search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dealer arrested"

    • போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    • பாண்டியன் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, ேபாைத பொருட்கள் விற்பவர்களை கைது செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் நடந்த அதிரடி சோதனையில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    எனினும் சிதம்பரம் பரங்கிபேட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சாராயம் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் உட்கோட்டம் ஒலக்கூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஆட்சிப்பாக்கம் பகுதியில் சாராய விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சாராயம் விற்றதாக கீழ் மண்ணூர் கிராமத்தை சேர்ந்தராஜ் என்பவரிடம் புதுவை மாநில சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

    விளாத்திகுளத்தில் கிட்டங்கியில் பதுக்கி வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் கிட்டங்கியில் பதுக்கி வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கனிராஜ். இவருடைய மகன் ஜெயராஜ் (வயது 45). அவர் மிட்டாய், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி. வெளியூர்களில் இருந்து மொத்தமாக வாங்கி வரும் பொருட்களை விளாத்திகுளம் கீழரத வீதியில் உள்ள கிட்டங்கியில் வைத்து, சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருடைய கிட்டங்கியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அவைகள் வெளியூர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனையடுத்து போலீசார் அந்த புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மாதவரத்தில் ரூ.16 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் மனைவியை தேடி வருகிறார்கள்.

    மாதவரம்:

    மாதவரம் பால்பண்ணை பத்மகிரி நகரில் வசித்து வருபவர் பாலசிங்கம். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜன், அவரது மனைவி சோபியா ஆகியோர் கோதுமை, பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினர்.

    மேலும் தொழிலில் வரும் லாபத்தில் 1 சதவீதம் தருவதாகவும் சொல்லி இருந்தார்கள். ஆனால் கடன் வாங்கி 2 ஆண்டுகள் ஆகியும் பணத்தை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை.

    இதுபற்றி பாலசிங்கம் கேட்டபோது அவரை ஜெயராஜனும், அவரது மனைவியும் மிரட்டியதாக தெரிகிறது.

    இதுகுறித்து பாலசிங்கம் மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாதவரம் பகுதியில் சுற்றிய ஜெயராஜனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது வியாபாரம் செய்வதற்காக வாங்கிய பணத்தை ஆடம்பர செலவு செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவரது மனைவி சோபியாவை மாதவரம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 மூடை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.
    அருப்புக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் பண்டல், பண்டல்கலாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவீரன் தலைமையில் போலீசார் அருப்புக்கோட்டையில் முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மேலரத வீதியில் வியாபாரி மணி முத்துகுமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அங்கு 5 மூடை புகையிலை பொருட்கள் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மணிமுத்து குமாரை கைது செய்தனர்.
    ×