search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grand festival"

    • வள்ளுவர் அரசு பள்ளியில் முப்பெரும விழா நடை பெற்றது.
    • விழாவில் 10 முன்னாள் ராணுவத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி வள்ளுவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கியோருக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா ஊராட்சி தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது .

    ஊராட்சி துணைத்தலைவர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய மேரி, லயன்ஸ் தலைவர் வேதமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் முருகானந்தம் வரவேற்றார். ஆசிரியை மணிமலர் ஆண்டறிக்கை வாசித்தார்.

    வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவழகன், பாலசுப்ரமணியன், வட்டார மேற்பார்வையாளர் அனுப்பிரியா மாணவர்களுக்கு பரிசளித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் கங்கா, பாலம் தொண்டு நிறுவன செந்தில்குமார், தலைமையாசிரியர்கள் விவேகானந்தம், பாலகுமார், அருளரசு, அருண்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பள்ளிக்கு கழிவறை அமைக்க ரூ. 3லட்சம் நிதி வழங்கிய எக்ஸெல் வின்ட் நிறுவன இயக்குனர் ராஜ்குமார் வாட்டர் டேங்க் வழங்கிய பாலம் தொண்டு நிறுவன செயலர் செந்தில்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். 10 முன்னாள் ராணுவத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேர்ந்த நான்கு மாணவ மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1000- ஐ அனுசுயா ராமமூர்த்தி வழங்கினார்.

    மேலும் இவ்வாண்டு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ. ஆயிரம் வீதம் ஊக்கத்தை வழங்கப்படும் என்று பள்ளியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மாணவர்க ளுக்கு பரிசு பொருட்களை சரவணன், சுவாதி சக்திவேல் வழங்கினார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியை அமுதா கனகதுர்கா செய்தனர். வி.ஐ.ஏ.ஷிப் கேட்டரிங் காலேஜ் அகிலன் மே மேஜிக் ஷோ நடத்தினார். கர்ணன் நன்றி கூறினார்.

    • விருதுநகரில் வருகிற 15-ந் தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.
    • இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விருது வழங்குகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் திடலில் வருகிற 15 -ந் தேதி (வியாழக்கிழமை) தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    கலைஞர் அறக்கட்டளை சார்பில் பரிசு மற்றும் விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். முதன்மைச் செயலாளர் கே என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்று பேசுகிறார்.

    விழாவில் பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும், கலைஞர் விருது பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி திருநாவு க்கரசுக்கும், பேராசிரியர் விருது விருதுநகர் குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    ×