search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்து லட்சம் கார்களை திரும்பப்பெறும் பி.எம்.டபுள்யூ.
    X

    பத்து லட்சம் கார்களை திரும்பப்பெறும் பி.எம்.டபுள்யூ.

    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான டீசர் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. #BMW



    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த டீசல் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்ததும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த கோளாறு தீவிரமாகும் பட்சத்தில் கார் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும்.

    சில டீசல் வாகனங்களில் எக்சாஸ்ட் கியாஸ் கூலரில் இருக்கும் கிளைக்கால் கூலிங் எனும் திரவம் லீக் ஆகிறது, இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது என பி.எம்.டபுள்யூ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கார்களை சரி செய்து கொடுக்கும் நோக்கில் பி.எம்.டபுள்யூ. சார்பில் விற்பனையாளர்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கப்படுகிறது. விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்களது வாகனங்கள் சரி செய்யப்படும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது.



    திரும்பப்பெறப்படும் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டம் சரிபார்க்கப்பட்டு, கோளாறு இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் கார் சரி செய்து வழங்கப்படும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது. 

    முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் சுமார் 4,80,000 வாகனங்கள் இதேபோன்ற பிரச்சனைகளால் திரும்பப்பெறப்பட்டது. ஏற்கனவே தென்கொரியாவில் 30 கார்கள் எரிந்து போனதற்கு பி.எம்.டபுள்யூ. மன்னிப்பு கோரியிருந்தது. 

    தற்போதைய கோளாறு காரணமாக பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சுமார் 16 லட்சம் கார்களை உலகம் முழுவதிலும் இருந்து திரும்பப்பெறுகிறது.
    Next Story
    ×