மாற்றுத்திறனாளிகள் 54 பேருக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி.
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி (பொறுப்பு) சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர். அதன்படி 54 பேருக்கு அடையாள அட்டை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com