search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எம்.டபுள்யூ."

    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தற்போது இசட் 4 ரோட்ஸ்டர் எனும் சொகுசு கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    சொகுசு கார்களை தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தற்போது இசட் 4 ரோட்ஸ்டர் எனும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2 வகையான என்ஜினைக் கொண்ட இரு மாடல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது பி.எம்.டபுள்யூ. இசட் 4. எஸ். டிரைவ் 2.ஓ.ஐ. (விலை ரூ.64,90,000) எனும் ஒரு மாடலும் பி.எம்.டபுள்யூ. இசட்4 எம்4 ஓ.ஐ. (ரூ.78,90,000) எனும் மற்றொரு மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    ஸ்போர்ட் மாடல் காராக வெளியாகி இருக்கும் இந்தக் காரின் மேற்கூரை திறந்து மூடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டனை அழுத்தினால் 10 வினாடிகளில் இது மூடிக்கொள்ளும். இதன் இருக்கையை கூட சவுகரியத்திற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். அதுவும் பட்டனை அழுத்தினாலே போதுமானது. இதுவும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இருவர் பயணிக்கும் வகையில் மேற்கூரை தேவைக்கேற்ப திறந்து மூடும் வகையில் (கன்வெர்டிபிள் மாடல்) இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முன்பகுதி, பக்கவாட்டுப் பகுதிகளில் ஏர் பேக் விரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.எஸ். வசதி உள்ளது. இதனால் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.



    7 சீரிஸ் பிளக் அன்ட் ஹைபிரிட்: பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடலில் பிளக் இன் ஹைபிரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் 745 எல்.இ. பிளக்-இன் ஹைபிரிட் என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன.

    இது முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்டு முழு காராக இறக்குமதி செய்யப்படுகிறது. பின் சக்கரங்களுக்கான ஸ்டீரிங் வசதி அல்லது பி.எம்.டபுள்யூ.வின் விசேஷ வடிவமைப்பான இன்டக்ரெல் ஆக்டிவ் ஸ்டீரிங் வசதியோடு வந்துள்ளது. இது 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. 

    இந்த என்ஜின் 286 ஹெச்.பி. திறனும் 450 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டது. பின் இருக்கையின் அடிப்பகுதியில் 12 கிலோவாட் பேட்டரி உள்ளது. எலெக்ட்ரிக் மோட் வசதியை தேர்வு செய்தால் மட்டுமே பேட்டரியிலிருந்து கார் இயக்கத்துக்கான மின்சாரம் கிடைக்கும். 

    இந்த பேட்டரி 55 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 110 கி.மீ. வேகம் வரை செல்ல முடியும். இதில் மிகச் சிறப்பான ஆடியோ சிஸ்டம் உள்ளது. பிரீமியம் மாடலாக அறிமுகமாக உள்ள இந்த காரின் விலை ரூ.1.5 கோடி இருக்கும் என தெரிகிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் 2019 எக்ஸ்5 காரை அறிமுகம் செய்துள்ளது.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதிய தலைமுறை எக்ஸ்5 காரை இந்தியவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. எஸ்.யு.வி. காரின் விலை ரூ.72.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் மொத்தம் 12 வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அவற்றில் புதிய தலைமுறை எக்ஸ்5 மாடலும் ஒன்றாகும்.

    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 இருவித டீசல் மாடல்கள்- பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ்30டி ஸ்போர்ட் மற்றும் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ்30டி எக்ஸ்-லைன் கிடைக்கிறது. பெட்ரோல் வேரியண்ட் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ் 40i எம் ஸ்போர்ட் விலை ரூ.82.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    புதிய பி.எம்.டபுள்யூ. கார் இதுவரை வெளியான எக்ஸ்5 மாடல்களில் பெரிய கார் ஆகும். இந்த கார் 35 எம்.எம். நீளமாகவும், 32 எம்.எம். அகலமாகவும், 11 எம்.எம். உயரமாக இருக்கிறது. இருசக்கரங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய காரின் பூட் ஸ்பேஸ் 645 லிட்டர்களாக இருக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. மாடலின் உள்புறம் மற்ற மாடல்களை போன்று வழங்கப்படுகிறது. இது பி.எம்.டபுள்யூ. லைவ் காக்பிட் புரோஃபஷனல் டிஸ்ப்ளே என அழைக்கப்படுகிறது. இத்துடன் ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகின்றன.

