search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி"

    • தஞ்சை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க ப்படும்.‌
    • தஞ்சை மாநகராட்சி வரி வசூலில் 18-வது இடத்தில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சி ஆணையராக பணியிடை மாற்றம் செய்ய ப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருந்த மகேஸ்வரி தஞ்சை மாநகரா ட்சி ஆணையராக நியமிக்க ப்பட்டார் . இன்று அவர் தஞ்சை மாநகராட்சி ஆணையராக பொறுப்பே ற்று கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியி ருப்பதாவது :-

    தஞ்சை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கி யத்துவம் கொடுக்க ப்படும். கடந்த ஆணையர் விட்டு சென்ற ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பணிகள் தொ டர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தஞ்சை மாநகராட்சி வரி வசூலில் 18 -வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 மாதங்களில் முதல் இடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க ப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சவாலை சமாளிக்க தயாராகும் திருச்சி மாநகராட்சி
    • ரூ.6 கோடி செலவில் உருவாகும் கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம்


    திருச்சி,


    திருச்சி மாநகராட்சி 163.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு நாள்தோறும் 470 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது.


    சிறந்த மாநகராட்சி


    வீடுகள், வியாபார தளங்கள், ஹோட்டல்களில் இருந்து உருவாகும் இந்த குப்பையானது வீதிக்கு வராமல், தூய்மை பணியா ளர்கள் உதவியுடன், வாக னங்களில் சேகரித்து, எடுத்துச் செல்லப்பட்டு அரியமங்கலம் குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி சீராக நடந்து வருவதன் காரணமாக தமிழக அரசால் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.


    இந்திய அளவில் 6-வது இடத்தையும் எட்ட முடிந்தது. மாநகரில் சேரும் குப்பைகளை சிறப்பாக கையாண்டு, தூய்மையை, பேணி காக்கும், மாநகராட்சி க்கு, கட்டுமான பணியின் போது உருவாகும் கழிவுகள் மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்களால் உண்டாகும் கான்கிரீட் குப்பைகளை கையாள்வது பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக கடத்த 2020-ம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் கான்கிரீட் குப்பைகளை கையாள்வதற்காக, புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.


    அதன்படி அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.6 கோடி செலவில் கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தின் மூலம் கான்கிரீட் குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி முறையில், தரைத்தள ங்களில் பதிக்கப்படும் டைல்ஸ்களாகவும், நடைபாதையில் பதிக்கப்படும் சிமெண்ட் பிளாக் கற்களாகவும் மாற்றப்படும். இதற்காக மாநகரத்தின் 4 இடங்களில் கான்கிரீட் குப்பை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டு, அங்கி ருந்து அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கான்கிரீட் குப்பை மறுசுழற்சி செய்யும் மையத்திற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.


    டைல்ஸ், சிமென்ட், பிளாக் கற்கள் தயாரிக்கிறார்கள்


    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த காங்கிரீட் குப்பைகள் நீர்நிலைகளி லும், காலி பிளாட்டுகளிலும் திருட்டுத்தனமாக கொட்டப்படுகிறது. இது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம் அமைந்தால், காங்கிரீட் குப்பைகளால் ஏற்படும் சிரமம் தவிர்க்கப்படும். மேலும் இதன் மூலம் செய்யப்படும் டைல்ஸ்கள் மற்றும் சிமெண்ட் கற்கள் மாநகராட்சி பணிக்கு பயன்படுத்தப்படுவதோடு, விற்பனையும் செய்யப்பட உள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். புதிதாக அமையவுள்ள கான்கிரீட் மறு சுழற்சி மையத்தில் நாளொன்றுக்கு 50 டன் காங்கிரீட் கழிவுகள் கையாள முடியும். ஒரு வருடத்திற்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.


    • தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.
    • மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சி கடந்த 2021-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. தற்போது 87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 70 வார்டுகளுடன் 5 மண்டலங்களாக உள்ளது. சுமார் 10 லட்சம் பொது மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியுடன் மேலும் 15 பஞ்சாயத்துக்களை இணைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்களம், பொழிச்சலூர், திரிசூலம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கை வாசல், மதுரபாக்கம், மூவரசம்பட்டு, சித்தாலப்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்கள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய உள்ளன. இதனால் தாம்பரம் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 115 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும். இந்த பஞ்சாயத்துக்கள் மண்டல அதிகாரிகள் மேற்பார்வையில் இருக்கும். இந்த புதிய பஞ்சாயத்துக்கள் இணைப்பதன் மூலம் தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும். பஞ்சாயத்துக்கள் இணைப்புக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 2027-ம் ஆண்டு வரை மண்டல அலுவலர்கள் ஊராட்சிகளை நிர்வகிப்பார்கள். ஒவ்வொரு மழையின்போது முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    இந்த இணைப்புகள் மூலம் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேலும் எடுக்க முடியும் என்றனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில், செப்.28-

