search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முப்பெரும் விழா"

    • வள்ளலார் 200 முப்பெரும் விழா, நேற்று நடைபெற்றது,
    • விழாவையொட்டி, சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில், இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில், வள்ளலார் 200 முப்பெரும் விழா, நேற்று நடைபெற்றது,

    ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை பரப்புரை மேற்கொண்ட சன்மார்க்க சங்க அடியார்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.

    முன்னதாக வள்ள லாரின் சிறப்பை விளக்கும் வகையில், ஓசூர் பண்டாஞ்சநேயர் கோயில் அருகிலிருந்து விழா மண்டபம் வரை பேரணி நடைபெற்றது.

    மேலும் விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, சப்- கலெக்டர் சரண்யா, இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் குமரேசன், ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, தாசில்தார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தெளிவான குறிக்கோலுடன் மாணவர்கள் படித்து சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக உருவாக வேண்டும்.
    • சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தகூடிய தீய பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருகக வேண்டும்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் தெளிவான குறிக்கோலுடன் மாணவர்கள் படித்து சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக உருவாக வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும்.

    இந்த மாணவ பருவத்தில் படிப்பை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தகூடிய தீய பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருகக வேண்டும். வாழ்கை தரத்தை உயர்த்திடும் வகையில் அனைத்து துறைகளிலும் உயரவேண்டும்.

    கிராமத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் சிறந்தவர்களாக உருவாகி சாதனை படைத்து வருகின்றனர்.என மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், சேலம் ஏரோபார்க் நிறுவனர் சுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உடற்கல்வி இயக்குநர் அருண் நேருவிலையாட்டு அறிக்கை வாசித்தார். பல்கலை கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செந்தில்குமார், தமிழ் துறை பேராசிரியர் சித்திரை செல்வி வரவேற்பு உரையாற்றினார். கணிதவியல் துறை தலைவர் ஐயப்பன், கண்ணி அறிவியல் துறை தலைவர் சங்கீதா, வனிகவியல் துறை தலைவர் பசுபதி, ஆங்கில துறை தலைவர் புரோத்தமன், இயற்பியல் துறை தலைவர் ரவி ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்கள். இருபால் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குரங்கு தோப்பு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
    • விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சாணாம்பட்டி அருகே குரங்குதோப்பு ஆர்.சி.அமலி தொடக்கப்பள்ளியில் கல்வி கலை கொடை எனும் முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.இந்த விழாவுக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். சித்தர் பீடம் விஜயபாஸ்கர், முருகேசன், ராமராஜன், முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் காந்தி வரவேற்றார். இந்தவிழாவில் பட்டிமன்ற நடுவர் சண்முக திருக்குமரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கல்வியின் அவசியம் பற்றி கவிஞர் ரோஸ்லின், கல்வியும், கலையும் பற்றி ஜோயல் ஆகியோர் பேசினார்.

    இந்தவிழாவில் பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் முருகேசன், மாயி, பிரியா, ராஜூ, முத்துமீனாள், பூபதி, ரமேஷ், அமலா மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சேசுமரி ஸ்டெல்லா, கிரேஸ் அந்தோணியம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

    • மனவளர்ச்சிக்குன்றியோர் சிறப்பு பள்ளளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • மனித வளத்துறை துணை மேலாளர் ஒ.எஸ்.அறிவு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை விடாமுயற்சி கல்வி இதன் மூலமே சாதனை செய்ய முடியும் என கூறினார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே எ.குறவன்குப்பத்தில் உள்ள டிவைன் கிராஸ் மனவளர்ச்சிக்குன்றியோர் சிறப்பு பள்ளளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் அனைவரையும் வரவேற்றார். நியூலைட் சாரிட்டபுல் டிரஸ்ட் பொருளாளர் முன்னிலை வகித்தார். நியூலைட்சாரிட்டபுல் நிர்வாகி மனநல நிபுணர் சகாயராஜர தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களில் மனித வளத்துறை துணை மேலாளர் ஒ.எஸ்.அறிவு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை விடாமுயற்சி கல்வி இதன் மூலமே சாதனை செய்ய முடியும் என கூறினார். மேலும் கலைநிகழ்ச்சி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் விடுதி காப்பாளர் கென்னடி நன்றி கூறினார்.

