search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழா
    X

    விழாவில் ஒரு மாணவிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் பரிசு வழங்கினார். 

    வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழா

    • ராமநாதபுரத்தில் வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழா நடந்தது.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடந்தது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ராமநாதபுரம் அரண்மனை மேற்குத்தெரு பகுதியில் உள்ள திருமண அரங்கத்தில் வள்ளலார் என்ற ராமலிங்க சுவாமிகள் இந்த உலகத்திற்கு வந்து 200-வது ஆண்டு தொடக்கம், தர்மச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் தந்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். வள்ளலார் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவராம்குமார், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சுப்புராயலு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், வள்ளலார் உயர்மட்ட குழுவினர்கள் உமாபதி சிவம், அருள்நந்தி சிவம், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×