search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி.ஏ.ஓ."

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவில் பெயர் சேர்க்கவில்லை.
    • குத்தாலிங்கத்தை கார் ஏற்றி கொலை செய்துவிடுவதாக வி.ஏ.ஓ. மிரட்டியதாக தெரிகிறது.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குத்தாலிங்கம். விவசாயி. இவர் தனது தந்தையின் பூர்வீக விவசாய நிலத்துக்கான பட்டாவில் தன் பெயரையும், தனது சகோதரர்கள் பெயரையும் சேர்க்க வேண்டி கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். மேலும் பட்டா பெறுவதற்காக ஆண்டிபட்டியை சேர்ந்த ஒருவர் மூலம் ரூ.35 ஆயிரம் லஞ்சமாக ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு தரகராக செயல்பட்ட 2 பேருக்கு மொத்தம் ரூ.6 ஆயிரமும் கொடுத்துள்ளார்.

    இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவில் பெயர் சேர்க்கவில்லை. இதுபற்றி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் குத்தாலிங்கம் புகார் அளித்தார். அதன்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி பட்டாவில் பெயர் சேர்க்கவும், அதற்காக வி.ஏ.ஓ. பெற்ற ரூ.35 ஆயிரத்தை குத்தாலிங்கத்திடம் திருப்பி ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த கிராம நிர்வாக அலுவலர், தன் மீது புகார் செய்த குத்தாலிங்கத்தை கார் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த குத்தாலிங்கம் செய்வதறியாது திகைத்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம், அவரது சக அதிகாரிகள் சமரசம் பேசினர். ஆனாலும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பட்டாவிலும் பெயர் சேர்க்கவில்லை. இதனால் விவசாயி மீண்டும் கலெக்டரை நாட முடிவு செய்துள்ளார்.

    • வி.ஓ.ஏ.க்கள் அதிரடி மாற்றப்பட்டுள்ளனர்.
    • தங்களது அலுவலகங்களில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வருவாய் வட்டத்தில் ஒரே இடத்தில் ஓராண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்களை பணியிடை மாற்றம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் திருச்சுழி வட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களை பொது மாறுதலில் பணியிட மாற்றம் செய்வது குறித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த

    28 -ந்தேதி அருப்புக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் பணியிைட மாற்றம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    அதனடிப்படையில் திருச்சுழி வருவாய் வட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களான கேசவன் (கீழக்கண்டமங்கலம்), பால்ச்சாமி (மாயலேரி), முத்தையா (புல்வாய்க்கரை), சரவணக்குமார் (திருச்சுழி), தென்னரசு (ஆதித்தனேந்தல்), மும்தாஜ் பேகம் (பூம்பிடாகை), சந்தன மாரியம்மாள் (சென்னிலைக்குடி), குணசுந்தரி (தேளி), கண்ணன் (உ.கிடாக்குளம்), பொன் கருப்பசாமி (வேளானூரணி), ஞானசெல்வம் (எம்.புதுக்குளம்), கார்த்திகேயன் (ரெகுநாதமடை), ராஜகுரு (எருமைக்குளம்) ஆகிய 13 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கணேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் இன்று தங்களது அலுவலகங்களில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    • தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடம் நான் கையெழுத்து வாங்கித் தருகிறேன் என்று கூறி இடைத்தரகர் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், தாசில்தாரின் கார் ஒட்டுநராகவும் பணியாற்றி வருபவர் நவநீதன்.

    இவர் பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு நான் கையெழுத்து வாங்கித் தருகிறேன் என்று கூறி இடைத்தரகர் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இவ்வாறு பட்டாமாறு தலுக்காக கொடுக்கப்பட்ட மனுவில் கையொப்பமிட சீமானூத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவிடம் நவநீதன் அளித்துள்ளார்.

    முறையான விசாரணை செய்யாமல் கையெழுத்திட முடியாது என கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் தொலைபேசி அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நவநீதன் தொலைபேசி மூலம் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவை தொடர்பு கொண்ட போது அவரது மனைவி தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொலை செய்து விடுவேன் என்று நவநீதன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கரலி ங்கத்திடம் புகார் செய்யப் பட்டது. அதன் பேரில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரிலும், உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கர லிங்கம் பரிந்து ரைப்படியும், உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக உதவியாளரும், தாசில்தார் வாகன ஓட்டுநருமான நவநீதனை பணியிடை நீக்கம் செய்து உசிலம்பட்டி தாசில்தார் கருப் பையா உத்தரவிட்டுள்ளார்.

    • விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விபரம் வரு மாறு:- (அடைப்புக்குறியில் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ள பகுதிகள்)

    சுதாராணி (அல்லம் பட்டி), ராஜு (விருதுநகர்), உமா கணேசன் (கோட்டைப் பட்டி), சந்திரசேகரன் (ரோசல்பட்டி), கருப்பசாமி (கூரைக்குண்டு), ராஜலட்சுமி (முத்துராமன் பட்டி), செல்வி (சின்ன மூப்பன் பட்டி), லதா (நாட்டார்மங்கலம்), சர்மிளா (கோவில் வீரார் பட்டி), ராமு கார்த்திக் ராஜா (கடம்பன்குளம்), கார்த்தி கேயன் (சீனியாபுரம்), பார்த்த சாரதி (எல்லிங்க நாயக்கன் பட்டி), விஜயகுமார் (மெட்டுக்குண்டு), சுப்பு லட்சுமி (ஆமத்தூர்), லாவண்யா (வாய்பூட்டான் பட்டி), மதன்குமார் (பெரிய பேராளி), முத்துமணி (மருளூத்து), கார்த்திகேயன் (துலுக்கப்பட்டி), பெத்துராஜ் (வலையப்பட்டி), கற்பக செல்வி (எண்டப்புளி), கதிரேசன் (செங்கோட்டை), சமயன் (அப்பைய நாயக்கன் பட்டி), பழனி (சின்ன வாடி), மாரிமுத்து (ஒண்டிப்புலி நாயக்கனூர்) ஆகிய 24 கிராம நிர்வாக அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் உடனே தற்போதுள்ள பொறுப்பி லிருந்து விடுவிக்கப்பட்டு நாளை (1-ந் தேதி) முதல் புதிய பகுதிகளில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.

    ×