    மற்ற பி.எம்.டபுள்யூ. மாடல்களை போன்று புதிய காரிலும் வாய்ஸ் கமாண்ட் மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கேபின் லெதர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபோர்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப், கார்பெட் லைட், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் கியர் செலக்டர் லைட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய அட்வன்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் எஃப் 850 ஜி.எஸ். அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். மாடலின் விலை ரூ.15.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் கூர்மையான வடிவமைப்பு மற்றும் முந்தைய மாடல்களை விட சிறப்பான ஆஃப்-ரோடிங் வசதிகளுடன் கிடைக்கிறது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உதிரிபாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படுகிறது.



    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஃப் 850 ஜி.எஸ். அட்வென்ச்சர் மாடலில் பெரிய விண்ட்-ஷீல்டு, முன்புறம் அகலமான பீக், புதிய வடிவமைப்பு கொண்ட ரேடியோட்டர் ஷிரவுட், பெரிய லக்கேஜ் ரேக் மற்றும் என்ஜின் கார்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இவற்றுடன் பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். மாடலில் 23-லிட்டர் பெட்ரோல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டான்டர்டு மாடலில் 15 லிட்டர் டேன்க் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். மாடலில் 853 சிசி வாட்டர்-கூல்டு பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கபப்ட்டுள்ளது.

    இந்த என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர் @8000 ஆர்.பி.எம். மற்றும் 86 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறம் 21-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச் ஸ்போக் சக்கரங்களை கொண்டிருக்கிறது. 



    சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் இன்வெர்ட்டெட் போர்க்ஸ், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டூயல் 305 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 265 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் டூயல்-சேனல் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ்., குரூஸ் கண்ட்ரோல், டைனமிக் இ.எஸ்.ஏ., கியர் ஷிஃப்ட் அசிஸ்ட், இரண்டு டிரைவிங் மோட்கள் மற்றும் 6.5 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சீரிஸ் 3 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #BMW



    சொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் நீளமான சக்கர பகுதிகளைக் கொண்ட புதிய ரக மாடலை வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. 

    இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புதிய பி.எம்.டபுள்யூ. காரில் L வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 3டி டெயில்-லேம்ப்கள், தடிமனான பம்ப்பர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    சமீபத்தில் இந்நிறுவனம் 3 சீரிஸ் வரிசையில் 7-வது தலைமுறை கார்களை அறிமுகப்படுத்தியது. அவற்றில் சீன சந்தையைக் குறிவைத்து தற்போது இப்புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் வழக்கமான அளவை விட 41 மி.மீ. அதிகமாகும். அதாவது சக்கரங்கள் 2,851 மி.மீ. சுற்றளவு கொண்டது. இந்தக் காரின் நீளம் 4,719 மி.மீ., அகலம் 1,827 மி.மீ., உயரம் 1,459 மி.மீ. ஆகும். 



    இதில் நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் நீளம் அதிகமாக உள்ளதால் முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் இடையில் அதிக இடைவெளி தரப்பட்டுள்ளது. இதனால் சவுகரியமாக பயணிக்க முடியும். வான் அழகை ரசிக்க கண்ணாடியால் ஆன மேற்கூரை (சன்-ரூஃப்) வழங்கப்பட்டுள்ளது.

    இதில் பி.எம்.டபுள்யூ.வின் பர்சனல் அசிஸ்டென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் பல டிஜிட்டல் சேவைகள் உள்ளன. குரல் வழி கட்டுப்பாட்டு வசதியும் இதில் உள்ளது. இந்தியாவில் சமீபத்தில்தான் பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான்ட் டுரிஸ்மோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்புதிய மாடல் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் மே 16 ஆம் தேதி இந்நிறுவனம் பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 5 மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே 3 சீரிஸ் மாடல் அறிமுகம் இருக்கும் என்று தெரிகிறது.

