search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.54 lac cheating case"

    • குறைந்த விலையில் நூல் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் பணம் மோசடி செய்த வியாபாரி.
    • போலீசார் வியாபரியை கைது செய்து வேறு யாரிடமாவது பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த சசிகுமார் மனைவி ராஜலெட்சுமி (வயது 45). ஜவுளி மற்றும் நூல் வியாபாரம் செய்து வந்தனர். தங்கள் வியாபாரம் தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த ராஜா (வயது 48) என்பவரை அணுகி நூல் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர்.

    அவரும் வட மாநிலங்களில் தனக்கு பல வியாபாரிகளை தெரியும் என்றும் குறைந்த விலையில் நூல் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதன்படி ரூ.54 லட்சத்தை ராஜாவிடம் ராஜலெட்சுமி கொடுத்துள்ளார். ஆனால் சொன்னது போல் அவர் நூல் வாங்கி தரவில்லை.

    பல முறை கேட்டும் முறையான பதில் வராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசிகுமார் மற்றும் ராஜலெட்சுமி தாங்கள் கொடுத்த பணத்தையாவது திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு பணமும் தர முடியாது என்றும், இனிமேல் போன் செய்தால் உங்கள் மீது புகார் செய்து விடுவேன் என ராஜா மற்றும் அவரது மனைவி, தாய் ஆகியோர் மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து ராஜலெட்சுமி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் டி.எஸ்.பி. இமானுவேல் ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், அய்யனார் ஆகியோர் மோசடி செய்த ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர்.

    அவரது செல்போன் எண்ணை வைத்து தேடி வந்த போது அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்துள்ளார்.

    இந்நிலையில் டெல்லியில் அவர் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை இன்று திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் வேறு யாரிடமாவது பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    ×