search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஎம்டபுள்யூ இசட்4 டீசர் வெளியானது
    X

    பிஎம்டபுள்யூ இசட்4 டீசர் வெளியானது

    பிஎம்டபுள்யூ நிறுவனம் 2019 இசட் 4 ரோட்ஸ்டர் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎம்டபுள்யூ நிறுவனம் 2019 இசட்4 ரோட்ஸ்டர் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. முழுமையாய் மறைக்கப்பட்டு இருக்கும் இசட்4 ரோட்ஸ்டர் பிரான்ஸ் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. பிஎம்டபுள்யூ இசட்4 M40i புதிய மாடலின் டாப் என்ட் வேரியன்ட் ஆக வெளியாகும் என்றும் இதில் 6-சிலின்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது.

    இசட்4 டிரைவிங் டைனமிக்-களை சீராக்கி, ஆல்-டிரைவ் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டம்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள் புதிய பிஎம்டபுள்யூ இசட்4 மாடலின் மிகமுக்கிய அம்சமாக இருக்கிறது.

    பிஎம்டபுள்யூ இசட்4 கான்செப்ட் அகிலிட்டி மற்றும் டிரைவிங் டைனமிக்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் ரக ஸ்டிஃப்னஸ் மற்றும் சஸ்பென்ஷன் தலைசிறந்த ஸ்போர்ட் காருக்கு ஏற்ற ஸ்டீரிங் பிரெசிஷன் மற்றும் டிரான்ஸ்வெர்ஸ் அக்செலரேஷன் கொண்டிருக்கும் என பிஎம்டபுள்யூ நிறுவன அப்ளிகேஷன் சஸ்பென்ஷன் பிரிவு தலைவர் ஜோஸ் வேன் தெரிவித்தார்.



    சக்திவாயந்த 6-சிலிணட்ர் மோட்டாருடன், இசட்4 மாடலில் லேவெர்டு ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் கன்ட்ரோல் செய்யப்பட்ட டேம்பெர்கள், புதிய முன்பக்க ஆக்சில், M லைட் அலாய் வீல்கள், M ப்ரோட்ஸ் பிரேக் சிஸ்டம், எலெக்ட்ரிக் கன்ட்ரோல் செய்யப்பட்ட பின்புற ஆக்சில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இன்ஜின் 190 பிஹெச்பி முதல் 425 பிஹெச்பி வரையிலான செயல்திறன் கொண்டிருக்கும். கூடுதலாக வழங்கப்படும் ஹைப்ரிட் இன்ஜின் பவர் மோடில் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. வடிவமைப்பை பொருத்த வரை பிஎம்டபுள்யூ இசட்4 உண்மையான ரோட்ஸ்டர் அம்சங்களுடன் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் தோற்றம் குறித்த முழு விவரங்கள் அறியப்படவில்லை. புதிய பிஎம்டபுள்யூ இசட்4 இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×