search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு தாக்கி 3 பேர் பலி"

    பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #bmw3series



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 3 சீரிஸ் பேஸ் கிரான் டூரிஸ்மோ, 320d GT ஸ்போர்ட் வேரியன்ட் மாடலை பி.எம்.டபுள்யூ. அறிமுகம் செய்துள்ளது.

    புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஜி.டி. பார்க்க லக்சரி லைன் மற்றும் டாப்-என்ட் M ஸ்போர் வேரியன்ட் போன்றே காட்சியளிக்கிறது. 3 சீரிஸ் ஜி.டி. ஸ்போர்ட் மாடலின் ஏர் இன்டேக்கள் சாட்டைனஸ் செய்ய்பட்ட அலுமினியம் மற்றும் கருப்பு நிற கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட ஒன்பது ஸ்லாட் கிட்னி கிரில் மூலம் பெறுகிறது. இந்த இரு அம்சங்களும் M ஸ்போர்ட் மாடலில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர முன்புறம், பின்பக்கம், முன்பக்கம் ஹை-கிளாஸ் வடிமைப்பு அம்சங்கள், கதவின் சில் ஃபினிஷர்களில் பி.எம்.டபுள்யூ. பிரான்டிங் கொண்ட அலுமினியம் இன்சர்ட்கள், டெயில் பைப் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் உள்புறம் லெதர்-ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங்வீல் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு இருக்கிறது.



    பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஸ்போர்ட் ட்ரிம் மாடலில் ஹை-ரெசல்யூஷன் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. உள்புறம் புதிய 3 சீரிஸ் மாடலில் ஆஷ் கிரெயின் ஃபினிஷ் செய்யப்பட்ட மர வடிவமைப்பு கொண்டுள்ளது. இருக்கைகள் சென்சடாக் பிளாக், ரெட் ஹைலைட்கள், சென்சடாக் வெனிடோ பெய்க் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 

    ஆல்பைன் வைட், பிளாக் சஃபையர் (மெட்டாலிக்) மற்றும் இம்பீரியல் புளு பிரில்லியன்ட் எஃபெக்ட் (மெட்டாலிக்) என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஜி.டி. மாடலில் 2.0- லிட்டர் நான்கு-சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இன்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்கியூ செயல்திறன், 8-ஸ்பீடு ஸ்டெப்டிரோனிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.7 நொடிகளில் செல்லும்.

    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ விலை ரூ.46.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    வடகிழக்கு டெல்லியில் 26 துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்களுடன் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #hugecacheofarms #ThreeheldUsmanpur
    புதுடெல்லி:

    வடகிழக்கு டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில் உள்ள இரு வீட்டில் நேற்று மாலை போலீசார் நடத்திய சோதனையில் 26 துப்பாக்கிகள், 800 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த சலீம்(47), நசீம்(35), சைஸான்(23) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதான மூவரும் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள வடகிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் அட்டுல் குமார் தாக்குர், இவர்களில் சலீம் என்பவன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 8 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவன் என குறிப்பிட்டார்.  #hugecacheofarms #ThreeheldUsmanpur
    காட்டுமன்னார் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி அவசியமாகும். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி போதிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு-புத்தகம், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், பாட திட்டத்தில் மாற்றம், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் என பல திட்டங்களை சொல்லலாம்.

    இருப்பினும் அரசு பள்ளிகள் மீதான பெற்றோரின் மனநிலை இன்னும் மாறா தழும்பாக தான் இருக்கிறது. இதனால் இன்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.

    அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும், தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வகுப்பறைகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட ஒருசில அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    1946-ம் ஆண்டு காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பால் மாணவர் சேர்க்கை குறைய தொடங்கியது. இதன் விளைவாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றனர். இந்த நிலையில் கடந்த கல்வியாண்டில் 476 மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்றனர்.

    காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியை படத்தில் காணலாம்.

    தற்போது 374 மாணவர்கள் தான் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 7-ம் வகுப்பில் 5 மாணவர்களும், 8-ம் வகுப்பில் 20 மாணவர்களும், 9-ம் வகுப்பில் 40 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 56 மாணவர்களும், பிளஸ்-1 வகுப்பில் 119 மாணவர்களும், பிளஸ்-2-வில் 131 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் உள்பட 21 ஆசிரியர்களை கொண்ட இந்த பள்ளியில் சில வகுப்புகளில் ஒற்றை எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் மட்டும் தற்போது 26 உயர்நிலைப்பள்ளிகள், 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் அடங்கும்.

    இதனால் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்தவித பயனும் இல்லை. 21 வகுப்பறைகள் கொண்ட இந்த பள்ளியில் குறைந்த அளவிலான மாணவர்கள் இருப்பதால் பல வகுப்பறைகள் காலியாக இருப்பதை காணமுடிகிறது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என்பது ஒரு முக்கிய காரணமாகும் என்றனர்.

    இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பா? அல்லது அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்ததா? என கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூலித்தொழிலாளி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததால் தனி மருத்துவர்கள் கொண்ட குழு கிசிச்சை அளித்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் தாலுகா கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்சினி (வயது25) நிறைமாத கர்ப்பிணியான இவர் மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் பிரியதர்சினிக்கு கருவில் 3 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

    திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் பாக்கியவதி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

    இந்நிலையில் 8 வது மாதம் பிரியதர்சினிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவசர சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முதலில் 1.300 கிலோ எடையில் பெண் குழந்தை, அடுத்த நிமிடம் 1.680 கிலோ எடையில் ஆண் குழந்தையும், அடுத்த ஒரு நிமிடத்தில் 1.250 கிலோ எடையில் பெண் குழந்தையும் பிறந்தது.

    இந்த 3 குழந்தைகளுக்கும் மூச்சுதிணறல், மஞ்சள் காமாலை நோயுடன் பிறந்த தால் தனி மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பல்வேறு நவீனசிகிச்சைகள் தொடர்ந்து 21 நாட்கள் அளிக்கப்பட்டது. தற்போது 3 மூன்று குழந்தைகளும் இயல்பான நிலைக்கு திரும்பி உள்ளன.

    இது குறித்து கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ‘‘ இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ. 9 லட்சம் செலவாகும். ஆனால் அனைத்து நவீன சிகிச்சைகளையும் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.

    அரியானா அரசு அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டுள்ளது. #HaryanaGovt #SportsDevelopmentFund

    சண்டீகர்:

    அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டுள்ளது.

    அரியானா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டு வீரர்கள் தொழில் அல்லது பங்கேற்பாளர்களாக பங்குபெறும் போட்டிகளுக்கு எடுக்கும் அசாதாரண விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படாமல், முழு வருமானத்தையும் விளையாட்டு சங்கத்துக்கு மாற்றப்படும், என கூறியுள்ளது.

    அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனையான கீதா போகத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த திட்டம் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை என்பதால் அவர்களை இந்த திட்டமானது பாதிக்கும் என கூறியுள்ளார். 

    சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 22 பதக்கங்கள் வென்று அசத்தினர். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதே சமயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை குறைக்க மாநில அரசு திட்டமிட்டது. இதன்காரணமாக வீரர்கள் அந்த விழாவில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #HaryanaGovt #SportsDevelopmentFund
    மேற்கு வங்காள மாநிலத்தில் 32 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவினர் மடக்கி பிடித்தனர்.
    கொல்கத்தா:

    சீனாவில் இருந்து சிக்கிம் வழியாக தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு வங்காளத்தில் வருவாய் பிரிவினர் தீவிர ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர்.



    அப்போது செவோக் பகுதியில் காரில் தங்கம் கடத்த முயன்ற 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 32 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    விசாரணையில், தங்கம் கடத்தியவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அக்‌ஷய் மகர், தானிஜி சாகேப் பாபர் மற்றும் பிரவீன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். #Tamilnews
    உத்தரகாண்ட் மாநிலத்தில் விளையாடும்போது தானிய குதிருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சு திணறி பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகர் மாவட்டத்தின் தார்குலா பகுதியில் அமைந்துள்ள கும்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் நிஷா(10), சப்னா (7), கார்த்திக் (5).

    இவர்கள் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்றனர். வீட்டில் தாத்தா மட்டும் இருந்தார். சிறிது நேரம் கழித்து தாத்தா மாலை உணவுக்காக குழந்தைகளை தேடியுள்ளார். அவர்கள் அங்கு இல்லாததை கண்டு பதறிய அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

    அவர்கள் வீட்டில் தேடும்போது, அங்கிருந்த பெரிய தானிய குதிர் ஒன்றில் மூன்று குழந்தைகளும் இருந்ததை கண்டனர். அதிலிருந்து வெளியே எடுக்கும்போது அவர்கள் இறந்துபோனது தெரிந்தது.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் குழந்தைகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    விசாரணையில், குழந்தைகள் மூவரும் தானிய குதிரில் ஒளிந்து கொண்டு விளையாடியதும், அங்கு சிக்கி மூச்சு திணறி இறந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 114 மாணவர்களும், 13 ஆயிரத்து 466 மாணவிகளும் என 24 ஆயிரத்து 580 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.

    இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 530 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 110 பேரும் ஆவார்கள். மொத்த தேர்ச்சி விகிதம் 96.18 ஆகும்.

    மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறியதாவது-

    திருப்பூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 580 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.18 ஆகும்.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 8-வது இடத்தில் இருந்தது.

    திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடிக்க காரணமான முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

    கடந்த ஆண்டு அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தரமான ஆசிரியர்களை கொண்டு ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற உயர் கல்விக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் 5 மாணவர்கள் ஐ.ஐ.டி. முதல் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×