search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முப்பெரும் விழா"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. அழைப்பு
    • தொண்டர்கள் திரண்டு வாருங்கள்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்ட பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆளும் வர்க்கதினால் அடிமைபட்டுகிடந்த சமூகத்தை ஆர்ப்பரித்து வீறுகொண்டு எழுந்திட உதயமான சமூக சீர்த்திருத்த இயக்கமான அண்ணா கண்ட திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய நாளில் மாநகர ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கிளை அமைப்புகளில் இருவண்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிவோம்.

    தீண்டாமையினாலும், மூட பழக்கவழக்கத்தினாலும் பிற்ப்போக்குதனமாக வாழ்க்கையில் உழன்றுக்கொண்டிருந்த சமூகத்தை தனது முற்ப்போக்கு சிந்தனையால் தட்டி எழுப்பி சமத்துவ சமுதாயத்தை படைத்த சமத்துவ பெரியார் அவர்களின் 145–-வது பிறந்த நாளான வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி போற்றுவோம்.

    17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நமது வேலூர் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கழக பவள விழா, கழக முன்னோடி களுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் கழக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருது வழங்கி, விழா பேருரை ஆற்ற உள்ளார்கள்.

    மேலும் இந்நிகழ்வில் கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

    எனவே மாநில தலைமைகழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, மாநிலங்க ளவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில அணிகளின் துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் அணிகளின் நிர்வாகிகள், வட்ட, வார்டு, ஊராட்சி வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோ டிகள், கழக புரவலர்கள், கழக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென திரண்டு பங்கேற்று விழாவினை சிறப்பித்திட வேண்டுமாய் வருக வருக என அன்போடு வரவேற்று கேட்டுக்கொள்கிறேன்.

    வேலூரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.மணி அளவில் நடைபெற உள்ள கழக பவள விழா, கழக முன்னோடிகளுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு விழா பேருரை ஆற்ற நாளை சனிக்கிழமை அன்று இரவு 7மணி அளவில் காட்பாடி ெரயில் நிலையத்திற்கு வருகை தரும் கழக தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    முதல்-அமைச்சரை உள்ளன்போடும், உற்சாகத்தோடும் வரவேற்றிட அனைவரையும் வருக, வருக என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடக்கிறது
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    வேலூர்:

    தி.மு.க.வின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா, வேலூர் அடுத்த கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    இதில், தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

    இதில் வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் முதல் - அமைச்சர் பங்கேற்று, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

    கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல் - அமைச்சர் வேலூருக்கு வருகிற 16-ந் தேதியே வந்துவிடுகிறார்.

    அதன்படி, சென்னையில் இருந்து 16-ந் தேதி மாலை ரெயிலில் புறப்பட்டு, அன்று இரவு 7.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு முதல் அமைச்சர் வருகிறார். அவருக்கு தி.மு.க. கட்சியினர் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்ந்து, அன்று இரவு, விருந்தினர் மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் முதல் அமைச்சர் தங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகிறது.

    மறுநாள் 17-ந் தேதி காலை 10.15 மணிக்கு, மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நிகழ்ச்சிக்கான மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. சிறிய அளவிலான பிளாட்பாரம் மட்டும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து மேல்மொணவூர் முகாம் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற இடங்களிலும் கட்டப்பட்டுள்ள வீடுகளை காணொளி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    பின்னர், மேல்மொணவூர் முகாமில் உள்ள ஒரு சில வீடுகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு சாவியை ஒப்படைக்கிறார். தொடர்ந்து, தி.மு.க. முப்பெரும் விழா நடக்கும் கந்தனேரிக்கு செல்கிறார்.

    அங்கு தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியேற்றி வைத்த பின்னர் மீண்டும் வேலூர் வந்து ஓய்வெடுக்கிறார்.

    அன்று மாலை விழா மேடைக்கு செல்லும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலூர் வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு பணியிலும் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

    இதனால், வேலூர் மாவட்ட அதிகாரிகள் மட்டுமின்றி, தி.மு.க.வினரும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமையில் நடைபெற்றது.
    • மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கத்தின் 3 முத்தான நிகழ்ச்சி, மாநில பொதுக்குழுக் கூட்டம் திருவல்லிக்கேணி, மாஸ்டர் மாளிகையில் இன்று மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமையில் நடைபெற்றது.

    அகில இந்திய தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சோ.சங்கர் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு அலுவலர் ஒன்றிய சங்க மாநில தலைவர் அமிர்த குமார், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ரங்க ராஜன், அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், பீட்டர் அந்தோணிசாமி, சுப்பிரமணி, இளங்கோவன் மற்றும் இணைப்பு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    முதல் நிகழ்ச்சியாக சங்க அங்கீகாரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவானதையொட்டி 75-வது பவள விழா நினைவு தூண், எஸ்.எம். தங்கும் விடுதி, எஸ்.வரதராசனார் நினைவு கூடம் ஆகியவற்றை அகில இந்திய தலைவர் கே.கணேசன் திறந்து வைத்தார். முன்னாள், இந்நாள் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது.