    • கலசலிங்கம் பல்கலை கழகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
    • ‘‘சைபா் செக்யூரிட்டி’’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் மும்பை கல்மேஷ் ஜோஷி பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் 2 நாட்கள் தேசியக் கலைவிழா –''ஸ்பார்க்ஸ்-23'', தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பெற்றோர்-ஆசிரியா் கழக கலந்துரையாடல் மற்றும் சைபா் செக்யூரிட்டி என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு நடந்தது. துணைத்தலைவா் சசிஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவா் நலஇயக்குநா் முத்துகண்ணன், துறைத்தலைவா் தனசேகரன் வரவேற்றனா். கலைவிழாவில் பல்வேறு கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். டிவி புகழ் இசைக் கலைஞா் கார்த்திக் தேவராஜ் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார். ''மிஸ்.திருச்சி" ஷாலினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பி.பேப் குழுவினர் நடன நிகழ்ச்சி நடத்தினா். விளம்பர நடிகர் தனவிஷால், டி.ஜெ. புகழ் பிரஷ்பி நிகழ்ச்சியை நடத்தினா். ''சைபா் செக்யூரிட்டி'' என்ற தலைப்பில் கருத்தரங்கில் மும்பை கல்மேஷ் ஜோஷி பேசினார்.

    பெற்றோர்-ஆசிரியா் கழக கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்துரையாடினர். விழா ஏற்பாடுகளை பேராசிரியா்கள் கபிலன், பிரியா, பாலகண்ணன், சுரேந்திரன் மற்றும் ஆசிரியர் குழு, மாணவா்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    • வள்ளுவர் அரசு பள்ளியில் முப்பெரும விழா நடை பெற்றது.
    • விழாவில் 10 முன்னாள் ராணுவத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி வள்ளுவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கியோருக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா ஊராட்சி தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது .

    ஊராட்சி துணைத்தலைவர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய மேரி, லயன்ஸ் தலைவர் வேதமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் முருகானந்தம் வரவேற்றார். ஆசிரியை மணிமலர் ஆண்டறிக்கை வாசித்தார்.

    வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவழகன், பாலசுப்ரமணியன், வட்டார மேற்பார்வையாளர் அனுப்பிரியா மாணவர்களுக்கு பரிசளித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் கங்கா, பாலம் தொண்டு நிறுவன செந்தில்குமார், தலைமையாசிரியர்கள் விவேகானந்தம், பாலகுமார், அருளரசு, அருண்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பள்ளிக்கு கழிவறை அமைக்க ரூ. 3லட்சம் நிதி வழங்கிய எக்ஸெல் வின்ட் நிறுவன இயக்குனர் ராஜ்குமார் வாட்டர் டேங்க் வழங்கிய பாலம் தொண்டு நிறுவன செயலர் செந்தில்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். 10 முன்னாள் ராணுவத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேர்ந்த நான்கு மாணவ மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1000- ஐ அனுசுயா ராமமூர்த்தி வழங்கினார்.

    மேலும் இவ்வாண்டு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ. ஆயிரம் வீதம் ஊக்கத்தை வழங்கப்படும் என்று பள்ளியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மாணவர்க ளுக்கு பரிசு பொருட்களை சரவணன், சுவாதி சக்திவேல் வழங்கினார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியை அமுதா கனகதுர்கா செய்தனர். வி.ஐ.ஏ.ஷிப் கேட்டரிங் காலேஜ் அகிலன் மே மேஜிக் ஷோ நடத்தினார். கர்ணன் நன்றி கூறினார்.

    • மாணவிகளின் ஒழுக்க நெறி, முன்னேற்றத்திற்கான வழிமுறை மற்றும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என விளக்கிப் பேசிப்பட்டது.
    • தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவி களும் சாதி, மதம் பார்க்காத சமத்துவம் குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நேற்று தொடங்கியது. முதல் நாளாக முத்தமிழ் விழா நடந்தது.

    இதில் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்து முப்பெரும் விழாவை தொடக்கி வைத்து பேசினார். கிருஷ்ணகிரி அரசு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், பாலக்கோடு டிஎஸ்பி சிந்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளின் ஒழுக்க நெறி, முன்னேற்றத்திற்கான வழிமுறை மற்றும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என விளக்கிப் பேசினார்.

    தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முருகதாஸ் மற்றும் குழுவினர் பங்கேற்ற பூலோகமும் புவியரசனின் ருத்ரதாண்டவம் மற்றும் சாதி, மதம் பார்க்காத சமத்துவம் மிக்க சமுதாயம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் நடந்த தெருக்கூத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவி களும் சாதி, மதம் பார்க்காத சமத்துவம் குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரால் வள்ளலார் 200 முப்பெரும் விழா தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு நகரங்களில் இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் வள்ளலார் 200 முப்பெரும் விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எல்லாம் உடைய அற்புத ஜோதி என்கின்ற ஜோதியினை கடவுளாக கொண்டுள்ளார். வள்ளலார் அவர்களின் கொள்கையினை பின்பற்றியும் மற்றும் அவர்களின் கருத்துக்களின்படி வாழ்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கையினை மேற்கொள்ள முடியும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என்பதையும், சுத்த சன்மார்க்கத்தினை முக்கிய இலச்சியமாக்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டினையும் உள்ளிட்டவைகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    எனவே நாம் அனைவரும் வள்ளலாரின் வாழ்க்கை முறையினை நன்கு அறிந்துகொண்டு அதன்வழி பின்பற்றி நல்வாழ்வினை வாழ வேண்டும் என பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) சூரியநாராயணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அனிதா, அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மெய். அருள் நந்தி சிவம், மணி, கிருஷ்ணமூர்த்தி, அருள் (எ) இளங்கோ, இலாபராசு, திருப்பதி, மரு.ராமதாஸ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    • திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. முப்பெரும் விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
    • ஓ.பி.எஸ். அணி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை அ.தி.மு.க. புற நகர் வடக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞரணி மாநில செய லாளர் ராஜ்மோகன், மாணவரணி துணை மாநில செயலாளர் ஒத்தகடை பாண்டியன், பேரவை மாநில இணைச்செயலாளர் சோலை குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் பேசும்போது கூறியதாவது:-

    வருகிற 24-ந் தேதி திருச்சியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெறுகிறது. இந்த விழா முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நாயகன் ஓ.பி.எஸ். கரத்தினை வலுப்ப டுத்தும் வகையில் மாநாடு போல நடைபெறும்.

    இந்த விழாவில் அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வரிசையாக வாகனங்களில் அணிவகுத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

    • ஓவிய கண்காட்சி, உணவு திருவிழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    • பாரம்பரிய உணவுகளை விதவிதமாக சமைத்துக் கொண்டு வந்திருந்து விழாவில் கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரேகட அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி, உணவு திருவிழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். வட்டாரவட்டார கல்வி அலுவலர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

    தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மதனகோபாலன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் புலவர் பரமசிவம் கம்பன்கழக துணை தலைவர் மற்றும் முன்னாள் செயலாளர் கலந்துகொண்டார்.

    விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவுகளை விதவிதமாக சமைத்துக் கொண்டு வந்திருந்து விழாவில் கண்காட்சிக்கு வைத்திருந்தனர். விழாவில் முடிவில் அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி ஆசிரியர்கள் சக்திவேல், லதாமகேஸ்வரி, விமலா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழா நடந்தது.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடந்தது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ராமநாதபுரம் அரண்மனை மேற்குத்தெரு பகுதியில் உள்ள திருமண அரங்கத்தில் வள்ளலார் என்ற ராமலிங்க சுவாமிகள் இந்த உலகத்திற்கு வந்து 200-வது ஆண்டு தொடக்கம், தர்மச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் தந்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். வள்ளலார் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவராம்குமார், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சுப்புராயலு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், வள்ளலார் உயர்மட்ட குழுவினர்கள் உமாபதி சிவம், அருள்நந்தி சிவம், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முப்பெரும் விழாவில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் நாளில் தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கம் சார்பில் முப்பெரும் விழா இன்று நடந்தது. விழாவில் மாநில பொதுச் செயலாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார்.

    முத்துச்செல்வி, பெருமாள், காயத்ரி, முத்துக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைமை நிலைய செயலாளர் மகேந்திர குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, தமிழ்நாடு நில அளவைத் துறையில் ஆன்லைன் பட்டா முறையில் தள்ளுபடி இனங்கள் மூலம் மறைமுகமாகவும் நேரடியாகவும் களப்பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு உரிய தீர்வு காணப்பட கூட்டு பட்டா முறையை நில அளவர்களுக்கு வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு நில அளவை துறையில் திட்டப்பணியில் நீண்ட காலமாக நில அளவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு நில அளவைத் துறையில் களப்பணியாளர்களின் கூடுதல் இயக்குனர் பதிவு உயர்வு முதல் உதவி இயக்குனர் பதிவு உயர்வு வழங்குவது பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

    இதனால் விதிகளை தளர்த்தி பதிவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். நில அளவைத் துறையில் களப்பணியாளர்கள் ஆய்வு செய்யப்படும் ஆய்வுகள் போல தள்ளுபடி இடங்களை கிராம நிர்வாக அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என இயக்குனர் உத்தரவிட வேண்டும். சங்கத்தின் சார்பில் இதுவரையில் துறை தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கதிரேசன், வேலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசன்னா திருப்பத்தூர் சந்திரசேகர் ராணிப்பேட்டை ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×