குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சி சார்பில் 5-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 12.30 வரை நடக்கிறது.
குறைதீர்க்கும் முகாம்
Published on

மதுரை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி வருகிற 5-ந்தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. மண்டலம் 4-ல் உள்ள வார்டுகள் செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவத நல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லெட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளி வீதி, கீரைத்துறை, வில்லா புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டு பகுதி மக்கள் பங்கேற்கலாம்.

இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com