search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றம்"

    • 1980 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.
    • 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி உள்ளனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சிப்பகுதியில் சாலையை மறைத்து கட்டப்பட உள்ள மேல்நிலை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

    கருவலூர் ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 1980 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.அது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அத்தொட்டி அகற்றப்பட்டது.

    ஆனால் தற்பொழுது அதே இடத்தில் 60 ஆயிரம் லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி உள்ளனர்.பொதுமக்கள் இது குறித்து கேட்டால்முறையாக பதில் தருவதில்லை.

    எனவே அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மேல்நிலை தொட்டி கட்டுவதை மாற்றி அண்ணா நகர் தெற்கு பகுதியில் புதிதாக உள்ள காலி இடத்தில் இந்த மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின் பகிர்மான அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
    • பெரகம்பி மின் பகிர்மானம் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம், செட்டிகுளம் தெற்கு பிரிவுக்கு உட்பட்ட பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை மின் வட்ட சீரமைப்பு காரணமாக உரிய வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. இதனால் பெரகம்பி மின் பகிர்மானம் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மண்ணச்சநல்லூர் உபகோட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்தை அணுகுமாறு பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ெரயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


    திருப்பூர்:

    கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ரெயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    கோவை- ராமேஸ்வரம் (16618) வாராந்திர ரெயில், கோவை ரெயில் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

    மறுமார்கத்தில் ராமேஸ்வரம்- கோவை (16617) ரெயில், புதன்தோறும் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இரவு 8:13மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30க்கு கோவை வந்தடையும். இந்த 2 ரெயில்களும் நாளை 18-ந் தேதி முதல் சிவகங்கை ரெயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக கூடுதலாக 2 நிமிடங்கள் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதி பிளாட்பார்மில் பராமரிப்பு, மேம்பாட்டு பணி நடப்பதால் ஸ்வர்ண ஜெயந்தி, மில்லினியம் சூப்பர்பாஸ்ட் ரெயில் 4 நாட்களுக்கு சித்தூர் திருப்பதி செல்லாது.

    ஆந்திர மாநிலம், திருப்பதி ரெயில் நிலைய பிளாட்பார்மில் (2 மற்றும் 3), மேம்பாட்டு பணியை தென் மத்திய ரெயில்வே ஒரு மாதம் மேற்கொள்கிறது.இதனால், 7 ரெயில்கள் முழுமையாகவும், 12 ரெயில் பாதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் செல்லும் ஸ்வர்ண ஜெயந்தி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:12643) வருகிற 18, 25, ஆகஸ்டு 1, 8-ந் தேதி ஆகிய 4 நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும்.

    இதனால் சித்தூர், திருப்பதி நிலையங்களுக்கு ரெயில் செல்லாது. காட்பாடி - ரேணிகுண்டா வழித்தடத்தில் பயணிக்கும்.இதேபோல் எர்ணாகுளம் - நிஜாமுதீன் மில்லினியம் சூப்பர்பாஸ்ட் (எண்:12645) வருகிற 22, 29, ஆகஸ்டு 5ம் தேதி ஆகிய நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும். இதனால் சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு  ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    பாலக்காடு - திருச்சி (16844) ரெயில் தினமும் காலை 6:30 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சிரெயில் நிலையத்திற்கு மதியம் 1:32க்கும் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது தினமும் மதியம் 2மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, இரவு 8:55க்கு பாலக்காடு வந்தடையும்.

    திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ரெயில் நிலையம் இடையே தண்டவாள பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பாலக்காடு- திருச்சி (16844) ரெயில் திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி ரெயில்வே நிலையம் செல்லாது.

    மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் இயக்கம் ஆகஸ்டு 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,ஜூலை.7-

    சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை மாத மாதாந்திர பராமரிப்பு, தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால் சென்னை செல்லும் 8 ெரயில்கள் முழுமையாகவும், 4 ெரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அந்த பட்டியலின் படி தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) ஜூலை 11,18,25 மற்றும், ஆகஸ்டு 1ந் தேதி (செவ்வாய்கிழமைகளில்) ஆகிய நான்கு நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    அரக்கோணம், பெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்கு ெரயில் செல்லாது. மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து ெரயில் (எண்:12679) இயக்கம் துவங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரெயில் பயணிகள் தொடர் வலியுறுத்தலால், திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர ரெயில் (எண்:06044) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகரித்ததால் ெரயில் இயக்கம் ஆகஸ்டு 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் புறப்படும் ெரயில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, அரக்கோணம் வழியாக செல்லும். இந்தரெயிலில், 3 ஏசி., 9 படுக்கை வசதி, 5 பொது, 2 சரக்கு பெட்டி இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடமாநிலம் செல்லும் ெரெயில்பயணிகள் வசதிக்காக, ரப்திசாஹர், ஹிம்சாகர், பாட்னா உட்பட 14 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன.

