search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 இந்தியாவில் அறிமுகம்
    X

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 இந்தியாவில் அறிமுகம்

    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது எக்ஸ்4 ஆடம்பர கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #BMW #Car



    பி.எம்.டபுள்யூ. இந்தியா தனது எஸ்.யு.வி.-கூப் மாடலான எக்ஸ்4 ஆடம்பர காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 துவக்க விலை ரூ.60.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்4 ஆடம்பர கார் எஸ்.யு.வி. மற்றும் ஸ்போர்ட் மாடல்களிடையே அமைந்துள்ளது.

    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 மாடல்களுக்கு மத்தியில் நிலவும் இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய எக்ஸ்4 அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 கார் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர்கள், 19-இன்ச் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. 



    இத்துடன் டூயல்-எக்சாஸ்ட் செட்டப் மற்றும் சப்டைல் ரூஃப்-மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.25 இன்ச் ஐ-டிரைவ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பை உறுதி செய்ய ஆறு ஏர்பேக், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்4 எக்ஸ்-டிரைவ்20டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. 

    இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 3.0 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    Next Story
    ×