search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிவிபத்து"

    • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
    • அதிகமான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது.

    இங்குள்ள குடோனில், தயாரான பட்டாசுகளை சேமித்து வைப்பது வழக்கம். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து உள்ளனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின.

    இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி (வயது 53), பள்ளூரை சேர்ந்த முருகன் (50), குருவிமலையை சேர்ந்த தேவி (34), காஞ்சிபுரத்தை சேர்ந்த சுதர்சன், குருவிமலை முருகன் கோவிலை சேர்ந்த சசிகலா (35), காஞ்சிபுரம் அருகே வளர்த்தோட்டத்தை சேர்ந்த கங்காதரன் (68), அவரது மனைவி விஜயா (38), காஞ்சிபுரத்தை சேர்ந்த கவுதம் (15), குருவிமலையை சேர்ந்த கோட்டீஸ்வரி (48) என மொத்தம் 9 பேர் பலியானார்கள்.

    வெடிகள் வெடித்து சிதறியதில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. பலரது உடல்கள் சிதறி வீசப்பட்டு கிடந்தன. மேலும் வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் வெடிவிபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பட்டாசுகள் வெடித்து சிதறியபோது அதன் சத்தம் சுமார் 3 கி.மீட்டர் தூரத்துக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். வெடிகள் வெடித்த அதிர்வில் குருவிமலை பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. வெடிவிபத்து அதிர்ச்சியில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை.

    இதற்கிடையே குருவிமலை, வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிக அளவு பட்டாசு மூலப்பொருட்களை குடோனில் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்களை பயன்படுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    இது தொடர்பாக வேலூர் மண்டல தீயணைப்புத்துறை இயக்குனர் சரவணகுமார் கூறும்போது:-

    இந்த பட்டாசு ஆலைக்கு 2024-ம் ஆண்டு வரை உரிமம் உள்ளது. பட்டாசு குடோனில் அதிக வெப்பநிலை, மூலப்பொருட்கள் உராய்வால் ரசாயன மாற்றம் மற்றும் மருந்து பொருட்களை கையாளுதல் தவறு உள்ளிட்டவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    பட்டாசு ஆலையில் அதிகமான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் வெடிவிபத்து ஏற்பட்ட போது அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    • மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி கலெக்டர் மூலம் அறிந்தேன்.
    • விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கத்துக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், சிகரலஅள்ளி தரப்பு, நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரியின் மனைவி முனியம்மாள் (வயது 65) மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த பூபதியின் மனைவி பழனிம்மாள், (வயது 50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி கலெக்டர் மூலம் அறிந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னுமாலையின் மகன் சிவலிங்கத்துக்கு (வயது 52) சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • அருகில் உள்ள வங்கியின் கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.

    டாக்கா:

    வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் சானிடரி பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் உள்ளன. தரைத்தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

    • பட்டாசு ஆலை அருகே குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
    • விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு உரிய லைசென்ஸ் இல்லை என்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    எர்ணாகுளத்தை அடுத்த வரபுழா பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.

    இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் நேற்று தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை திடீரென இந்த ஆலையில் இருந்து கரும்புகை ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் ஆலையின் பட்டாசு தயாரிக்கும் பகுதியில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.

    இதில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது பட்டாசு ஆலை அருகே குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

    இதற்கிடையே வெடிவிபத்து நடந்த இடத்தில் மலையாள திரைப்பட நடிகர் தர்மஜனும் இருந்துள்ளார். ஆலை வெடித்து சிதறியபோது அவர் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக தெரிவித்தார்.

    விபத்து பற்றி தெரியவந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    இதில் விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு உரிய லைசென்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் சிக்கி பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான செர்பியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.

    இந்த விபத்தில் 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 7-ம் தேதி தலைநகர் மாஸ்கோ அருகிலுள்ள யெப்ரெமோவ் நகரில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    • பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
    • வெடி விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வடக்காஞ்சேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

    அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருந்ததா? விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரவியின் குடும்பத்தினருக்கும் ரூ.3 லட்சம் நிதியுதவி

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல்தளத்தில் வசித்து வந்த ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரவியின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த சாமுவேல் ஜெயராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
    • காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு

    மதுரை:

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

    • நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.
    • வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் காளியம்மன் கோவில் அருகே கோபாலன்பட்டியை சேர்ந்த திருப்பதி (வயது 29) என்பவர் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படும் குழாய்கள் தயாரித்து வந்தார்.

    அந்த இடத்தில் உரிய அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக பேன்சி ரக பட்டாசுகளையும் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் திருப்பதி மற்றும் 17 வயது சிறுவன் என இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி பரிதாபமாக இறந்தார்.

    வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
    • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.

    இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கர்னூல் :

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் இந்த குவாரியில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

    இதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    கல்குவாரி வெடிவிபத்தினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

    அதிக அளவிலான டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தியதே வெடி விபத்திற்கு காரணம் எனவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
    ×