search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முககவசம்"

    • கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
    • முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இனி விமான பயணங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதையொட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்திலும், முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.
    • டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அபராதம் விதிக்கும் உத்தரவை திரும்பப்பெற முடிவு எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    டெல்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி வந்த நிலையில், பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. அதை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்க வகைசெய்து உத்தரவிடப்பட்டது.

    தற்போது அங்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

    இந்த நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கூடி, பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் உத்தரவை திரும்பப்பெற முடிவு எடுத்துள்ளது. எனவே இனி அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

    ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்படவில்லை.

    • தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி அன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
    • முககவசம் அணிந்து வருவதுடன் போதிய தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்கவும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் 30 வரை ஏற்பட்ட காலியிடங்களுக்கு வரும் 9-ந் தேதி அன்று தற்செயல் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 10-க்கான வார்டு உறுப்பினர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 7-க்கான வார்டு உறுப்பினர், மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி வார்டு எண் 5-க்கான வார்டு உறுப்பினர், கண்ணனூர் கிராம ஊராட்சி வார்டு 4-க்கான வார்டு உறுப்பினர் மற்றும் காட்டாத்துறை கிராம ஊராட்சி வார்டு எண்.5 வார்டு உறுப்பினர்ஆகிய காலி பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் வரும் 9-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது.

    தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி அன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிமுதல் 6 மணி வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ள வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    தற்செயல் தேர்தலுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வருவதுடன் போதிய தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து வகையான பிரசாரங்களையும் இன்று (7-ந் தேதி) மாலை 6 மணியுடன் நிறுத்த வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் சம் பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்ட்டுள்ள பாதுகாப்பறையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்படும். வாக்குகளின் எண் ணிக்கை ஜூலை 12-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் இன்று காலை 10 மணி முதல் வாக்குபதிவு நடைபெறும் நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் செயல்படாது.

    அதுபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் 12-ந் தேதி அன்றும் செயல்படாது.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • மங்கலம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முககவசம் , கிருமிநாசினி வழங்கப்பட்டது.
    • மங்கலம் நால்ரோடு பகுதியில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் சித்தர்குரு சித்தா மருந்தகம் மற்றும் தி.மு.க. இளைஞரணி சார்பில் மங்கலம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முககவசம் , கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதனை மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லிஸியம்மாள் பெற்றுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து மங்கலம் நால்ரோடு பகுதியில் காவல்துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல்,சித்தர் குரு மருந்தக உரிமையாளர் முகமது ஹாசிம், தி.மு.க. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் முகமதுஇத்ரீஸ் , மாவட்ட பிரதிநிதி சகாபுதீன்,தி.மு.க. கட்சியின் மங்கலம் ஊராட்சி 3-வது வார்டு செயலாளர் முஜிபுர்ரகுமான், திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முகமது உசேன்,மங்கலம் சரவணக்குமார், மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரபிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10-க்கும்கீழ் வந்தது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீண்டும் ெகாரோனா பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது

    கோவை:

    கோவையில் கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10-க்கும்கீழ் வந்தது.

    இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ெகாரோனா நோய்த் தொற்று கணிசமாக உயா்ந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த மாதங்களில் ெகாரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு பின் கோவை இருந்து வந்தது.

    அதிலும், கோவை மாவட்டத்தில், மாநகரப் பகுதிகளில்தான் ெகாரோனா பாதிப்பு பெருமளவில் காணப்ப ட்டது. கடந்த 2-ந் தேதி 701 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது.

    அது மேல்ல மேல்ல உயர தொடங்கியது. நேற்று 118 பேருக்கு தொற்றுக்கு உறுதியானது. இதன் காரணமாக கோவையில் ெகாரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீண்டும் ெகாரோனா பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக, மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் படி மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படுகிறது. நேற்று மாநகராட்சி பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.6 ஆயிரத்து 700 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

    மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மால்கள் உள்ளிட்ட இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சி இதுவரை ரூ.32 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் தொற்று மேலும் கூடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
    • பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.

    கடையம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் முக கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப் வீராசமுத்திரம் கிராம பொது மக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கூறி முக கவசங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் 3-வது வார்டு உறுப்பினர் ரமேஷா, 6-வது வார்டு உறுப்பினர் பூமணி, 2-வது வார்டு உறுப்பினர் ஜமீலா ஜமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாலிக் நகர்தி.மு.க. கிளை செயலாளர் அகமது இஷாக் கலந்து கொண்டார். ஊராட்சி செயலர் பரமசிவம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி பணியாளர்கள் அமுதா, நபிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
    • நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தாக்கம் கடந்த 2 வாரமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பொது இடங்களில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ- மாணவிகள், மற்றும் என்.சி.சி.மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி ஈரோடு ஜி.எச்.ரவுண்டானாவில் தொடங்கியது. மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம், டவுன் டி.என். பி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணி மீனாட்சி சுந்தரனார் சாலை, பன்னீர்செல்வம் பார்க், கச்சேரி வீதி வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது

    இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதிமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள், காவல்துறையினர் தனிவழி அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
    • வழக்குக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும்.

    மதுரை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று (20-ந் தேதி) முதல் கோர்ட்டுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    வழக்குக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை நீதிபதி பிரகாஷ் நீதிமன்றத்தில் அறிவுறுத்தினார். மேலும் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளர் தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

    இதன்படி இன்று மதுரை ஐகோர்ட்டில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து ஐகோர்ட்டுக்கு வந்தனர்.

    நீதிமன்றத்திற்குள் வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர்.

    நீதிமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள், காவல்துறையினர் தனிவழி அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். வெளிநபர்கள், பார்வையாளர்கள், பொது மக்கள், காவல்துறையினர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்கள் முழுமையான சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர்.

    ×