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வழியாக செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கையை தெற்கு மத்திய ெரயில்வே அதிகரித்துள்ளது.

    எர்ணாகுளம் - பரூனி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஓங்கோல் - விஜயவாடா இடையே, சிரலா நிலைத்தில் 1 நிமிடம் நிற்கும்.ஸ்ரீவைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நெல்லூர் - ரேணிகுண்டா இடையே குண்டூரில் 2 நிமிடங்கள் நிற்கும்.

    எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் விஜயவாடா - வாரங்கல் இடையே கம்மம், வாரங்கல் - பெலம்பல்லி இடையே ராமகுண்டம் மற்றும் மன்சிர்யல் ஆகிய நிலையங்களில் 1 நிமிடம் நின்று செல்லும்.இவை தவிர மேலும் 11 ரெயில்கள் கூடுதலாக நின்று செல்லும் நிலையங்கள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சின்னவாடியில் பணிபுரிந்த சின்ன மூப்பன் பட்டிக்கும், பெரிய பேராளி ராம்கார்த்திக்ராஜா முத்துராமன்பட்டிக்கும், கோட்டையூர் சிவகுமார் அல்லம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அப்பையநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் ரோசல்பட்டிக்கும், சிவஞானபுரம் பாண்டிய ராஜன் விருதுநகருக்கும், புளியங்குளம் அருணகிரி கோட்டைபட்டிக்கும், ஏ.புதுப்பட்டி விவேக் கூரைக்குண்டுவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூரைக்குண்டுவில் பணியாற்றிய கருப்பசாமி ஏ.புதுப்பட்டிக்கும், கோட்டையூர் உமா கணேசன் பெரியபேராளிக்கும், விருதுநகர் ராஜூ அப்பையநாயக்கன் பட்டிக்கும், ரோசல்பட்டி சந்திரசேகர் கோட்டையூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சுதா ராணி புளியங்குளத்திற்கும், முத்துராமன்பட்டி ராஜ லட்சுமி சின்னவாடிக்கும், சின்ன மூப்பன்பட்டி செல்வி சிவஞான புரத்துக்கும் என 14 கிராம நிர்வாக அதிகாரிகள் விருதுநகர் தாலுகா அளவில் இட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

    இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

    • அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றப்பட்டு உள்ளது
    • நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல்

    பெரம்பலூர்,

    அரியலூர் மாவட்ட மின் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் நிர்வாக காரணங்களுக்காக பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் பிரிவு அலுவலகம் மற்றும் மருதையான் கோவில் பிரிவு அலுவலகம் ஆகியவற்றுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.இதன்படி மருதையான் கோவில் பிரிவு அலுவல கத்துக்கு நகரம், மங்கலம், குறிஞ்சிப்பாடி, ஆதனூர், கரம்பியம், மதுராகுடிக்காடு, பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி ஆகிய கிராமங்களும், கொளக்கா நத்தம் பிரிவு அலுவல கத்துக்கு கீழ் நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர், ஜமீன் பேரையூர், பி.கூத்தூர், பிலிமிசை, கொட்டரை, ராமலிங்கபுரம், ரகலாபாத், ஜமீன் ஆத்தூர், பாலம்பாடி ஆகிய கிராமங்களும் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன.அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றம்எனவே மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தேவைகளுக்கு கொளக்காநத்தம் பிரிவு உதவி மின் பொறியாளர் 9445853665, சிறுவாச்சூ உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் - 9445853645 மற்றும் மருதையான் கோவில் பிரிவு உதவி மின் பொறியாளர் - 9445853686, குன்னம் உபகோட்டம் செயற்ெபாறி யாளர் - 9445853648 ஆகியோைர தொடர்பு கொள்ளலாம் என மின்வாரி யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வி.ஓ.ஏ.க்கள் அதிரடி மாற்றப்பட்டுள்ளனர்.
    • தங்களது அலுவலகங்களில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வருவாய் வட்டத்தில் ஒரே இடத்தில் ஓராண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்களை பணியிடை மாற்றம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் திருச்சுழி வட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களை பொது மாறுதலில் பணியிட மாற்றம் செய்வது குறித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த

    28 -ந்தேதி அருப்புக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் பணியிைட மாற்றம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    அதனடிப்படையில் திருச்சுழி வருவாய் வட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களான கேசவன் (கீழக்கண்டமங்கலம்), பால்ச்சாமி (மாயலேரி), முத்தையா (புல்வாய்க்கரை), சரவணக்குமார் (திருச்சுழி), தென்னரசு (ஆதித்தனேந்தல்), மும்தாஜ் பேகம் (பூம்பிடாகை), சந்தன மாரியம்மாள் (சென்னிலைக்குடி), குணசுந்தரி (தேளி), கண்ணன் (உ.கிடாக்குளம்), பொன் கருப்பசாமி (வேளானூரணி), ஞானசெல்வம் (எம்.புதுக்குளம்), கார்த்திகேயன் (ரெகுநாதமடை), ராஜகுரு (எருமைக்குளம்) ஆகிய 13 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கணேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் இன்று தங்களது அலுவலகங்களில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    • மாநகர கமிஷனர் சத்யபிரியா அதிரடி

