search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகள்"

    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி (பொறுப்பு) சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

    காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர். அதன்படி 54 பேருக்கு அடையாள அட்டை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

    • முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பில் 31-வது ஆண்டாக ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது. தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவிற்கு டாக்டர் சீத்தாலட்சுமி, வக்கீல் சந்திரசேகர், கவுன்சிலர்கள் குருநாதன், கார்த்திகாராணி மோகன், மீனாஆறுமுக கடவுள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலவர் குருசாமி வரவேற்றார்.

    இதில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு போர்வை, வேட்டி சேலைகளும், மாணவ- மாணவிகளுக்கு நோட்டுபுத்தங்களும் என 600 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் முனியப்பன், கேசவன், முன்னாள் கவுன்சிலர் மகாசரவணன், முருகாண்டி, ரவிக்கண்ணன், சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பங்கு பெற மாற்றுதிறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை , உள்ளிட்ட சான்றுகளின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு உதவிகள் பெற மாற்றுதிறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை , குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவையின் நகல்களை கொண்டு வந்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • திருவாரூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
    • யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை,

    தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாகன அங்காடி அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், சிற்றுண்டிகள், உணவு வகைகள், பழச்சாறு வகைகள் விற்பனை செய்திட ஏதுவாக நடமாடும் மதி அங்காடி (எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் வாகன அங்காடி அமைத்து மாற்றுத்தி றனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, நடமாடும் மதி அங்காடியை (எக்ஸ்பிரஸ்) இயக்குவதற்கும், பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யில் ஆர்வமும், முன்அனு பவமும், சுயஉதவிக்குழுவில் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஒற்றைப்பெற்றோர் ஆகியோர்கள் தொடர்புடைய சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களில் வராக்கடன் ஏதுமில்லை என்ற சான்றி தழுடன் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்று வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஒருங்கிணைந்த கட்டிடத்தில் தரைதளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
    • ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல்கள் 4 பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    23.05.2023 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையம் கூட்ட அரங்கில் (GDP HALL) நடைபெற உள்ளது.

    இம்முகாமில் தேசிய அடையாள டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடைந்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.
    • வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது. ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும், 

    • ஊத்துக்குளி வட்டார 3 ஆவது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் ஊத்துக்குளி வட்டார 3 வது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டுக்கு அச்சங்கத்தின் வட்டார அமைப்பாளா் ஆா்.மணியன் தலைமை வகித்தாா்.இதில்தமிழக அரசு மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

    விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்மாா்ட் அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை வழங்குவதுடன், முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.வீடில்லாத அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாற்றுத் திறனாளிகள் குறித்த கொள்கைகள், சட்ட முன்வரைவுகள் மற்றும் திட்டங்களை வகுப்பதை இந்த குழு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்படுகிறது. 

    இந்த ஆலோசனை வாரியத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், வெங்கடாசலம், ரவி ஆகியோர் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

    மாற்றுத் திறனாளிகள் குறித்த கொள்கைகள், சட்ட முன்வரைவுகள் மற்றும் திட்டங்களை வகுப்பதை இந்த குழு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
    ராஜபாளையத்தில் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள   முத்துராமலிங்கதேவர் திருமண மண்டபத்தில்  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 -வது பிறந்த நாளையொட்டி  ராஜபாளையம் தொகுதியில் உள்ள 300 மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.எல்.ஏ.வின் 8,9,10-வது மாத ஊதியத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 15 ஆயிரம்  மதிப்பீட்டில்  தலா ரூ.  1000- ஐ நிதி உதவியாக தங்கப்பாண்டியன்  எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்த நிகழ்வில் எம்.எல்.ஏ. பேசுகையில்,   தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் ஓயாமல் உழைத்து கொண்டிருந்தவர்   கருணாநிதி தான். அவர் வழியில் முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தமிழின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் வளர்ச்சி க்காகவும், உறுதியான நடவடிக்கை  எடுத்து அல்லும் பகலும்   உழைத்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது  பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகைபுரிந்தபோது  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின்  வளர்ச்சிக்காகவும்  முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கச்சத்தீவை மீட்க வேண்டும்,   நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக வழங்கவேண்டும்.

    பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகராக அலுவல் மொழியாகவும் உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் அறிவிக்க வேண்டும்,  நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும், மத்திய அரசின் நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என முக்கிய 5 கோரிக்கைகளை வைத்தார். இதை உலகமே வியந்து பாராட்டுகிறது.

    ராஜபாளையம் தொகுதியில் கருணாநிதி  பிறந்த நாளையொட்டி  வரும் மாதம் முழுவதும் ரூ. 50 லட்சம்  மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.  இனிவரும் சட்ட மன்ற உறுப்பினர் ஊதியத்தில் இருந்து தொகுதியில்  உயர்கல்வி  பயில இருக்கும் ஏழை, எளிய  மாணவ-மாணவியர்களில் அந்த பகுதியிலுள்ள கிளைச்செயலாளர், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்களின் பரிந்துரையின்படி 25 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து   அவர்களின்  படிப்பு செலவை முழுவதுமாக  ஏற்றுக் கொள்ள இருக்கிறேன் என்றார்.

    விழாவில் பங்கேற்ற   மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் மதிய உணவு   வழங்கப்பட்டது. 

    இந்த  நிகழ்வில் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா,  பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், ஷியாம்ராஜா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன்,  பேரூர்  செயலாளர் இளங்கோவன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது.
    ராமநாதபுரம்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் மாவட்ட  பிரிவின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. 

    போட்டிகளை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். மேலும் அவர், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

    இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 250 வீரர்கள், 100 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை டாக்டர் பரணிகுமார், விஜயசாந்தி  சார்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு  ஆகியோர் செய்திருந்தனர்.
    ×