வாகனம் மோதி மூதாட்டி பலி

மதுரை ஐகோர்ட்டு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.
வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

மதுரை

மதுரை ஐகோர்ட்டு அருகில் 4 வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பரிதாபமாக இறந்தார். விபத்தில் அவரது தலை சிதைந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சமையன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். அதில் அந்த வாலிபர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com