search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் சாவு"

    • பரமசிவம் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார்.
    • மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60) விவசாயி. இவர் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் தாழ்வான நிலையில் சென்ற மின்சார கம்பி அறுந்த நிலையில் இருந்துள்ளது. இதை கவனிக்காத பரமசிவம் அந்த வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விவசாய நிலத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியை சரிசெய்ய வழியுறுத்தி பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார். என கூறி பரமசிவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மின்சார வாரியத்தை கண்டித்து விருத்தாசலம் - சேலம் சாலையில்  கண்டபங்குறிச்சி எடைபாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்த னர். இதனையடுத்து போலீ சார் இறந்த பரமசி வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.
    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் எதிரே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு டவுன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நேரில் சென்று மயங்கிய கிடந்த முதியவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்தவருக்கு 55 வயது முதல் 60 வயது இருக்கும் எனவும், ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வருசநாடு:

    மதுரை மாவட்டம் சேடபட்டி குப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த மொக்கையன்(69). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த சில வருடங்களாக தேனி மாவட்டம் ராஜதானி அருகில் உள்ள டி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதி க்கப்பட்டது.

    சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த மொக்கையனை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரமலையனூர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அடுத்துள்ள மூலகானூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரை (வயது65).

    இவர் நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலையனூர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் கோவில் பாலம் எதிரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மன்செட்டி ரோடு செல்லும் வழியில், முருகன் கோவில் பாலம் எதிரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உசிலம்பட்டியில் இருந்து அல்லிநகரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
    • அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கன் (வயது 70). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி விட்டு அல்லிநகரத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காளியப்பன் மீது மோதியது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). விவசாயி.

    இவர் சம்பவத்தன்று பாலக்கோடு-பாப்பா–ரப்பட்டி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காளியப்பன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய–மடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாரா தவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் அங்கமுத்து தவறி விழுந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மாட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது73). இவர் கொளகத்தூரில் உள்ள ஆசைதம்பியின் புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாரா தவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் அங்கமுத்து தவறி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் கடந்த 8-ந் தேதி அதிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
    • பதறிப்போன சின்னையனின் உறவினர்கள் அவரை பலஇடங்களில் தேடிபார்த்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்து வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது82). விவசாயி. இவர் கடந்த 8-ந் தேதி அதிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

    ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சின்னையனின் உறவினர்கள் அவரை பலஇடங்களில் தேடிபார்த்தனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா என்பவரின் விவசாய கிணற்றில் சின்னையன் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று சின்னையனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து சின்னையனின் உறவினர்கள் கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சின்னையனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரித்ததில், சின்னையன் காலை கடன் கழிப்பதற்காக நடந்து வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      சேலம்:

      சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்ட முத்தம் பட்டி சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70), தனியாக வசித்து வந்தார். மதுபோதையில் இருந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப் பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதமாக ஏழுமலை இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

      • வீட்டில் மாடி ஏறும்போது படிகட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
      • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

      தருமபுரி, 

      தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே பளையூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னாகவுண்டர் (வயது 75).

      கூலித்தொழிலாளி யான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மாடி ஏறும்போது படிகட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கை முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்ட சின்னாகவுண்டர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

      இதுகுறித்து அவரது மனைவி பழனியம்மாள் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • உரக்கடையில் 5 கிலோ உரம் வாங்கி கொண்டு பி.டி.ஓ. அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
      • பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது.

       பாலக்கோடு,

      தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வடையன்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது64). இவர் விவசாய தொழில் செய்து வந்தார்.

      இந்நிலையில் பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள உரக்கடையில் 5 கிலோ உரம் வாங்கி கொண்டு பி.டி.ஓ. அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

      அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது.இதில் முதியவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயக்கமடைந்தார்.

      உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

      பின்னர் மேல் சிகிச்சை க்காக சேலம் கொண்டு செல்லும் வழியில் பரிதா பமாக உயிரிழந்தார்.

      இது குறித்து பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×