search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 5 உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 9-ந்தேதி வாக்குப்பதிவு
    X

    குமரி மாவட்டத்தில் 5 உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 9-ந்தேதி வாக்குப்பதிவு

    • தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி அன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
    • முககவசம் அணிந்து வருவதுடன் போதிய தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்கவும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் 30 வரை ஏற்பட்ட காலியிடங்களுக்கு வரும் 9-ந் தேதி அன்று தற்செயல் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 10-க்கான வார்டு உறுப்பினர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 7-க்கான வார்டு உறுப்பினர், மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி வார்டு எண் 5-க்கான வார்டு உறுப்பினர், கண்ணனூர் கிராம ஊராட்சி வார்டு 4-க்கான வார்டு உறுப்பினர் மற்றும் காட்டாத்துறை கிராம ஊராட்சி வார்டு எண்.5 வார்டு உறுப்பினர்ஆகிய காலி பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் வரும் 9-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது.

    தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி அன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிமுதல் 6 மணி வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ள வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    தற்செயல் தேர்தலுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வருவதுடன் போதிய தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து வகையான பிரசாரங்களையும் இன்று (7-ந் தேதி) மாலை 6 மணியுடன் நிறுத்த வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் சம் பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்ட்டுள்ள பாதுகாப்பறையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்படும். வாக்குகளின் எண் ணிக்கை ஜூலை 12-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் இன்று காலை 10 மணி முதல் வாக்குபதிவு நடைபெறும் நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் செயல்படாது.

    அதுபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் 12-ந் தேதி அன்றும் செயல்படாது.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×