நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்2-வது வார்டுக்குட்பட்ட களியங்காடு, பாறையடி சாலையில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்,
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட களியங்காடு, பாறையடி சாலையில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்,

10-வது வார்டுக்குட்பட்ட பயோனியர் தெருவில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 15-வது வார்டுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சாலையில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம்,

23-வது வார்டுக்குட்பட்ட எஸ்.எல்.பி. தெற்கு தெருவில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 4-வது வார்டு பெருவிளை சானல்கரை சாலையில் ரு.25 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைத்தல் போன்ற பணிகள் இன்று நடைபெற்றன. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் வளர்மதி, கலாராணி, லீலாபாய், மாநகர பகுதி செயலாளர் சேக் மீரான், தி.மு.க இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், சி.டி.சுரேஷ், தொண்டர் அணி ராஜன், வட்ட செயலாளர் ராஜேஷ்குமார், ரஞ்சித், சுரேஷ், வேல்முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com