    புகைப்படம் நன்றி: Indianautosblog
    ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. அசத்தல் அம்சங்கள் நிறைந்த 620டி கிரான் டுரிஸ்மோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #BMW



    ஆடம்பர சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதியதாக 620டி கிரான் டுரிஸ்மோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் வரிசையில் இது அறிமுகமாகி இருக்கிறது. ட்வின் டர்போ தொழில்நுட்பத்தை கொண்ட புதிய கார் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. 

    மிகச் சிறப்பான வடிவமைப்பு, சவுகரியமான இடவசதி, நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு ஏற்படாத தன்மை இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இந்த மாடல் கார்கள் சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள பி.எம்.டபுள்யூ. ஆலையில் தயாரானது. சொகுசு ரக செடான் காரில் இது மிக முக்கியமானதாக இடம்பெறும். 

    டீசல் என்ஜினைக் கொண்டிருந்தாலும் இது அதிர்வில்லாத சொகுசான பயணத்தை தரும். இந்தியாவில் இதன் விலை ரூ.63.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மினரல் ஒயிட், கிளேசியர் சில்வர், மெடிட்ரேனியன் புளூ, பர்கண்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது.

    இதன் உள்புறம் சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்காக மென்மையான தோலினால் ஆன இருக்கைகள், மாற்று வண்ணங்களில் இருப்பது இதன் பிரீமியம் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது. பின்இருக்கையில் பயணிப்பவர்கள் மிகவும் சவுகரியமாக அமரும் வகையிலும், கால்களை நீட்டிக் கொள்ளும் வகையில் இடவசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. உயரமானவர்களும் வசதியாக அமரும் வகையில் தலைப் பகுதி மேற்கூரையில் இடிக்காத வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது. 



    இரு பகுதிகளாக விரிவடையும் மேற்கூரை, பின்னிருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். பயணத்தின்போது படங்களை பார்த்து ரசிக்க ஏதுவாக 10.2 இன்ச் அளவில் இரண்டு திரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள புளூரே பிளேயர், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய ஹெச்.டி.எம்.ஐ. இணைப்பு வசதி, எம்.பி.3 பிளேயர் மற்றும் கேம் கன்சோல் ஆகியவற்றை வழங்குகிறது.

    இந்த காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்துகிறது. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 7.9 விநாடிகளில் எட்டிவிடும். இதில் 8 ஸ்டெப்ரோடானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பு வசதிக்கு இதில் 6 ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளன. ஏ.பி.எஸ்., டி.எஸ்.சி. உள்ளிட்டவற்றோடு டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் டெசன்ட் கண்ட்ரோல், பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு, டயர்களில் காற்று முழுவதும் இறங்கினாலும் ஓடக்கூடிய வசதி, விபத்து உணர் சென்சார் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.

    டிஸ்பிளே சாவி, காரினுள் நுழையும்போது தரைப்பகுதி விளக்கு, 10 அங்குல தொடுதிரை, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இத்துடன் ரியர் வியூ கேமரா, பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல், பி.எம்.டபுள்யூ. செயலி மூலம் இணைப்பு ஆகியன இதில் உள்ளன.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புத்தம் புதிய எக்ஸ்5 எஸ்.யு.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BMWX5



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 12 கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

    அந்த வகையில் முதலாவது காராக பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எஸ்.யு.வி. அறிமுகமாக இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த கார் மே மாதம் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டீசல் 

    என்ஜின் மாடலையும் பின்னர் பெட்ரோல் மாடலையும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 



    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 காரில் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய மாடல் கார் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்5 வரிசையில் ஐந்தாவது தலைமுறை மாடலாகும். 

    காரில் இது மிகவும் நீளமானது. இதன் அகலமும், உயரமும் முந்தைய மாடலைக் காட்டிலும் அதிகம். விரிவுபடுத்தப்பட்ட இந்த இடவசதி பயணிகள் சவுகரியமாக பயணிக்க ஏதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 4,921 மி.மீ., அகலம் 1,970 மி.மீ., உயரம் 1,737 மி.மீ. ஆகும். 