    நாகர்கோவில் மாநகராட்சியில் 1-வது வார்டுக்குட்பட்ட புன்னவிளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 16-வது வார்டுக்குட்பட்ட ஹனீபா நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி. 31-வது வார்டுக்குட்பட்ட கார்மல் நகர், திருக்குடும்ப ஆலயம் டிரஸ்ட் எதிரே உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், அமல செல்வன், சோபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் தார்தளம் அமைக்கப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் 16-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், 17-வது வார்டுக்குட்பட்ட ஹரீஸ் தெருவில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், 21-வது வார்டுக்குட்பட்ட செரியன் தெரு, நடஷா தெரு, தடி டிப்போ 4-வது குறுக்கு தெரு பகுதிகளில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் தார்தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, பகவதி பெருமாள், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • செந்தூராம் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் 20-வது வார்டுக்குட்பட்ட பிருந்தாவன் காலனியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 36-வது வார்டுக்குட்பட்ட செந்தூராம் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 38-வது வார்டுக்குட்பட்ட பாரதி தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஆன்றோ ஸ்னைடா, ரமேஷ், சுப்பிரமணியம், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் அந்த குளத்தில் கலந்து வருவதால் தான் மீன்கள் செத்து மிதப்பதாக குற்றச்சாட்டு

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் பெரியகுளம் தற்பொழுது பெய்த மழை யின் காரணமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. பறவை கள் சரணாலயமாக அறிவிக் கப்பட்ட இந்த குளத்தில் தினமும் ஏராளமான வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இந்த குளத்தில் நேற்று மாலை திடீரென மீன்கள் செத்து ஒதுங்கியது. நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து பார்வை யிட்டனர். மீன்வளத்துறை அதிகாரிகளும் செத்து போன மீன்களை ஆய்வு செய்தனர். தண்ணீரில் மாசு ஏற்பட்டு ஆக்சிஜன் குறைந்த தால் மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம் என்று கூறப்படு கிறது. இதுதொடர்பாக விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் அந்த குளத்தில் கலந்து வருவதால் தான் மீன்கள் செத்து மிதப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த பிரச்சனை தொ டர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் கள். மீன்கள் குளத்தில் செத்து மிதப்பதால் துர் நாற்றம் வீசி வருகிறது. குளத்தில் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    • நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு நடத்தி முடித்தார்
    • மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு நடத்தி முடித்த நிலையில் இன்று காலை 52-வது வார்டுக்கு உட்பட்ட தெங்கம்புதூர், குளத்து விளை ஆகிய பகுதிகளில் மேயர் மகேஷ் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி நல அலுவலர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • 3 நாய் குட்டிகளை அடித்து கொன்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார்
    • குடிபோதையில் மரக்கட்டையால் தாக்கியுள்ளார்

    திருச்சி:

    திருச்சி முனிசிபல் காலனி பூசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா (வயது 32). இவர் தனது வீட்டில் நாய்கள் வளர்த்து வருகிறார். அதில் சமீபத்தில் ஒரு நாய் 6 குட்டிகளை ஈன்றது. அந்த நாய் குட்டிகள் அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் வீரா என்கிற வீரையன் (22) என்பவர் குடிபோதையில் மரக்கட்டையால் 3 நாய்க்குட்டிகளை கொடூரமாக அடித்து கொன்றார். இதுகுறித்து லதா கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து வீரையனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.அவர் மீது கோட்டை ,பாலக்கரை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாநகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பாதாள சாக்கடை திட்டப் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மதுரை, நெல்லை, தூத்துக் குடி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகள். நகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டப் பணிகள், அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள், விரிவாக் கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.

    மேலும் நெல்லை, நாகர் கோவில், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளில் குடிநீர் விநியோக பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.

    முன்னதாக அவனியா புரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் அரசு முதன்மை செயலர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஐராவத நல்லூர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பெரியார் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக பணிகளையும் பார்வையிட்டார்.

    இந்த கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையாளர்கள் பிரவீன்குமார், (மதுரை), சிவகிருஷ்ணமூர்த்தி, (நெல்லை), ஆனந்தமோகன், (நாகர்கோவில்) தினேஷ் குமார், (தூத்துக்குடி) நக ராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் முஜிபூர் ரகுமான், விஜயலட்சுமி, மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 2-வது வார்டுக்குட்பட்ட களியங்காடு, பாறையடி சாலையில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்,

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட களியங்காடு, பாறையடி சாலையில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்,

    10-வது வார்டுக்குட்பட்ட பயோனியர் தெருவில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 15-வது வார்டுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சாலையில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம்,

    23-வது வார்டுக்குட்பட்ட எஸ்.எல்.பி. தெற்கு தெருவில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 4-வது வார்டு பெருவிளை சானல்கரை சாலையில் ரு.25 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைத்தல் போன்ற பணிகள் இன்று நடைபெற்றன. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் வளர்மதி, கலாராணி, லீலாபாய், மாநகர பகுதி செயலாளர் சேக் மீரான், தி.மு.க இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், சி.டி.சுரேஷ், தொண்டர் அணி ராஜன், வட்ட செயலாளர் ராஜேஷ்குமார், ரஞ்சித், சுரேஷ், வேல்முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநகராட்சி சார்பில் 5-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் 12.30 வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 5-ந்தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. மண்டலம் 4-ல் உள்ள வார்டுகள் செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவத நல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லெட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளி வீதி, கீரைத்துறை, வில்லா புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டு பகுதி மக்கள் பங்கேற்கலாம்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    ×