    பின்னர் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில், தலைமை செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசாணை எண். 128/6னை நடைமுறைப் படுத்தி அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 12526 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதி யம், தீபாவளி அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். அரசாணை எண்கள் 115, 152, 135, 10/2022, 156/18னை ரத்து செய்வது போன்ற 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் மாநில பொருளாளர் முனியப்பன் நன்றி கூறினார்.

    • முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்
    • பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது

    வேலூர்:

    வேலூர் பள்ளி கொண்டா சுங்க சாவடி அருகே வருகிற 17-ந்தேதி தி.மு.க. 75-வது ஆண்டு பவளவிழாவுடன் கூடிய முப்பெரும் விழா பிரமாண்டமாக நடக்கிறது.

    இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர். முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் பந்தக்கால் நட்டு ேமடை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது.

    இதில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், அணை க்கட்டு ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஹரிபிரசாத் உட்பட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
    • பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பதி னேழு ஆண்டுகள் கல்வி பணியிலிருந்து பதினெட்டா வது ஆண்டில் கல்வி சேவையாற்றும் செயலாள ருக்கு பாராட்டு விழா, ஆசி ரியர் தின விழா மற்றும் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப் பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் கல்லூரி முதல் வர் அ.ராமசுப்பையா வர வேற்புரை யாற்றினார். கல்லூரி தலைவர் சு.ராஜ கோபால் தலைமை தாங்கி னார். கல்லூரியின் துணைத் தலைவர் ரா.ஜெயராம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் உதவிச் செய லாளர் க.ராஜேந்திர பாபு மற்றும் கல்லூரியின் பொரு ளாளர் ஆ.ஆழ்வார்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவின் பாராட்டு விழாவை ஏற்றுக்கொண்டு, ஏற்புரையுடன் கூடிய வாழ்த்துரையை கல்லூரி செயலாளர் மூ.விஜயரா கவன் வழங்கினார். விழா வின் சிறப்பு விருந்தினராக மதுரை தமிழ் இலக்கிய மன் றத்தின் நிறுவனர் அவனி மாடசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதனை தொடர்ந்து சிறந்த ஆசிரியர்கள், சிறந்த துறை, சிறந்த சமூக சேவகர், சிறந்த ஆய்வுக்கட்டுரை யாளர், சிறந்த ஆய்விதழ் கட்டுரையாளர் என தனித்த னியாக பல்வேறு விருதுகள் பேராசிரியர்களுக்கு வழங் கப்பட்டது. நிறைவாக சுய நிதி பிரிவு இயக்குனர் ச.பிரபு நன்றி கூறினார்.

    விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் செ.செந்தில் குமார் தொகுத்து வழங்கி னார். விழாவிற்கான ஏற்பா–டுகளை கல்லூரி முதல்வர் அ.ராமசுப்பையா சிறப்பாக செய்திருந்தார். இதில் திர ளானோர் கலந்து கொண்ட னர்.

    • அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • வருகிற 17-ந் தேதி நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி வேலூரில் தி.மு.க பவள விழாவுடன் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

    பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை வெற்றிபெற செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் டிசம்பர் 17-ந் தேதி சேலம் மாநகரில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளை சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைவிடம் வாக்காளர் எண்ணிக்கை ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளை களைந்திட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை உருவாக்கி திறன் பட செயலாற்றி வரும் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும் அவரது அரசியல் நகர்வுக்கு வேலூர் மாவட்ட தி.மு.க துணை நிற்கும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறி வரசன் வரவேற்றார்.
    • நிகழ்ச்சி யில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் பெரியார் மய்யம் திறப்பு விழா, தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கிருஷ்ண கிரி கார்னேசன் திடலில் நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறி வரசன் வரவேற்றார். நிகழ்ச்சி யில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார்.

    நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பெரியார் சிலையை திறந்து வைத்தார். உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அம்பேத்கர் நூலகத்தை திறந்து வைத்தார். கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, கி.வீரமணி படிப்பகத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), ஒய்.பிரகாஷ் (கிருஷ்ணகிரி மேற்கு), திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலா ளர் அன்புராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.எஸ்.பிரபாவதி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மாணிக்கம், மாநில ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.பி. சுகவனம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ். சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ், துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் ஜி.கே.உதயகுமார், மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பாட்டு, ஓவியம் போன்ற போட்டிகளை நடத்தியது
    • நடனம், பாடல், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

    மார்த்தாண்டம் :

    மார்த்தாண்டம் வடக்கு தெருவில் செயல்பட்டு வரும் ஞானதீபம் கல்லூரியில் ஓணப்பண்டிகை, கல்லூரி ஆண்டு விழா மற்றும் கலாச்சார விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

    முதல் நாளில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பாட்டு, ஓவியம் போன்ற போட்டிகளை நடத்தியது.

    விழாவின் 2-ம் நாளில் விழாவிற்கு கல்லூரி தாளாளர் தோமஸ்ராஜ் தலைமை தாங்கி கல்லூரி முதல்வர் கலாராணி தலைமையில் சிறப்பு விருந்தி னர்கள் குத்து விளக்கு ஏற்றினார்.