    இதன் சக்கரங்கள் 2,975 மி.மீ. அளவில் இருக்கிறது. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. முன்புற மற்றும் பின்புற விளக்குகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. சொகுசாக நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்த எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #BMW



    பி .எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மோட்டார்சைக்கிள் எஸ். 1000 ஆர்.ஆர். மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. இது விரைவில் இந்திய சாலைகளில் சீறிப் பாய உள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் குறைந்த எடை அதிக திறன் கொண்டதாக இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

    999 சி.சி. என்ஜின் கொண்ட இது 13,500 ஆர்.பி.எம். வேகத்தில் 207 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். அதேபோல 11 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் 113 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலை விட இதில் 8 ஹெச்.பி. திறன் அதிகமாகும்.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஷிப்ட் காம் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது 6 கியர்களைக் கொண்டது. அத்துடன் ஏ.பி.எஸ். மற்றும் டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி கொண்டது. நான்கு வகையான டிரைவிங் மோட்கள் (சாலை, மழை, டைனமிக், ரேஸ்) ஆகியன இதில் உள்ளன.

    முன்பகுதியில் 6.5 அங்குல திரை உள்ளது. முந்தைய மாடலை விட 11 கிலோ எடை குறைவு. அதாவது இது 197 கிலோ எடை கொண்டது. இதன் விலை ரூ. 20 லட்சத்துக்குள் இருக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது எக்ஸ்4 ஆடம்பர கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #BMW #Car



    பி.எம்.டபுள்யூ. இந்தியா தனது எஸ்.யு.வி.-கூப் மாடலான எக்ஸ்4 ஆடம்பர காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 துவக்க விலை ரூ.60.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்4 ஆடம்பர கார் எஸ்.யு.வி. மற்றும் ஸ்போர்ட் மாடல்களிடையே அமைந்துள்ளது.

    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 மாடல்களுக்கு மத்தியில் நிலவும் இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய எக்ஸ்4 அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 கார் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர்கள், 19-இன்ச் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. 



    இத்துடன் டூயல்-எக்சாஸ்ட் செட்டப் மற்றும் சப்டைல் ரூஃப்-மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.25 இன்ச் ஐ-டிரைவ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பை உறுதி செய்ய ஆறு ஏர்பேக், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்4 எக்ஸ்-டிரைவ்20டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. 

    இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 3.0 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் எம்2 காம்படிஷன் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் விலை குறைந்த எம் எடிஷன் மாடலாக அமைந்துள்ளது. #BMW



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புது எம்2 காம்படிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எம்2 எடிஷன் கார் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எம் பிரிவின் விலை குறைந்த மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பி.எம்.டபுள்யூ. எம்2 கார் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கிடைக்கிறது. புது பி.எம்.டபுள்யூ எம்2 காம்படிஷன் கார் விலை ரூ.79.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கார் முழுக்க பிளாக் தீம் மற்றும் அட்ஜஸட் செய்யப்பட்ட ஸ்போர்ட் எக்சாஸ்ட் கொண்டுள்ளது.



    எம்2 காம்படிஷன் காரில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 405 பி.ஹெச்.பி. பவர் 550 என்.எம். டார்கியூ, 7-ஸ்பீடு டூயல் கிளஸ்ட் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எம்2 காம்படிஷன் கார் 4.2 நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எம்2 காம்படிஷன் கார் போர்ஷ் கேமென் எஸ், ஃபோர்டு மஸ்டாங், மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. எஸ்.எல்.சி.43, ஆடி ஆர்.எஸ்.5 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. எனினும் போட்டி நிறுவன மாடல்கள் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் விற்பபனை செய்த டீசல் கார்களில் 7900 யூனிட்களை திரும்பப் பெறுகிறது. #BMW



    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த டீசல் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பி.எம்.டபுள்யூ. டீசல் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்ததும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது. 

    அந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதில் கோளாறு இருப்பதாக கண்டறியப்ட்ட சுமார் 7900 கார்களை திரும்பப் பெறுவதாக தற்சமயம் அறிவித்துள்ளது. இந்த கார்கள் 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவற்றில் அக்டோபர் 2011 முதல் ஆகஸ்டு 2016 வரை பி.எம்.டபுள்யூ. உற்பத்தி செய்த 4-சிலிண்டர் மாடல்களும், மார்ச் 2011 முதல் ஜூலை 2015 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்த 6-சிலிண்டர் டீசல் என்ஜின் மாடல்களை திரும்ப பெறுகின்றன. 



