என் மலர்
செய்திகள்

மாதவரத்தில் ரூ.16 லட்சம் மோசடி: வியாபாரி கைது
மாதவரம்:
மாதவரம் பால்பண்ணை பத்மகிரி நகரில் வசித்து வருபவர் பாலசிங்கம். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜன், அவரது மனைவி சோபியா ஆகியோர் கோதுமை, பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினர்.
மேலும் தொழிலில் வரும் லாபத்தில் 1 சதவீதம் தருவதாகவும் சொல்லி இருந்தார்கள். ஆனால் கடன் வாங்கி 2 ஆண்டுகள் ஆகியும் பணத்தை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை.
இதுபற்றி பாலசிங்கம் கேட்டபோது அவரை ஜெயராஜனும், அவரது மனைவியும் மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து பாலசிங்கம் மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாதவரம் பகுதியில் சுற்றிய ஜெயராஜனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது வியாபாரம் செய்வதற்காக வாங்கிய பணத்தை ஆடம்பர செலவு செய்து விட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரது மனைவி சோபியாவை மாதவரம் போலீசார் தேடி வருகிறார்கள்.






