திருவாரூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை,

தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com