என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை முப்பெரும் விழா- செல்வப்பெருந்தகை பங்கேற்பு
- சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை (ஞாயிற்று கிழமை) மாலை நடக்கிறது.
- செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை (ஞாயிற்று கிழமை) மாலை நடக்கிறது.
விழாவிற்கு, தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ. முத்தழகன் தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதில், அகில இந்திய காங்கிரஸ் எஸ்.இ. பிரிவு தலைவர் ராஜேந்திரபால் கௌதம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி. க்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோ கரன், அசன் மெளலானா, உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின் றனர். சிலம்பன், ராஜ்கமல், ஆர்.கே.ராஜேஷ் ஆகியோர் நன்றி உரையாற்றுகிறார்கள்.






