்சம் பெறும் ராசிதுலாம்
நட்பு பெறும் ராசிகள்விருச்சிகம், தனுசு, மீனம்
சமராசிகள்மிதுனம், கடகம், கன்னி
பகை பெறும் ராசிகள்ரிஷபம், மகரம், கும்பம்
மூலத்திரிகோணம்சிம்மம்
சொந்த நட்சத்திரம்கிருத்திகை, உத்திரம்,
உத்திராடம்
திசைகிழக்கு
அதிதேவதைஅக்னி, சிவன்
ஜாதிஷத்திரியன்
நிறம்சிவப்பு
வாகனம்மயில், ஏழு குதிரைகள் பூட்டிய
தேர்
தானியம்கோதுமை
மலர்செந்தாமரை
ஆடைசிவப்பு நிற ஆடை
ரத்தினம்மாணிக்கம்
நிவேதனம்சர்க்கரைப் பொங்கல்
செடி/விருட்சம்வெள்ளெருக்கு
உலோகம்தாமிரம்
இனம்ஆண்
அங்கம்தலை, எலும்பு
நட்பு கிரகங்கள்குரு, சந்திரன்
பகை கிரகங்கள்சுக்கிரன், சனி
சுவைகாரம்
பஞ்ச பூதம்நெருப்பு
நாடிபித்த நாடி
மணம்சந்தன வாசனை
வடிவம்சம உயரம்
சூரியனுக்குரிய கோவில்சூரியனார் கோயில், ஆடுதுறை,
தஞ்சாவூர் (தமிழ்நாடு)
கோனார்க் (ஒரிசா)
திதி- சப்தமி
கிழமை- ஞாயிறு
ஓரை-சூரிய ஹோரை
பிரத்யதி தேவதை- ருத்திரன்
- பண்டைய எகிப்தில் பல சூரியக் கோவில்கள் இருந்துள்ளன.
- பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக “உழவர் திருநாள்” கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது.
அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம்.
இதனால்தான் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக "உழவர் திருநாள்" கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லலும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம்.
அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம்.
வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.
பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன.
நம் பாரதத்தில் மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது
கிரேக்க நாட்டினர் சூரியனை, இவ்வுலகைப் படைத்தவர் எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோவாசிகளும் அப்படியே.
அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை, முக்கிய இடம் பெற்றுள்ளது.
அது மட்டுமல்ல கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்து, இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறி, அவரை ஆராதிக்கின்றனர்.
வேறு சில வெளி நாட்டினர், சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்து, சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும், என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர்.
அரசனை சூரியனின் வம்சத்தில் உதித்ததாகக் கருதி, ஜப்பானியர்கள் சூரியனை வழிபடுகின்றனர்.
பண்டைய எகிப்தியர்கள் உதய ரவியை ஹோரஸ் என்றும், நண்பகல் சூரியனை ஆமென்ரர் என்றும் மாலைச் சூரியனை ஓசிரில் என்றும் அழைத்தனர்.
டைப்போ என்ற இருளரக்கன், முதலை உருவத்தில் வந்து மாலையில் ஓசிரிலை விழுங்கிவிடுவதாகவும், மறுநாள் காலையில் ஹோரஸ் அவனை வென்றுவிடுவதாகவும் நம்பினர்.
பண்டைய எகிப்தில் பல சூரியக் கோவில்கள் இருந்துள்ளன.
சூரிய வழிபாடு மட்டுமல்லாமல், அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர்.
வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன.
அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன.
நேபாளத்தில் இன்றும் சூரியக் கோவில்கள் உள்ளன.
அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது.
இவ்விதம், பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில், சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.
- நட்பு வீடுகள்-விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்
- உறைவிடம்-தேவாயதனம் கோவில்
இனம்-ஆண்,
நிறம்-சிவப்பு,
ஜாதி-ஷத்திரியன்,
வடிவம்-சமஉயரமானவர்,
அவயம்-தலை,
உலோகம்-தாமிரம்,
ரத்தினம்-மாணிக்கம்,
வஸ்திரம்-சிவப்பு நிறம்,
தூபதீபம்-சந்தனம்,
வாகனம்-தேர்,
சமித்து-எருக்கன்,
சுவை-கார்ப்பு,
பூதம்-தேயு (அக்கினி)
நாடி-பித்தம்,
திக்கு-கிழக்கு,
அதிதேவதை-சிவன்,
தன்மை-ஸ்திரம்,
குணம்-தாமஸம்,
தான்யம்-கோதுமை,
புஷ்பம்-செந்தாமரை,
பாஷைகள்-இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.
நட்சத்திரங்கள்-கிருத்திகை,
உத்திரம், உத்திராடம்,
மணி-சூரியகாந்தம்,
காரகத்துவம்-பித்ருகாரன்,
உறைவிடம்-தேவாயதனம் கோவில்,
அர்க்க பத்ரம்-எருக்கு இலை,
அன்னம்-கோதுமை சக்கரான்னம்,
நட்பு வீடுகள்-விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்,
பகை வீடுகள்-ரிஷபம், மகரம், கும்பம்,
உச்சம்-மேஷம், நீசம்-துலாம், முலதிரிகோணம் சிம்மம்,
ஆட்சிகாலம்-6 வருடங்கள்,
பலன்-ஆரம்ப காலத்தில் கொடுப்பார்.
மார்க்கம்-ராசியைப் பிரதச்ஷினமாக சுற்றி வருவார்.
மூன்று ருக்கள்: வஸந்தருது-இளமை, கிரீஷ் மருது-நடுவயது, சரத்-மூப்பு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்