குரங்கு தோப்பு பள்ளியில் முப்பெரும் விழா

குரங்கு தோப்பு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினர்.
குரங்கு தோப்பு பள்ளியில் முப்பெரும் விழா
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சாணாம்பட்டி அருகே குரங்குதோப்பு ஆர்.சி.அமலி தொடக்கப்பள்ளியில் கல்வி கலை கொடை எனும் முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.இந்த விழாவுக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். சித்தர் பீடம் விஜயபாஸ்கர், முருகேசன், ராமராஜன், முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் காந்தி வரவேற்றார். இந்தவிழாவில் பட்டிமன்ற நடுவர் சண்முக திருக்குமரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கல்வியின் அவசியம் பற்றி கவிஞர் ரோஸ்லின், கல்வியும், கலையும் பற்றி ஜோயல் ஆகியோர் பேசினார்.

இந்தவிழாவில் பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் முருகேசன், மாயி, பிரியா, ராஜூ, முத்துமீனாள், பூபதி, ரமேஷ், அமலா மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சேசுமரி ஸ்டெல்லா, கிரேஸ் அந்தோணியம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com