என் மலர்

  நீங்கள் தேடியது "BMW X4"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது எக்ஸ்4 ஆடம்பர கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #BMW #Car  பி.எம்.டபுள்யூ. இந்தியா தனது எஸ்.யு.வி.-கூப் மாடலான எக்ஸ்4 ஆடம்பர காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 துவக்க விலை ரூ.60.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்4 ஆடம்பர கார் எஸ்.யு.வி. மற்றும் ஸ்போர்ட் மாடல்களிடையே அமைந்துள்ளது.

  இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 மாடல்களுக்கு மத்தியில் நிலவும் இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய எக்ஸ்4 அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 கார் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர்கள், 19-இன்ச் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது.   இத்துடன் டூயல்-எக்சாஸ்ட் செட்டப் மற்றும் சப்டைல் ரூஃப்-மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.25 இன்ச் ஐ-டிரைவ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

  பாதுகாப்பை உறுதி செய்ய ஆறு ஏர்பேக், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்4 எக்ஸ்-டிரைவ்20டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. 

  இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 3.0 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் X4 எஸ்.யு.வி. கூப் மாடல் இந்தியாவில் முதல் முறையாக சோதனை செய்யப்படுகிறது. #BMW  இந்தியாவில் முதல் முறையாக பி.எம்.டபுள்யூ. X4 எஸ்.யு.வி. கூப் மாடல் சென்னையில் சோதனை செய்யப்படுகிறது. புது பி.எம்.டபுள்யூ. X4 இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆட்டோமொபைல் சந்தையில் அதிக பிரபலமாகி வரும் எஸ்.யு.வி. கூப் மாடல்களில் பி.எம்.டபுள்யூ. புது மாடலாக X4 அமைவதால், புது காருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. புதிய X4 எஸ்.யு.வி. பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் X3 மற்றும் X5 மாடல்களுக்கு மத்தியில் அறிமுகமாக இருக்கிறது.


  புகைப்படம் நன்றி: Drivespark

  அன்றாட பயன்பாடுகளுடன் வார இறுதிக்கு ஏற்ற ஸ்போர்ட் திறன்களுடன் புது பி.எம்.டபுள்யூ. X4 உருவாகி இருக்கிறது. சமீபத்தில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்2 காம்படிஷன் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையின் சுற்று வட்டாரங்களில் பி.எம்.டபுள்யூ. X4 சோதனை செய்யப்படுவதாக தெரிகிறது.

  சோதனையின் போது கார் மறைக்கப்படாததை பார்க்கும் போது பி.எம்.டபுள்யூ. X4 M30i வேரியன்ட் தெளிவாக தெரிகிறது. புது பி.எம்.டபுள்யூ. X4 முந்தைய X6 போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. கூப் போன்ற ஸ்லோப்பிங் ரூஃப் கொண்டிருக்கும் நிலையில், புது கார் எஸ்.யு.வி. ரகமாகவே இருக்கிறது.  இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. X6 ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இந்த கார் X6 M வெர்ஷன் மட்டுமே கிடைக்கிறது. புகைப்படத்தில் தெரியும் பி.எம்.டபுள்யூ. X4 வடிவைப்பு அம்சங்கள் சர்வதேச மாடலை விட வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

  பி.எம்.டபுள்யூ. X4 M30i வேரியன்ட்டில் 2.0-லிட்டர் ட்வின் பவர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #BMW
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிஎம்டபுள்யூ நிறுவனம் 2019 இசட் 4 ரோட்ஸ்டர் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
  புதுடெல்லி:

  பிஎம்டபுள்யூ நிறுவனம் 2019 இசட்4 ரோட்ஸ்டர் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. முழுமையாய் மறைக்கப்பட்டு இருக்கும் இசட்4 ரோட்ஸ்டர் பிரான்ஸ் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. பிஎம்டபுள்யூ இசட்4 M40i புதிய மாடலின் டாப் என்ட் வேரியன்ட் ஆக வெளியாகும் என்றும் இதில் 6-சிலின்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது.

  இசட்4 டிரைவிங் டைனமிக்-களை சீராக்கி, ஆல்-டிரைவ் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டம்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள் புதிய பிஎம்டபுள்யூ இசட்4 மாடலின் மிகமுக்கிய அம்சமாக இருக்கிறது.

  பிஎம்டபுள்யூ இசட்4 கான்செப்ட் அகிலிட்டி மற்றும் டிரைவிங் டைனமிக்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் ரக ஸ்டிஃப்னஸ் மற்றும் சஸ்பென்ஷன் தலைசிறந்த ஸ்போர்ட் காருக்கு ஏற்ற ஸ்டீரிங் பிரெசிஷன் மற்றும் டிரான்ஸ்வெர்ஸ் அக்செலரேஷன் கொண்டிருக்கும் என பிஎம்டபுள்யூ நிறுவன அப்ளிகேஷன் சஸ்பென்ஷன் பிரிவு தலைவர் ஜோஸ் வேன் தெரிவித்தார்.  சக்திவாயந்த 6-சிலிணட்ர் மோட்டாருடன், இசட்4 மாடலில் லேவெர்டு ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் கன்ட்ரோல் செய்யப்பட்ட டேம்பெர்கள், புதிய முன்பக்க ஆக்சில், M லைட் அலாய் வீல்கள், M ப்ரோட்ஸ் பிரேக் சிஸ்டம், எலெக்ட்ரிக் கன்ட்ரோல் செய்யப்பட்ட பின்புற ஆக்சில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  இன்ஜின் 190 பிஹெச்பி முதல் 425 பிஹெச்பி வரையிலான செயல்திறன் கொண்டிருக்கும். கூடுதலாக வழங்கப்படும் ஹைப்ரிட் இன்ஜின் பவர் மோடில் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. வடிவமைப்பை பொருத்த வரை பிஎம்டபுள்யூ இசட்4 உண்மையான ரோட்ஸ்டர் அம்சங்களுடன் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

  முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் தோற்றம் குறித்த முழு விவரங்கள் அறியப்படவில்லை. புதிய பிஎம்டபுள்யூ இசட்4 இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  ×