என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![திருவெண்ணைநல்லூர் அருகே மகன்-மகள்கள் பராமரிக்காததால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி திருவெண்ணைநல்லூர் அருகே மகன்-மகள்கள் பராமரிக்காததால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/21/1918865-poision.webp)
திருவெண்ணைநல்லூர் அருகே மகன்-மகள்கள் பராமரிக்காததால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.
- முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (வயது 70). இவரது மனைவி கமலா (60).
இவர்கள் தள்ளுவண்டி மூலம் வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சாரங்கபாணி, கமலா ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூட ஆள் இல்லாமல் அவதியுற்று வந்தனர்.
இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த 19-ந்தேதி அதிகாலை விஷம் குடித்தனர். முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சாரங்கபாணி உயிரிழந்தார். அவரது மனைவி கமலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 6 குழந்தைகள் பெற்றும் பராமரிக்க யாரும் இல்லாததால் வயது முதிர்ந்த கணவன், மனைவி விஷம் குடித்து இறந்து போனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)