    திருச்சி, 

    சென்னை வேளச்சேரியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் திருச்சி காந்தி மார்கெட் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த பெண் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், திருச்சியில் தங்கி எம்.எஸ்.சி. கணிதம் படித்து வருவதாகவும், இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருவதாகவும், தனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறி இருந்தார். மேலும் மாமன் மகன் மீது கோட்டை அனைத்து மக்களும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது தனது செல்போனை விசாரணைக்காக அங்குள்ள அதிகாரி வாங்கி வைத்துக் கொண்டதாகவும்,மீண்டும் அந்த வழக்கு தொடர்பாக மாநகர துணை போலீஸ் கமிஷனரை சந்திக்க சென்றபோது காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்து அவரும் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை கூறினார். வேறு சில போலீசாரும் அவருக்கு உடந்தையாக இருப்பதாக கூறியிருந்தார்.இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை மாநகர போலீஸ் கமிஷனர் சத்ய பிரியா எடுத்துள்ளார்.பாலியல் புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பது காவல்து றை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது.
    • அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை இரு பாதைகளும் ஒருவழிப்பாதைகளாக மாவட்ட நிர்வாகம் சார்பாக மாற்றியமைக்கப்பட்டது,

    கோவை-மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் வாகனங்கள் காட்டேரி-குன்னூர் வழியாகவும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம்-கோவை ஈரோடு என செல்லும் வாகனங்கள் ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் வாகனங்களை கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது,

    மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடைந்த நிலையில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் கீழ்நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக உள்ளூர் வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்காமல் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசி களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • பெங்களூரு ரெயில் நிலையத்தில் புதிய சரக்கு ெரயில் முனையம் அமைக்கும் பணி நடப்பதால் உதய், இன்டர்சிட்டி ரெயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
    • மறுமார்க்கமாக 29, 30, 31-ந் தேதி பெங்களூருவுக்கு பதில் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும்.

    திருப்பூர்:

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் புதிய சரக்கு ெரயில் முனையம் அமைக்கும் பணி நடப்பதால் உதய், இன்டர்சிட்டி ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.அறிவிப்பின்படி எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678) இன்று, நாளை 29 மற்றும் 30ந்தேதி ஆகிய 3நாட்கள் சேலம் வரை மட்டும் இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர், பெங்களூரு ெரயில் நிலையங்களுக்கு செல்லாது. மறுமார்க்கமாக 29, 30, 31-ந் தேதி பெங்களூருவுக்கு பதில் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும்.

    கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) கிருஷ்ணராஜபுரம் வரை மட்டும் இயக்கப்படும்.பெங்களூரு செல்லாது. வருகிற 31-ந் தேதி, கோவை - லோகமான்யதிலக் (மும்பை) குர்லா எக்ஸ்பிரஸ் (எண்:11014) தர்மபுரி, ஓசூர், பெங்களூரு நிலையங்களுக்கு பதில், திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக ஏலங்கா நிலையம் செல்லும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது.
    • இதனால் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடப்பதாக இருந்தது.

    ஆனால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது. ஈரோடு தாலுகாவில் நடக்கும் ஜமாபந்தியில் கலெக்டரும், பிற தாலு காக்களில் மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளி ட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பது கட்டாய மாகிறது.

    இதனால் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டு அதற்கு பதிலாக வரும் 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது.

    காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறுதலும், 11.30 மணி முதல், 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தலும்,

    மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்கள் விள க்கம் அளித்தலும் நடக்க உள்ளது. விவசாயிகள் தங்களது பகுதி விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம் என அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    • மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
    • சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் ரெயில்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

    கோவை,

    கோவை மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 7 ெரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை-பாலக்காடு ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன. எனவே சொர்ணூரில் இருந்து 11-ந் தேதி காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் ெரயில் (எண் 06458), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ெரயில் (எண் 16324) ஆகியவை பாலக்காடு-கோவை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

    கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் ெரயில் (எண்.06459) கோவை-பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இது தவிர, திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு வரும் ெரயில் (எண் 16843), போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    சொர்ணூரில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 06804), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 11.05 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ெரயில் (எண் 22609) ஆகியவை பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

    கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு பாலக்காடு நகரம் புறப்பட்டுச் செல்லும் ெரயில் (எண் 06807) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×