search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் சாவு"

    • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி.
    • காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு இளமதி என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது. நந்தகுமாரின் மனைவி சங்கீதா கடந்த 15-ந் தேதி பெருமாபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு திருவிழாவிற்கு சென்று விட்டார். நந்தகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமார் உயிருக்கு போராடியுள்ளார்.

    அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நந்தகுமாரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே நந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாப்பிரெட்டிபட்டி அருகே பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • சாமியாபுரம் கூட்ரோடு வரை உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் இறக்கி விட்டு திரும்பி வீட்டிற்கு வலசையூர் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புக்கரெட்டிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (வயது27).

    இவர் கடந்த 9-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் கோடீஸ்வரி என்பவரை பின்னால் உட்கார வைத்து சாமியாபுரம் கூட்ரோட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டார். பின்னர் விஜய் அங்கிருந்து மீண்டும் வலசையூருக்கு சென்றபோது, வண்டி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வழியில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.

    இதில் பலத்த காயமடைந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜய் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிறந்த நாள் விழாவிற்கு சென்று திரும்பிய போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சங்கர் (வயது 20 ) பலசரக்கு கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் செய்யாறு பகுதியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

    மாமண்டூர் பகுதியில் வரும்போது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த சங்கரை கிராம பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகமாக மது வாங்கி குடித்து விட்டு கடை அருகிலேயே மயங்கி கிடந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் அடுத்த திருகண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் வசந்த் (28). இவர் பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் உள்ள ஒரு டைரி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு குடி பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு பெருந்துறை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்து விட்டு கடை அருகிலேயே மயங்கி கிடந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
    • பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி பகுதியில் உள்ள சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் 40 வயது மதிக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    புகாரின் பேரில் போலீ–சார் சம்பவ இடத்திற்கு வந்து ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் நேற்று அந்த நபர் சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்ற–போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புளியஞ்சேரி பகுதிக்கு அருகே வந்தபோது நிலைதடு–மாறி கீழே விழுந்தது.
    • சந்திரசேகர் படுகாயம–டைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பி.மாண்டபள்ளி கிராமத்–தைச் சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மகன் சந்திரசேகர் (வயது25).

    இவர் குருபரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் புளியஞ்சேரி பகுதிக்கு அருகே வந்தபோது திடீ–ரென்று வண்டி கட்டுப்–பாட்டை இழந்து நிலைதடு–மாறி கீழே விழுந்தது. இதில் சந்திரசேகர் படுகாயம–டைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து இறந்த சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி பறிதாபம்
    • ஒருவர் கைது

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). மேளம் அடிக்கும் தொழிலாளி.

    இவர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் வசித்து வந்தார். கடந்த 9-ந் தேதி காகிதப்பட்டறையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில் திருவிழா நடந்தது. கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கொள்வதற்காக ஆகாஷ் காகிதப்பட்டறை வந்தார்.

    அப்போது ஆகாசுக்கும் காகிதப்பட்டரையை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மது பாட்டிலை உடைத்து ஆகாஷ் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஆகாஷ் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வேலூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார்.
    • எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆத்து மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் விஜயன் (வயது 27), இவர் நேற்று சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார். பின்னர் மலைக்கோட்ட லத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது மலைக்கோட்டாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே விஜயன் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
    • 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மின்னாம் பள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ஹரிஹரன் (24) பொன்னம்மா பேட்டையில் பழனிச்சாமி என்பவர் வீடு கட்டி வருகிறார்.

    கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். நேற்று மதியம் 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கிசிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஹரிஹரன் பரிதாமாக இருந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வந்த மாதேஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த மாக்கம்பாளையம் பகுதியை சுரேஷ் (18). இவர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் (19) ஆகிய இருவரும் மாக்கம் பாளை யத்தில் இருந்து உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதிக்கு சென்றனர்.

    அவர்கள் அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் அணை செக்போஸ்ட் மலை அடி வார பகுதியில் இருந்து பர்கூர், மைசூருக்கு ரோட்டில் மலைப்பாதை வழியாக சென்று கொண்டி ருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத ஒரு வாகனம் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் இறந்தார். இதில் மாதேஷ் படுகாயம் அடைந்த மாதேஷ் மீட்க ப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகி ச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதேஸ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    கேரளா மாநிலம், எர்ணாகுளம், புதுவை நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.

    இதனால் விஷ்ணுவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. விஷ்ணுவுக்கு அவரது பெற்றோர் வேலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி விடுதியில் தங்கி இருந்த விஷ்ணு திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் விஷ்ணுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விஷ்ணுவின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விஷ்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி, வேலு நகர் டாஸ்மாக் கடை அருகே நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரது அருகே மதுபாட்டில் ஒன்றும் இருந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×