search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி கைது"

    • மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து சோதனை நடத்தினர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்றுதிருச்சி ரோடு ஹைவே காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அதில், அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 50) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    • பாண்டியன் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, ேபாைத பொருட்கள் விற்பவர்களை கைது செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் நடந்த அதிரடி சோதனையில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    எனினும் சிதம்பரம் பரங்கிபேட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார்
    • முஸ்தாக் கான் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராய்கர்:

    சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுத்து முஸ்தாக் கானை கைது செய்தனர்.

    அவர் மீது 153 'ஏ' பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவரது வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மாட்டு வியாபாரியான சேகர் என்பவர் 10 மாடுகளை விலைக்கு வாங்கி உள்ளார்.
    • சேகர் வழங்கிய காசோலையை முருகன் வங்கியில் செலுத்தி உள்ளார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள அண்ணாமலைபுதூரை சேர்ந்த முருகன் (வயது40). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

    மாடு விற்பனை

    இவரிடம் சங்கரன் கோவிலை அடுத்த கோமதிபுரம் 1-வது தெருவை சேர்ந்த மாட்டு வியாபாரியான சேகர் என்பவர் 10 மாடுகளை விலைக்கு வாங்கி உள்ளார்.

    இதற்காக ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் விலை பேசிமுடித்து முன்பணமாக ரூ. 45 ஆயிரத்தை சேகர் கொடுத்துள்ளார். மீதி பணத்திற்கு 5 காசோலைகள் மூலம் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை நிரப்பி கொடுத்துவிட்டு 10 மாட்டை வாங்கி சென்றுள்ளார்.

    மோசடி

    இந்நிலையில் சேகர் வழங்கிய காசோலையை முருகன் வங்கியில் செலுத்தி உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கு கடந்த ஆண்டே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். 

    • கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனை நடத்தினார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் பொன்ரங்க மூப்பனார் தெருவில் செயல்பட்டு வரும் ஒரு செல்போன் கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் ராம்ஜி (வயது 24), அங்கு வேலை பார்த்த சூர்யா (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார். அதில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் மதுரை பேரையூரை அடுத்த பெரியகடை பகுதியைச் சேர்ந்த கணேசன் (34) என்பது தெரியவந்தது.

    • காரில் இருந்த பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை கைது செய்தனர்.
    • வியாபாரியிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு காரில் மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து காரில் இருந்த பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பெங்களூரில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    சாராயம் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் உட்கோட்டம் ஒலக்கூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஆட்சிப்பாக்கம் பகுதியில் சாராய விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சாராயம் விற்றதாக கீழ் மண்ணூர் கிராமத்தை சேர்ந்தராஜ் என்பவரிடம் புதுவை மாநில சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

    • குறைந்த விலையில் நூல் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் பணம் மோசடி செய்த வியாபாரி.
    • போலீசார் வியாபரியை கைது செய்து வேறு யாரிடமாவது பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த சசிகுமார் மனைவி ராஜலெட்சுமி (வயது 45). ஜவுளி மற்றும் நூல் வியாபாரம் செய்து வந்தனர். தங்கள் வியாபாரம் தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த ராஜா (வயது 48) என்பவரை அணுகி நூல் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர்.

    அவரும் வட மாநிலங்களில் தனக்கு பல வியாபாரிகளை தெரியும் என்றும் குறைந்த விலையில் நூல் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதன்படி ரூ.54 லட்சத்தை ராஜாவிடம் ராஜலெட்சுமி கொடுத்துள்ளார். ஆனால் சொன்னது போல் அவர் நூல் வாங்கி தரவில்லை.

    பல முறை கேட்டும் முறையான பதில் வராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசிகுமார் மற்றும் ராஜலெட்சுமி தாங்கள் கொடுத்த பணத்தையாவது திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு பணமும் தர முடியாது என்றும், இனிமேல் போன் செய்தால் உங்கள் மீது புகார் செய்து விடுவேன் என ராஜா மற்றும் அவரது மனைவி, தாய் ஆகியோர் மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து ராஜலெட்சுமி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் டி.எஸ்.பி. இமானுவேல் ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், அய்யனார் ஆகியோர் மோசடி செய்த ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர்.

    அவரது செல்போன் எண்ணை வைத்து தேடி வந்த போது அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்துள்ளார்.

    இந்நிலையில் டெல்லியில் அவர் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை இன்று திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் வேறு யாரிடமாவது பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
    • சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    மதுரை மாவட்டம் எம்.கல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 36). இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 15 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுவனிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

    ×