search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா
    X

    காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

    • மாணவிகளின் ஒழுக்க நெறி, முன்னேற்றத்திற்கான வழிமுறை மற்றும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என விளக்கிப் பேசிப்பட்டது.
    • தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவி களும் சாதி, மதம் பார்க்காத சமத்துவம் குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நேற்று தொடங்கியது. முதல் நாளாக முத்தமிழ் விழா நடந்தது.

    இதில் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்து முப்பெரும் விழாவை தொடக்கி வைத்து பேசினார். கிருஷ்ணகிரி அரசு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், பாலக்கோடு டிஎஸ்பி சிந்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளின் ஒழுக்க நெறி, முன்னேற்றத்திற்கான வழிமுறை மற்றும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என விளக்கிப் பேசினார்.

    தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முருகதாஸ் மற்றும் குழுவினர் பங்கேற்ற பூலோகமும் புவியரசனின் ருத்ரதாண்டவம் மற்றும் சாதி, மதம் பார்க்காத சமத்துவம் மிக்க சமுதாயம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் நடந்த தெருக்கூத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவி களும் சாதி, மதம் பார்க்காத சமத்துவம் குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×