என் மலர்
செய்திகள்

ரூ.10 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட் கடத்திய 3 பேர் கைது
மேற்கு வங்காள மாநிலத்தில் 32 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவினர் மடக்கி பிடித்தனர்.
கொல்கத்தா:
சீனாவில் இருந்து சிக்கிம் வழியாக தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு வங்காளத்தில் வருவாய் பிரிவினர் தீவிர ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர்.

அப்போது செவோக் பகுதியில் காரில் தங்கம் கடத்த முயன்ற 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 32 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில், தங்கம் கடத்தியவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அக்ஷய் மகர், தானிஜி சாகேப் பாபர் மற்றும் பிரவீன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். #Tamilnews
Next Story






