search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்கலை கழகம்"

    • பசும்பொன் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைக்க வேண்டும்.
    • பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணி கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமக்குடி

    பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில பொறுப்பாளர் சி.எம்.டி ராஜா சேதுபதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசியமும் தெய்வீகமும் கொள்கை எனக் கொண்டு மத்தியில் ஆட்சி செய்கின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழக மெங்கும் வாழக்கூடிய முக்குலத்தோர் சமுதாய மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தென் மாவட் டங்களில் பெருவாரியான இடங்களில் அண்ணாமலை தலைமையில் வெற்றி பெறுவார்கள். அதற்கு உறு துணையாக, பாதுகாப்பு அரணாக முக்குலத்து சமுதாய மக்கள் இருப் பார்கள்.

    முக்குலத்து மக்களின் கோரிக்கைகளை மாநில தலைவர் அண்ணாமலை நிறைவேற்றி தர வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் பசும் பொன் முத்துராம லிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். டி.என்.டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் மூன்று பேரையும் சேர்த்து தேவர் இனம் என்று அறிவித்து அரசு ஆணையை அமல் படுத்த வேண்டும். தேவர்

    பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இங்கே வாழக்கூடிய ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலசலிங்கம் பல்கலை கழகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
    • ‘‘சைபா் செக்யூரிட்டி’’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் மும்பை கல்மேஷ் ஜோஷி பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் 2 நாட்கள் தேசியக் கலைவிழா –''ஸ்பார்க்ஸ்-23'', தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பெற்றோர்-ஆசிரியா் கழக கலந்துரையாடல் மற்றும் சைபா் செக்யூரிட்டி என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு நடந்தது. துணைத்தலைவா் சசிஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவா் நலஇயக்குநா் முத்துகண்ணன், துறைத்தலைவா் தனசேகரன் வரவேற்றனா். கலைவிழாவில் பல்வேறு கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். டிவி புகழ் இசைக் கலைஞா் கார்த்திக் தேவராஜ் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார். ''மிஸ்.திருச்சி" ஷாலினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பி.பேப் குழுவினர் நடன நிகழ்ச்சி நடத்தினா். விளம்பர நடிகர் தனவிஷால், டி.ஜெ. புகழ் பிரஷ்பி நிகழ்ச்சியை நடத்தினா். ''சைபா் செக்யூரிட்டி'' என்ற தலைப்பில் கருத்தரங்கில் மும்பை கல்மேஷ் ஜோஷி பேசினார்.

    பெற்றோர்-ஆசிரியா் கழக கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்துரையாடினர். விழா ஏற்பாடுகளை பேராசிரியா்கள் கபிலன், பிரியா, பாலகண்ணன், சுரேந்திரன் மற்றும் ஆசிரியர் குழு, மாணவா்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    ×