என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் வாகனம் மோதி வாலிபர் சாவு
- அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
- பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி பகுதியில் உள்ள சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் 40 வயது மதிக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் போலீ–சார் சம்பவ இடத்திற்கு வந்து ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் நேற்று அந்த நபர் சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்ற–போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






