மயங்கி விழுந்த முதியவர் சாவு

முருகன் கோவில் பாலம் எதிரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மயங்கி விழுந்த முதியவர் சாவு
Published on

அன்னதானப்பட்டி:

சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மன்செட்டி ரோடு செல்லும் வழியில், முருகன் கோவில் பாலம் எதிரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com