search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி"

    • சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டனர்.
    • 4 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சேந்தங்குடி, பாதரக்குடி, சம்பா கட்டளை, சட்டநாதபுரம் உள் ளிட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை- வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது சீர்காழி அருகே உள்ள தாண் டவன்குளத்தைச் சேர்ந்த மருது என்ற விஜயபாஸ்கர் (வயது 28), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள தெம்மூர் கிராமத்தைச்சேர்ந்த மணிமாறன் ( 32) ஆகிய இருவரும் சேர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.திருட்டில் ஈடுபட்ட விஜயபாஸ்கரன், மணிமாறன் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று தற்பொழுது இருவரும் வெளியே வந்து சீர்காழி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றி திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் நகை வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து விஜய பாஸ்கர், மணிமாறன் ஆகிய இருவரையும் எஸ். பி. தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா, எஸ். எஸ். ஐ .க்கள் ரமேஷ், நரசிம்ம பாரதி அசோக் குமார், செந்தில் ஆகியோர் கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சீர்காழி போலீசார் அவர்களிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ஒருஇருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விஜயபாஸ்கள், மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
    • மாணவிக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி எம்.எல்.ஏ வாழ்த்துகளை தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி கிருஷாந்தா, மத்தியப்பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற எஸ்பிகேஎப் 7வது நேசனல் கேம்ஸ் 2022 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.

    இதன்மூலம் அடுத்த மாதம் நேபாளில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    அவருக்கு நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மாணவிக்கு பயிற்சி வழங்கியஏ.ஐ.ஒ விளையாட்டு அகாடமிக்கும், ஆதர்ஷ் பள்ளிக்கும் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

    அதுபோல், திட்டச்சேரி ப.கொந்தகை அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஹரிஹரசுதன் - வெற்றிவேல் நினைவாக நடைபெற்ற, 39-ம் ஆண்டு மாபெரும் கபடி தொடர் போட்டி நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.

    • மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.
    • கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 23).

    இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24).

    இவர்கள் இருவரும் கடந்த 30-ம்தேதி புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது, பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.

    பின்னர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் கீழ்வேளூர் அருகே உள்ள கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜித் (23), அகரகடம்பனூர் ஊராட்சி கோவில்கடம்பனூரை சேர்ந்த வினோத் (24), கோவில்கடம்பனூர் ஸ்ரீகண்டி நத்தத்தை சேர்ந்த சுதீஷ் (19) என்பதும் இவர்கள் மூவரும் மேற்படி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
    • இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    சேலம்:

    வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் சேலத்தில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்குகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி வெள்ளிப் பொருட்கள் கேட்டு வட மாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இதனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நவராத்திரி விழாவின் போது வடமாநிலங்களில் பெண்கள் லைட் வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் வாங்குவார்கள். இதையொட்டி வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் தெரிவித்தார்.

    • நேற்றும் வழக்கம் போல் மாலை வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார்.
    • ட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்.இவரது மனைவி ராமச்சந்திராள் (வயது 66).

    இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஸ்ரீதரன் இறந்துவிட்டார். 2மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் பக்கத்தில் உள்ள தெருவில் வசித்து வந்தார். மருமகனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இதனால் ராமச்சந்திராள் தினமும் தனது மகள் வீட்டிற்கு தூங்க செல்வது வழக்கம். மாலை நேரத்தில் மட்டும் தனது வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு செல்வார். நேற்றும் வழக்கம் போல் மாலை வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ராமச்சந்தி ராளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார்.மேலும் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் விஜயன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். ஒரு குத்துவிளக்கு ஒரு கிலோ எடை கொண்டதாகும். 2 கிலோ எடை கொண்ட வெள்ளி குத்துவிளக்குகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் கொண்டுவரப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு ஓட்டம் பிடித்த நாய் வீட்டை சுற்றி சுற்றி வந்தது.

    வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.கேமிரா கடந்த 7-ந் தேதி வரை மட்டுமே செயல்பட்டு உள்ளது. அதன் பிறகு சி.சி.டி.வி. கேமராக்கள் செயல் படாததால் எந்த காட்சிகளும் பதிவாகவில்லை.

    ராமச்சந்திராள் மகள் வீட்டில் தினமும் தங்குவதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 38 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
    • உரிய வரி செலுத்தாமல் எடுத்து சென்றதால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் பூஞ்சைகாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 40).

    இவர் நேற்று ரெயில் நிலையத்தில் மங்களூர் செல்வதற்காக நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த ரெயில்வே போலீசார் வெங்கடாசலபதி வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அதில் வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மங்களுருக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்குரிய உரிய ஆவணம் இல்லை.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் சேலம் வணிகவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்ததில் 38 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். உரிய வரி செலுத்தாமல் எடுத்து சென்றதால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • காவல்காரர் ஒருவர் பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வையிட்டு செல்வது வழக்கம்.

    பேராவூரணி:

    பேராவூரணி பேரூராட்சி நாட்டா ணிக்கோட்டையில் ஏற்கனவே இரண்டுமுறை திருடுபோன ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மூன்றாவது முறையாக வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.

    ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன் (70) வடக்கு நாட்டாணி க்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அடிக்கடி மகளை பார்ப்பதற்காக பெங்களூர் சென்றுவி டுவார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைப்பூட்டிவிட்டு பெங்களூர் சென்றிரு ந்தபோது இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து வெ ங்ட்ரா மன் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி விட்டார்.

    வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காமல் பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெங்கட்ராமன் பெ ங்களூர் சென்றுவிட்டார். காவல்காரர் ஒருவர்பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வை யிட்டு செல்வதுவழக்கம். இந்நிலை யில் ஞாயிற்று க்கிழமை அதிகாலை, பெங்களூரில் இருந்த வெங்கட்ராமன் மகள், சிசிடிவியை தனது மொபைல் போன் மூலம் பார்த்த போது, அதிகாலை 2:20 மணிக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெங்களூ ரில் இருந்த அவர் நாட்டா ணிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தகவல் தெரிவித்து அதன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார்திறந்து கிடந்த வீட்டை பார்வையி ட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் பீரோ, அலமாரியில் பொருட்கள் இருக்கிறதா என தேடிப்பார்த்தது பதிவாகி இருந்தது.பேராவூரணி காவல்நிலை யத்தில் போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் இரவு ரோந்து பணிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளதால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

    எனவே போலீஸ் நிலையத்திற்கு தேவையான போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×