search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி விழாவை முன்னிட்டு  வடமாநிலங்களுக்கு செல்லும் சேலம் வெள்ளி பொருட்கள்
    X

    நவராத்திரி விழாவை முன்னிட்டு வடமாநிலங்களுக்கு செல்லும் சேலம் வெள்ளி பொருட்கள்

    • அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
    • இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    சேலம்:

    வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் சேலத்தில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்குகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி வெள்ளிப் பொருட்கள் கேட்டு வட மாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இதனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நவராத்திரி விழாவின் போது வடமாநிலங்களில் பெண்கள் லைட் வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் வாங்குவார்கள். இதையொட்டி வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் தெரிவித்தார்.

    Next Story
    ×