search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி பலி"

    • சரக்கு வாகனம் அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
    • தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி அருகே உள்ள வைர மங்கலம் அடுத்த வெங்க மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி தவசியம்மாள் (வயது 64).

    இவர் இன்றி காலை கவுந்தப்பாடி- பெருந்தலை யூர் ரோட்டில் மாதவன் தோட்டம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் (வேன்) அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் வேனை ஓட்டி வந்த சண்முக வேலன் என்பவரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மூதாட்டி இறந்து கிடந்தார். அவரது தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். அவரது தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    பலியான மூதாட்டி யார்? எந்த ரெயிலில் பயணம் செய்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.
    • முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (வயது 70). இவரது மனைவி கமலா (60).

    இவர்கள் தள்ளுவண்டி மூலம் வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சாரங்கபாணி, கமலா ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூட ஆள் இல்லாமல் அவதியுற்று வந்தனர்.

    இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த 19-ந்தேதி அதிகாலை விஷம் குடித்தனர். முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சாரங்கபாணி உயிரிழந்தார். அவரது மனைவி கமலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 6 குழந்தைகள் பெற்றும் பராமரிக்க யாரும் இல்லாததால் வயது முதிர்ந்த கணவன், மனைவி விஷம் குடித்து இறந்து போனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதியதில் பழனியம்மாள் தூக்கி வீசப்பட்ட பலத்த காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
    • இந்த விபத்து தொடர்பாக அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஜாகிரி பிரிவு ரோடு அருகே இன்று காலை 8 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (வயது75) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பழனியம்மாள் தூக்கி வீசப்பட்ட பலத்த காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    இது குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • புல்லில் மறைந்திருந்த பாம்பு ஒன்று சென்னியம்மாளை கடித்து விட்டது.
    • தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கம்பூளியாம்பட்டி பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சென்னியம்மாள் (58). தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.

    சென்னியம்மாள் கால்நடைகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு கால்நடைகளுக்கு புல் எடுப்பதற்காக அருகில் உள்ள காலி இடத்திற்கு சென்று புல்லை எடுத்து கொண்டிருந்தார்.

    அப்போது புல்லில் மறைந்திருந்த பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக சென்னியம்மாளை கடித்து விட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகம் லட்சுமி இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர்.
    • சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    வானூர் அருகே அருவாப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி லட்சுமி (55). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர். அப்போது கிளியனூர் சாலையில் சென்ற போது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் சண்முகம், லட்சுமி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் லட்சுமி, சண்முகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சண்முகம் உயிர் தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை ஐகோர்ட்டு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டு அருகில் 4 வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பரிதாபமாக இறந்தார். விபத்தில் அவரது தலை சிதைந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சமையன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். அதில் அந்த வாலிபர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
    • மூதாட்டி பலி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மீஞ்சூர் அண்ணா தெரு, காலனி பகுதியை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது85). இவர் வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தெரியாமல் சாப்பிட்டுவிட்டார்.

    இதில் மயங்கிய அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    • மானாமதுரை அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.
    • இறந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அன்னவாசல் கால்வாய் பாலம் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அசின் என்பவர் ஓட்டிச்சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார். தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் பெரும்பச்சேரி குரூப் கிராம நிர்வாக அதிகாரி செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலை யத்தில் அடையாளம் தெரி யாத 80 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாபுதூர் அருகே உள்ள புஞ்சை துறையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் தனது தம்பி சுப்பிரமணியம் வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று நாகேஸ்வரி பங்களாபுதூர் அருகே உள்ள ஆனந்த கவுண்டர் தோட்டத்தில் தென்னை ஓலை எடுத்து வர சென்றுள்ளார். ஓலை எடுத்து வரும்போது அங்கிருந்த தென்னை மரத்தில் தேன் கூட்டில் ஓலையின் ஒரு பகுதி பட்டு தேனீக்கள் நாகேஸ்வரியை விரட்டி விரட்டி கொட்டியது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சையில் இருந்தவர் மருத்துவர் அறிவுறுத்தல் படி மீண்டும் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
    • விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி வரலட்சுமி(வயது58) ஆவார். இந்த மூதாட்டி நேற்று முன்தினம் காலை ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    பின்னர், கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. அப்பொழுது காற்று பலமாக வீசியது. இதனால் சேலையில் தீ மளமளவென பற்றி உடல் கருகி அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று இரவு பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த உமாபதி என்பவரது வீட் டுக்கும் பரவியது.
    • உமாபதி வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் அடுத்த நார்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது85). இவரது மனைவி ராஜம்மாள் (80). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென மின் கசிவால் குடிசை வீட்டில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பற்றி எரிந்தது.

    இதில் சிக்கிய மூதாட்டி ராஜம்மாவால் வெளியே வர முடியவில்லை. அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கோவிந்தராஜ் லேசான காயங்களுடன் உயிர்தப்பி வெளியே வந்தார்.

    மேலும் குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த உமாபதி என்பவரது வீட் டுக்கும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி, மனைவி கற்பகம், அவர்களது 2 பெண் குழந்தைகள் ஆகியோர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் கோவிந்தராஜ், உமாபதி ஆகியோரின் வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் உமாபதி வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. ஆரம்பாக்கம் போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×