    பி.எம்.டபுள்யூ. வாகனங்களில் கண்டறியப்பட்டு இருக்கும் என்ஜின் கோளாறு தீவிரமாகும் பட்சத்தில் கார் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும். சில டீசல் வாகனங்களில் எக்சாஸ்ட் கியாஸ் கூலரில் இருக்கும் கிளைக்கால் கூலிங் எனும் திரவம் லீக் ஆகிறது, இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது என பி.எம்.டபுள்யூ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கார்களை சரி செய்து கொடுக்கும் நோக்கில் பி.எம்.டபுள்யூ. சார்பில் விற்பனையாளர்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கப்படுகிறது. விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்களது வாகனங்கள் சரி செய்யப்படும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது.
    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான டீசர் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. #BMW



    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த டீசல் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்ததும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த கோளாறு தீவிரமாகும் பட்சத்தில் கார் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும்.

    சில டீசல் வாகனங்களில் எக்சாஸ்ட் கியாஸ் கூலரில் இருக்கும் கிளைக்கால் கூலிங் எனும் திரவம் லீக் ஆகிறது, இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது என பி.எம்.டபுள்யூ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கார்களை சரி செய்து கொடுக்கும் நோக்கில் பி.எம்.டபுள்யூ. சார்பில் விற்பனையாளர்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கப்படுகிறது. விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்களது வாகனங்கள் சரி செய்யப்படும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது.



    திரும்பப்பெறப்படும் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டம் சரிபார்க்கப்பட்டு, கோளாறு இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் கார் சரி செய்து வழங்கப்படும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது. 

    முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் சுமார் 4,80,000 வாகனங்கள் இதேபோன்ற பிரச்சனைகளால் திரும்பப்பெறப்பட்டது. ஏற்கனவே தென்கொரியாவில் 30 கார்கள் எரிந்து போனதற்கு பி.எம்.டபுள்யூ. மன்னிப்பு கோரியிருந்தது. 

    தற்போதைய கோளாறு காரணமாக பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சுமார் 16 லட்சம் கார்களை உலகம் முழுவதிலும் இருந்து திரும்பப்பெறுகிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் டீசர் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #BMW



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் மாடல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், புதிய காரின் டீசர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. டீசர் புகைப்படம் தெளிவாக இல்லாத நிலையில், 3-சீரிஸ் மாடல் தெரிகிறது.

    2019 ஜி20 3 சீரிஸ் மாடல் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. இந்நிலையில், லீக் ஆகியிருக்கும் டீசரில் காரின் முன்புறம் அகலமான கிட்னி கிரில் மற்றும் புதிய எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. கிரில் வெளிப்புறத்தில் செரியம் கிரே ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஜி20 3 சீரிஸ் மாடலின் பம்ப்பர் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய மாடலின் கிரில் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை விட வித்தியாசமானதாக இருக்கிறது. பின்புறம் புதிய பம்ப்பர்கள் மற்றும் எல்.இ.டி. டெயில்லைட் டிசைன் செய்யப்பட்டுள்ளது. 3-சீரிஸ் மாடலின் வடிவமைப்பு ஃபிளாக்ஷிப் 8 சீரிஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 



    ஏழாம் தலைமுறை பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் மாடல் புதிய CLAR பிளாட்ஃபார்ம் சாந்து புதிய 5 மற்றும் 7 சீரிஸ் செடான்களை சார்ந்து உருவாக்கப்படுகிறது. புதிய மாடல் முந்தைய வேரியன்ட்டை விட அகலமாகவும், நீலமாகவும் இருக்கும் என்றும் இதன் கேபின் அளவும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய மாடலின் எடை தற்போதைய மாடலை விட 55 கிலோ வரை குறைவாக இருக்கும் என பி.எம்.டபுள்யூ. அறிவித்தது. இத்துடன் பாடி மற்றும் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்களில் ஹேன்ட்லிங் மேவும் மேம்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் மாடலில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் மற்றும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் இந்த கார் 1.5 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் ஹைப்ரிட் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×