    தொடர்ந்து தேசிய இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்றுநர் டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் பேசினர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கல்லூரி நிர்வாகம் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. பேராசிரியர் செல்வின் இன்பராஜ் நன்றி கூறினார். மதியம் அனை வருக்கும் ஓணம் சத்யா உணவு பரிமாறப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கேரள பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனத்தை மாணவிகள் ஆடினார்கள். இதில் நடனம், பாடல், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவினை மாணவிகள் ஜீனு, ஆஷிகா தொகுத்து வழங்கினர். மாணவி வீனா நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செல்வின் இன்பராஜ், ராமச்சந்திரன், ஜெபா, செல்வி, ஜினி, ஜெனிபிரியா, திவ்யா, பேபி ஸ்டெலினா, ஆரதி கிருஷ்ணா, ஸ்ரீமதி, சுஜிதா, ஜெபகனி, விஜிலா, அஜிதா, சிநேகா, சிஞ்சு ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருப்புல்லாணி முப்பெரும் விழாவில் தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் தி.மு.க.வுடன் இணைந்தது
    • குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் இணைந்த விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.

    முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக திராவிட மாடல் குறித்து நவீன கோடாங்கியாக கருப்பசாமி வேடம் அணிந்து வந்து குறிசொல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தமிழக மக்கள் எழுச்சிக்கழக மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்றார். தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில தலைமை ஒருங்கி ணைப்பாளர் திரைப்பட நடிகர் ராஜேந்திரன் பேசுகையில், தி.மு.க.வில் இணைவ தற்கான முக்கிய காரணம் குறித்தும் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வேண்டியவர், வேண்டாதவர் என்று பாகுபாடின்றி அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நலத் திட்டங்கள் உடனுக்குடன் செய்து வருவது எங்களை மிகவும் கவர்ந்தது. எங்கள் அமைப்பில் 90 சதவீதம் பெண்கள்தான் உள்ளனர். தற்போது அனைவரும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைவதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

    கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    • தமிழக மக்கள் எழுச்சி கழகம் தி.மு.க.வுடன் இணையும் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடந்தது.
    • மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் இணையும் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

    முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேச உள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் திருப்புல் லாணி வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைக்க உள்ள னர்.

    முன்னதாக தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்புரை நிகழ்த்து கிறார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரைப்பட நடிகர் ராஜேந்திரன் தி.மு.க.வில் இணைவது குறித்தும் ஏற்புடைய திட்டங்கள் குறித்தும் விளக்க உரை ஆற்றுகிறார்.

    • விழாவை முன்னிட்டு காலை 6 மணியளவில் வள்ளலாரின் அருட்பெரும் ஜோதி அகவல் பாராயணம் சுத்த சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டது.
    • நிறைவாக ஜோதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்.வி.வி. திருமண மண்டபத்தில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளல் பெருமானின் 200வது ஆண்டு தொடக்கமும், தருமச்சாலை தொடங்கி 156வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசன 152-வது ஆண்டும் சேர்ந்து வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழா நடந்தது.

    இதற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். டி.மதியழகன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை முன்னிட்டு காலை 6 மணியளவில் வள்ளலாரின் அருட்பெரும் ஜோதி அகவல் பாராயணம் சுத்த சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டது. பின்னர் சன்மார்க்க சங்க கொடி ஏற்பட்டது.

    தொடர்ந்து 200-வது முப்பெரும் விழாவையொட்டி நடந்த பேரணியை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுதர்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி பஸ் நிலையம் அருகில் துவங்கி, ராயக்கோட்டை சாலை மேம்பாலம் வழியாக அரசு மகளிர் கல்லூரியில் நிறைவடைந்தது.

    மேலும் பல்வேறு யோகாசன செயல்முறை பயிற்சி மற்றும் வீணை இசை, மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவாக ஜோதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    முன்னதாக, சமரச சுத்த சன்மார்க்கப் பெரியோர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, வள்ளலார் கண்ட ஞான மூலிகைகளான கருப்புகவுணி பிஸ்கட், கரிசலாங்கண்ணி லேகியம், பனைபழம் அல்வா, நெல்லிகனி இனிப்பு, அகத்தி விதை தேன் என 21 வகையான மூலிகை பொடி, பிரண்டை இட்லி பொடி, வசம்பு பொடி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ரஜினிசெல்வம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ. மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த வல்லுரில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை சார்பில் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழா தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு,கட்சி கொடியேற்றுதல்,நல திட்ட உதவிகள், தெருமுனை கூட்டம், வல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மா.உமாபதி தலைமை வகித்தார், பொறியாளர் அணி இணை செயலாளர் வல்லூர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவண மைய மாநில துணைச் செயலாளர் சி. நீலமேகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் தளபதி சுந்தர், திருவள்ளூர் நாடாளுமன்ற செயலாளர் நெடுஞ்செழியன் பொன்னேரி தொகுதி செயலாளர் சேகர், வல்லூர் ரவிமணி, நாதன், வடிவேல், மனோ, குமரவேல், மோத்தி, லலிதா, தேசியதிலகம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் துவக்கமாக வல்லூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து வட சென்னை அனல் நிலைய சாலை, வல்லூர்சாலை, உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் கிராமத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.

    ×