search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையாளம்"

    • 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    'தி கோட்ஸ் லைஃப்'என இப்படத்திற்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ப்ரித்திவிராஜ் 'நஜீப்' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் ப்ரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

    • இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது
    • பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது.

    மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் பிரேமலு படம் வெளியானது. மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். சென்னையில் இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு உருவாகியது.  உலகளவு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 100 கோடியை தாண்டியது பிரேமலு. மலையாள திரையுலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் பிரேமலு 5-வது இடத்தில் உள்ளது. இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. மலையாளத்தில் வரவேற்பை தொடர்ந்து பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் தமிழில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது
    • நடிகர் லால் தமிழில் சண்டைக்கோழி, கர்ணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்

    மலையாளத்தில் அண்மையில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் பிரபல நடிகர் லாலின் மகன் நடித்துள்ளார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் நண்பர்களின் குழுவில், சிஜு என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் லாலின் மகன் ஜீன் பால் லால் நடித்திருக்கிறார். ஜீன் பால் லால் இதுவரை தாடியுடன் தான் படங்களில் நடித்துள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்காக அவர் தாடியை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     அது மட்டுமில்லாமல், அந்த நண்பர்களின் குழுவில் சிக்சன் என்கிற பாத்திரத்தில் நடித்த நபர் லாலின் மருமகன் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது.

    மலையாளத்தில் பிரபல நடிகராக உள்ள லால் தமிழிலும் சண்டைக்கோழி, கர்ணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    • கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
    • நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.

    அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.

    மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.

    பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.

    இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .

    கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

    நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    • இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில், நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது பிரமயுகம் திரைப்படம்.

    இத்திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும், ஒலி வடிவமும் இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பிரமயுகம்.

    கடந்த பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களை முழு நீள வண்ண திரைபடங்களாவே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திரையரங்குகளில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் இப்பொழுது வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    • தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டு.
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் பாராட்டு.

    மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் "மஞ்சும்மல் பாய்ஸ்" வெற்றி பெற்றுள்ளது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

    இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மஞ்சும்மல் பாய்ஸ் சூப்பர்... அருமையான... அற்புதமான படம்.

    சிறந்த ஃபிலிம்மேக்கிங்.. ஹேட்ஸ் ஆஃப்.

    இந்த அற்புதமான திரை அனுபவத்தை தவறவிடாதீர்கள்.

    சிதம்பரம், சௌபின்ஷாஹிர், விவேக்ஹர்ஷன், பர்வாபிலிம்ஸ், சுஷின்ஷியாம், ஷைஜூகாலித் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவுக்கும் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×