search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைப்பகுதி"

    • மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

    சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.

    • உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் ரோட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.
    • யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அடர்ந்த வனப்பகுதிககுள் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் ரோட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் சத்தி-கடம்பூர் ரோட்டில் நேற்று மாலையில் யானைகள் குட்டியுடன் கூட்டமாக ரோட்டை கடந்து சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் தெரிவித்ததாவது:-யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவைகள் ரோட்டை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொ ள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றை விரட்டவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும் செல்பி, புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • திடீரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.
    • லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை-கேரள எல்லைப்பகுதியான ஆனை கட்டி மலைப்பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள், காட்டுபன்றிகள், உள்ளிட்ட பல்வேறு வனவி லங்குகளும், பல்வேறு பறவைகளும் உள்ளன.

    இவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்குள் இருந்து வெளியேறி, மலைப்பாதையில் சுற்றி திரிவது வழக்கம்.

    எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகையும் வைத்து உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆனைகட்டி மலைப்பாதையில் டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீ ரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.

    பின்னர் அந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து, மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றன.

    காட்டெருமைகள் சாலையை கடக்க முயற்சிப் பதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார்.

    ஆனால் அதற்குள்ளாகவே லாரி காட்டெருமைகள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஒரு காட்டெருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டெருமை காயத்துடன் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை முடிவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×